கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில…
எமது ஈலாப் [ELAB] மூத்த எழுத்தாளர் சங்கத்தின் இன்றைய இணைப்பாளர் கா.வி.யின் மேற்படி நூல் அண்மையில் அவரின் விஜய் வெளியீட்டகத்தால் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் உதவியுடனும் ஈலாப்பின் ஆசீர்வாதத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்களில் வரும் 70 கதாநாயகிகளைப் பற்றி ஆழ்ந்து சுழியோடிப் பெற்ற தன் முத்தான கருத்துக்களை நூலாசிரியர் ஒளிபாய்ச்சி உலகிற்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் நம்ஆசிரியர் அந்த 70 கதாநாயகிகளின் திருநாமங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்நூலின் பின்அட்டையில் வரிசையாக அச்சிட்டும் இருக்கிறார்.
இக் காவிய அரிவையரின் அணிவகுப்பில் கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரதக் கதை-மகளிரில் தொடங்கி குண்டலகேசி, பத்தாதீசா, மாதிரி என்னும் எழுபதின்மர் இடம்பிடித்துப் பிரகாசிக்கின்றனர்.
ஆசிரியர் தன் கோதையரைத் தேடிக் கண்டுபிடித்த முக்கிய இலக்கியப் பெட்டகங்களாவன: முன்கூறிய மகாபாரதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் ஆகும். அவற்றுள் 53 பேரையும், அதன் பின், தமிழர் வரலாற்றில் நிலைத்து மினுங்கிய பெண்-புலவர்களாகிய ஒளவையார், ஒக்கார் மாசாந்தியார் முதல்… வெறிபாடிய காமக்கண்ணியர் வரை… மிகுதி 17 பேரையும் எம் ஆசிரியர், விதைகளை மணந்து சென்று பொறுக்கித் தேர்ந்தெடுக்கும் ஓர் அணிலைப் போல் பொறுக்கி எடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.
‘பதிவுகள்’ வாசகர்களுடன் மகிழ்ச்சிகரமான செய்தியொன்றினை பகிர்ந்துகொள்கின்றோம். வ.ந.கிரிதரனின் நாவலான ‘குடிவரவாளன்’ தமிழகத்தில் மார்ச் 1, 2016 அன்று விற்பனைக்கு வருகின்றது. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரும் இந்த நாவலினைப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் திரு. வதிலைப்பிரபா, ஓவியா பதிப்பகம் அவர்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
ஓவியா பதிப்பக விபரங்கள்: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua – 642 202 Tamil Nadu, India
Phone: 04543 – 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com
இந்நாவல் வ.ந.கிரிதரனின் ஆறாவது நாவலாகும். இதுவரை வெளியானவை:
1. மண்ணின் குரல் (1987) – கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். புரட்சிப்பாதை (மான்ரியால்) கையெழுத்துச்சஞ்சிகையில் 84.85 காலப்பகுதியில் தொடராக வெளிவந்து , மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் நூலாக வெளிவந்தது.
2. கணங்களும், குணங்களும் – தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக ‘மண்ணின் குரல்’ என்னும் பெயரில் வெளியான நான்கு நாவல்களின் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள நாவல்களிலொன்று. தொடராக வெளியானபோது ‘மணிவாணன்’ என்னும் பெயரில் வெளியானது.
3. அருச்சுனனின் தேடலும்! அகலிகையின் காதலும்! – தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
4. வன்னி மண்! – தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
5. அமெரிக்கா. – தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
6. குடிவரவாளன். – பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளிவந்து தற்போது தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது. தொடராக வெளியானபோது ‘அமெரிக்கா 2’, ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்னும் பெயர்களில் வெளியாகிப்பின்னர் ‘குடிவரவாளன்’ என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவலிது.