சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியவர் நடராஜா முரளிதரன்.
‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் – சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு.…
அண்மையில் மறைந்த கமலநாதன்தான் ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?’ பாடலை இயற்றிய விடயமே பலருக்கும் அவரது மறைவுக்குப்பின்னர்தான் தெரிய வந்து வியப்பினை ஏற்படுத்தியது. பலரும் இதனை நித்தி கனகரத்தினமே எழுதியதாக நினைத்திருந்தார்கள். நானும் அவ்விதமே எண்ணியிருந்தேன். இது பற்றி வானொலி நிலையமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் நித்தி கனகரத்தினம் அளித்த விளக்கத்தில் தனக்கு இப்பாடலை எழுதியவர் கமலநாதனே என்ற விடயம் 2001இல் தான் தெரிய வந்தது என்று கூறியிருக்கின்றார். அதே சமயம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடலுக்கு அவரைக்குறிப்பிடுவதுபோல், இந்தப்பாடலையும் தான் இசைமைத்து, மெருகூட்டிப்பாடிப் புகழடைய வைத்ததால் தனக்குத்தான் அந்தப்பெருமை இருக்க வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தொன்றினையும் உதிர்த்துள்ளார். அந்த வானொலி நேர்காணலுக்கான இணைப்பினை எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அறியத்தந்திருந்தார். நன்றி திரு. முருகபூபதி அவர்களுக்கு.
http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/chinna-maamiye-controversy
ஒரு பாடலின் இசைக்கு இளையராஜா பொறுப்பாக இருந்தாலும், அதற்குரிய பாடலை எழுதியவரின் பெயரை அவர் மறைப்பதில்லையே. அது போல் இந்தச் ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடலை இசையமைத்துப்பாடிப் புகழடைய வைத்தவர் நித்தி என்றாலும், அப்பாடலை எழுதிய பாடலாசிரியரான அமரர் கமலநாதனின் பெயர் உரிய முறையில் குறிப்பிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
2001ஆம் ஆண்டிலிருந்து நித்தி கனகரத்தினத்துக்குத் தெரிந்திருப்பதால், அதன் பிறகு நடைபெற்ற நித்தியின் நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் கமலநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டு , நிகழ்ச்சிகளில் உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டு, . அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.