தொடர் நாடகம்: மதமாற்றம்!

ஐஸ்கிறீம் பார்லரில் காதலர்கள்மதமாற்றம் - அறிஞர் அ.ந.கந்தசாமி -[ ஈழத்துத்தமிழ் நாடக உலகைப்பற்றி எழுதும் எவரும் அறிஞர் அ.நகந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தை மறக்க முடியாது. 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம் மட்டுமல்ல , அதன் கூறு பொருள் காரணமாகப் பலத்த சர்ச்சைக்குமுள்ளாகிய நாடகமும் கூட. எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், சங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நாடகத்தைப்பற்றி நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறியிருப்பார்: “சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர்.  இதுவே கதையின் கருவானபோதும் ‘மதம்’, ‘காதல்’ என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். ‘மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.’ – கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார்.”
.
‘மதமாற்றம்’ நாடகத்தைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரிக்க முடிவு செய்திருக்கின்றோம்.
அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’. மேலதிகள் விபரங்கள் இங்கே. – பதிவுகள் -]


காட்சி 1

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம். மானிப்பாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெரிய அரசாங்க உத்தியோகத்தர் வீடு. சைவ மணமும், கொழும்பின் நவநாகரீக மணமும் வீசும் ‘ட்றாயிங் றூம்’, சுவரிலே தலைப்பாகை கட்டிய ஒருவரின் படம். வீட்டுச் சொந்தக்காரரின் தகப்பனாயிருக்கலாம். ஆனால் அந்தத் தலைப்பாகைக்காரரிலும் பார்க்கச் சபையைக்கவர்வது பெரிய பிள்ளையார் படமும், அதற்குப் பக்கத்தில் விடையேறிய சிவபிரானின் படமுமாகும்.  சரசுவதி படமும், இலட்சுமி படமும் கூடக் காணப்படுகின்றன.

சிறிது முன்னே மேடையின் முன்புறத்தில் ஒரு ‘ட்றாயிங் ரூம் செட். ரேடியோவில் மெல்லிய வாத்திய சங்கீதம் இசைக்கிறது. ‘ட்றாயிங் ரூம் செட்டிற்கு’ அருகாமையில் சிறிய எழுதும் மேசை. அதற்கு முன் ஒரு நாற்காலி. இவை தவிர பெரிய பித்தளைப்பூச்சட்டிகளைத் தாங்கிய இரு உயர்ந்த ‘ஸ்ராண்டு’கள் பொருத்தமான இடங்களில் இருக்கின்றன.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 5(1)

டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.-டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.

1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.
2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.

ஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.

டேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு?

இறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா…  -நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு- என்றார்.

Continue Reading →