எளிய மனிதர்களின் தன்முனைப்பு நடவடிக்கைகள்! ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து ..

சுப்ரபாரதிமணியன்பச்சைப் பசுங்கோயில் –இன்பப்
பண்ணை மலைநாடு
இச்சைக்குகந்த நிலம்- என்
இதயம் போன்ற நிலம்
– சுத்தானந்த பாரதியார் –

அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.

ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து  விட்டுக்  கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன். அம்மாவைத் தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.

இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த  அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது.      முதல் நாவலில்  ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.  ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு என , தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். அவளைக் கண்டடைகிறான்.  ” அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல”நாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,,அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.

Continue Reading →

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும்…

Continue Reading →

பத்தி 8: இணையவெளியில் படித்தவை

சார்வாகனின் சிறுகதை “கனவுக் கதை”

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!

சத்யானந்தன்

சார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்தும் போது கூட ஒரு எழுத்தாளர் வாசிக்கப் படவில்லையென்றால் அவர் கவனம் பெறவில்லை என்னும் அஞ்சலி ஆதங்கமும் பொருளற்றுப் போகிறது இல்லையா?

இந்த இடத்தில் நாம் ஆளுமை வழி வாசிக்கும் மனப்பாங்கினால் மட்டுமே சார்வாகன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளைப் பற்றி அறியாமல் போகிறோம் என்பதைப் பற்றியும்  வேண்டும். ஒரு ஆளுமை கவனிக்கப்படுவது தம்மை கவனப்படுத்த முயற்சி எடுப்பது இவை எழுதப்படாத விதிகளாக ஆகி விட்டன. எழுதும் எந்த ஒரு படைப்பாளியின் தடமும் முயற்சிகளால் ஆன ஒரு சங்கிலியே. அதன் ஒரு கண்ணி தங்கமாகவும் மற்றொன்று பித்தளையாகவும் பிறிதொன்று இரும்பாகவும் இருக்கலாம். ஒரு படைப்பின் வெற்றி அதைப்படித்த பின் நம்முள் தொடரும் சிந்தனையின் சரட்டிலேயே வெளிப்படுகிறது.

தான் பார்த்த ஒன்றை, தம்மை பாதித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் எளிய முயற்சி தான் எழுத்து என்பது மிகவும் எளிமையான புரிதல். தனது சிந்தனை மற்றும் கற்பனையின் பொறி ஒன்றின் வழி வாசகனை ஒரு ஆழ்ந்த தரிசனத்துக்கு இட்டுச் செல்லும் இலக்கியமாக்கும் முயற்சிதான் எழுத்து. புதிய தரிசனத்துக்கு ஆழ்ந்த புரிதலுக்கு தீவிரமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு படைப்பு வாசித்து முடித்தவுடன் நம்முள் இயங்குகிறது. வாசிக்கும் போது படைப்பாளி தென்படுவதில்லை. வாசித்த பின் படைப்பும் தென்படாமல் அது முன் வைத்த தரிசனமே நம்முள் தொடர் சிந்தனையில் இயங்குகிறது.

Continue Reading →