தொல்காப்பியர் அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும். தொல் – கா – பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கௌ;ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280 ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம்.
தொல்காப்பியத்தின் காலம்
தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கிமு 10,000; ஆண்டிற்கு பலகாலத்திற முற்பட்டது என்றும,. பொள்ளாச்சி மகாலிங்கம் கிமு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கிமு 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கிபி இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்காப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞாகளால் ஏற்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
பல கவிஞர்களின் மரபுக் கவிதைகள் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன. கனடாவில் மரபுக் கவிதையை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போது எனக்குள் அந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வத்தை விதைத்தவர் எனது தொடக்க காலத்தில் தலைவராக இருந்த கவிஞர் கந்தவனமாகும். இதைப்பற்றி நான் அதிபர் பொ. கனகசபாபதி அவர்ளுடன் கதைத்த போது பண்டிதர் ம.செ. அலக்ஸாந்தர் அவர்களும் மரபுக்கவிதையில் சிறந்தவர் என்ற பரிந்துரையைத் தந்தார். எனது தேடலில் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் பெயர் இடம் பெற்றாலும் போக்குவரத்து வசதியீனம் காரணமாக அதைத் தவிர்த்திருந்தேன். எனவே ஒரு நாள் அதிபரின் வீட்டில சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினேன். அந்த சந்திப்பு பற்றி கவிச்சரம் என்ற இதழில் அவர் அதைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ கவிச்சரம் இதழில் உள்ள பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தரின் குறிப்பில் இருந்து:
‘அந்த வகுப்பு இங்குள்ள கல்விமான்களும், தமிழார்வலர்களும், கவிஞர்களும், புதுக்கவிதைக் கவிஞர்களும் சேர்ந்த வகுப்பாக அமையவேண்டுமென மகாஜனக்கல்லூரி முன்னைநாள் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களின் வீட்டிலே அப்போதைய கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலாளர் குரு அரவிந்தன் (2004) என்னைக் கேட்டார். அப்போதைய தலைவர் திருவாளர் சின்னையா சிவநேசன், கல்வியாளர் அ.பொ. செல்லையா, கவிஞர் இராசேந்திரம், திரு. சிவபாலு ஆசிரியர், பகிரதன், சண்முகராஜா போன்றோரும் கவிஞர் கந்தவனத்தையும், என்னையும் அழைத்துக் கேட்டதற்கிணங்க ஸ்காபுரோ சிவிக் சென்ரறில் கலந்துரையாடல் வகுப்பாகத் தொடங்கியது.’
நூல் அறிமுகம் 1: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை! — வெலிகம ரிம்ஸா முஹம்மத்
சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.
கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.
அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.
மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.
சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்பகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைப் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யபடுகிறது.
பாண்டியர்:
“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“———–வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த” (புறம்-9)
என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது. பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை
“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றுஇது விறல்மாண் குடுமி!”(புறம்-12) ல் குறிப்பிடப்படுகிறது.
அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல் மலரில் நான் எழுதிய. ‘கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்’ என்ற தலைப்பிலான கட்டுரை தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட பதிவுகளை வாசித்தேன்.
எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள். தங்களது அம்மதிப்பீடு எனக்கு மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும் நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். விடுபட்டமுக்கிய தகவல்களையும் பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள். அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும் நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும் உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது.
’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர் இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’ என்பதை உணர்த்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம். அவ்வாறான வரலாற்றுப்போக்கினை அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய அம்சங்களை மையப்படுத்தியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.
கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் “யாவரும் கேளிர்” என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூகசெயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.
எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.
ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’, ‘நடந்தாய் ஆறு வழுக்கியாறு!’ மற்றும் ‘கொத்தியின் காதல்’ ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.
இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.