வாசிப்பும், யோசிப்பும் 159: கனடாவின் முதலாவது தமிழ்க்கவிதை நூலெது?

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவின் முதல் தமிழ் நாவலாக வெளிவந்த ஆக்கம் எனது ‘மண்ணின் குரல்’ இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் ‘மண்ணின் குரல்’ நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். இந்நூல் 87 தை மாதம் வெளியானது. அந்த வகையில் கனடாவில் வெளியான முதலாவது கவிதை நூலாகவும் இதனை ஒருவிதத்தில் கொள்ளலாமோ?

சுதா குமாரசாமியின் ‘முடிவில் ஓர் ஆரம்பம்’ கவிதைத்தொகுப்பும் றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அது வெளிவந்த ஆண்டு சரியாகத்தெரியவில்லை. 87ற்கு முன் வெளிவந்திருந்தால் அதனையே முதலாவது கவிதைத்தொகுதியாகக் கருதலாம். முகநூலில் இக்கவிதைத்தொகுப்பினைப்பற்றிச்சுட்டிக் காட்டியிருந்தார் நண்பர் கனடா மூர்த்தி. அவருக்கு நன்றி.

‘மண்ணின் குரல்’ றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டது. இதிலுள்ள கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ‘மண்ணின் குரல்’ நாவல் ஆகியன ‘புரட்சிப்பாதை’ (மான்ரியால்) கையெழுத்துச் சஞ்சிகையில் 84/95 காலப்பகுதியில் வெளியாகிய படைப்புகள். அக்காலத்து என் உணர்வுகளைப்பிரதிபலிப்பவை. அன்றுள்ள என் அறிவு மட்டத்திற்கேற்ப சில சொற்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் மண்ணின் குரல். அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு…
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 158 : கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்…; பள்ளிக்கூடமா? பல்கலைக்கழகமா?

வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா!'

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

1. கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்….

முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் ‘கனடாவில் தமிழ் இலக்கியம்’ என்னும் கட்டுரையில் கனடாவில் வெளியான கவிதை நூல்களைப்பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அது வருமாறு:

“கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய  ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ ஆகும்.  இது 1990இல் வெளிவந்தது.  இதனையடுத்து கெளரி என்பாரின் ‘அகதி’ என்ற நெடுங்கவிதை நூலும், அ.கந்தசாமி , மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான ‘காலத்தின் பதிவுகள்’ என்ற தொகுதி 1991இலும், ஆனந்தபிரசாத் என்பாரின் ‘சுயதரிசனம்’ என்ற தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில் என்.கே.மகாலிங்கம் அவர்களின் ‘உள்ளொளி’ (1993), அ.கந்தசாமி அவர்களின் ‘கானல் நீர்க்கனவுகள்’ (1994), நிலா குகதாசன் அவர்களின் ‘இன்னொரு நாளில் உயிர்த்தேன்’ (1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.  இத்தகவல்களைத் தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு.ப.ஶ்ரீஸ்கந்தன் ஆகியோராவார்.”

சேரனின் கவிதைத்தொகுதியான ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.

Continue Reading →