முன்னுரை
தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள் விரவிக் கிடக்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்நிலையைக் கண்டு பெருமைப்படுகின்றோம். அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு, நீர்நிலைகள், காற்று மண்டலம் அனைத்தும் மாசுபட்டு காணப்படுகின்றது.
இம்மாசினைக் கண்டு சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வைகைச் செல்வியின் ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சூழலோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளைப் பார்ப்போம்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. சுற்றுச்சூழலில் நீர் ஒரு முக்கிய அங்கம். மனிதன் இருக்கும் வரை நீரின் தேவை அவசியம். அதனைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது சமூகத்தின் கடமை, நாகரிகம் வளராத காலத்தில் நீர்நிலைகள் தூய்மையாக இருந்தன. இன்று நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையைத் தொட்டு விட்டது. நீர்நிலைகள் நரகமாகக் காட்சியளிக்கின்றன. தொழில் வளர்ச்சி என்ற புரட்சியால் நதிகளின் நிலைமாறியதைக் கவிஞர் வைரமுத்து,