கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்துவிட்டது.
காலந்தோறும் மரபு வழிச் சாதனங்களால் பேச்சு வழக்கில் செய்தி பரிமாற்றம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு இசைச் சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுபட்டு புதிய தொழில் நுட்பங்களாகிய தகவல் தொடா்பு வளா்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல் தொடார் புச் சாதனங்கள், மின் வழிச் சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், அச்சு வழிச் சாதனங்கள், மின் இதழ்கள் போன்றவை மேம்படுத்தி வருகின்றன. புதுப்புதுக் கோணங்களில் தகவல் தொடா்பினை மின்னணுச் சாதனங்களான ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்களைக் குறிப்பிடுகின்றனா். களப்பணியைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கருவிகள் தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.