மூவரைத்தாண்டி மேலைத்தேய மெய்யியல் நகராது.
1. சோக்கிரட்டீஸ்
2. பிளேட்டோ
3. அரிஸ்ரோற்றில்
1) சோக்கிரட்டீஸ்.
இவர் ஒரு பிரசங்கி. இவர் ஒரு நூலையும் எழுதவில்லை. இவரது சீடன் பிளேட்டோ. இவர் சொன்னதாக பிளேட்டோ எழுதியவைகளே இவரது தத்துவம். இவருக்கு என்ன தெரியும் என்று இவரைக் கேட்டபொழுது –எனக்கொன்றும் தெரியாது என்று எனக்குத் தெரியும்- என்று பதிலிறுத்தார்.
அதாவது தெரிந்தவற்றுக்கும் தெரியாதவற்றும் எப்படி ஒரு எல்லையை வகுக்கமுடியும் என்று கேட்டார். அறிவின் வரையறை என்ன? அதன் எல்லை என்ன? ஏன் என்று கேள் என்றார். உன்னை அறி என்றார். ஒரு பொழுதேனும் அவர் தான் சொன்னதிலிருந்து பின் வாங்கவில்லை. தப்புவதற்கு ஏகப்பட்ட வழியிருந்தும் அவர் தப்பவில்லை. நஞ்சைத் தானுண்டார். இறந்து போனார்.
நீதி பற்றி இவர் சொன்னவைகள் ஏராளம். நீதி பற்றித் தெரியாத ஒருவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியாகுமா என்றும் கேட்டார்.