“ மனிதர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யும் போது இலக்கியம் சரக்காகப் போகும் இந்த உலகம் நாசமாகப் போகட்டும் “ புயேந்தியா வம்சத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது. 100 வருடங்களாக அலைந்து திரிகிறவன் நடப்பியலை எழுதி வைக்கிறான். அது லத்தீன் மொழிப் புத்தகமாக இருக்கிறது. கடைசித்தலைமுறை வெளியிலிருந்து வந்தவன் குடும்பத்தின் வரலாற்றை எழுதியிருப்பதைச் சொல்கிறான். திரைப்படம் என்ற தொழில் நுட்பத்தைக் கூட யதார்த்தம் அற்ற கற்பிதங்கள் நிறைந்ததாக கண்டு நிராகரிக்கிற அவர்களின் இலக்கியம் குறித்த வாக்குமூலம் முக்கியமானதே.
மகோந்தா எனும் சிற்றூரின் வரலாற்றுக் கதை இந்தநாவல்.. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர். புயேந்தியா என்பவரின் தலைமையிலான ஒரு குடும்பம்.. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் வாழ்க்கை விரிகிறது. தனிமை படுத்தப்பட்ட உலகம் . அந்த ஊருக்கு அவ்வப்போது வந்து போகும் நாடோடிகள், புதிய விசயங்களைக் கொண்டு வருகிறார்கள்.. . புயெந்தியாவுக்கு புதியவை மீது ஆர்வம் அதிகம். அவருக்கு பனிக்கட்டி தொலைனோக்கிக் கருவிகள் அறிமுகமாகின்றன. புதியவை பற்றி தங்கள் தனிமைமீறி ஈடுபாடுகொள்பவர்களாக அவரின் குடும்பத்தினர் அமைகின்றனர்..மெல்ல. பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடாகிறது. . மகோந்தோவில் உள் நாட்டுக்கலவரங்களும் தொடர்ந்த மரணங்களும் நிகழ்கின்றன..ஆட்சி மாற்றங்கள் …அக்குடும்பத்தினைச் சார்ந்த மூர்க்கமான ஒருவர் ஒருவர் சர்வாதிகாரியாகிறார். மரண தண்டனையில் சாகிறார்.. அடுத்து வரும் மேயர் ஒருவரும் கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடுக்குப் போகிறார்கள். தவிர்க்க இயலாத , தவிர்க்க முடியாத வகையில் வரலாற்றின் தொடர்ச்சியாக வாழும் ஆர்லினோ மக்கள் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புயேஃதியா குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் வாழ்வும் வீழ்ச்சியும் மகோந்தா என்ற புனைவு நகரக் கட்டமைபோடு விவரிக்கப்பட்டிருக்கிறதுலத்தின் அமெரிக்காவின் கலாச்சார அம்சங்கள் நாவலின் எடுத்துரைப்பில் பிண்ணிப்பிணைந்துள்ளன.காலம் ஒரு வட்டமாய் சுழன்று பழைய அம்சங்களை நிர்மூலமாக்கி நிற்கிறது