நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.
என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு சித்தன் என பெயரிட்டிருந்தது.
என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும் கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை என்னுடைய கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. சிலவற்றின் சன்மானம் என்னை அடைந்தும் பலவற்றின் சன்மானம் இன்னும் வந்தடையாமலுமுள்ள நிலை. நான் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.நான் அதை எடிட்டர்கள் நல்வாழ்வுக்கு என தியாகம் செய்துவிடுவேன்.
அவ்வப்போது நான் பாடுவது உண்டு.எனக்கு வீணையும் வாசிக்க தெரியும்.இதனால் எனக்கு ஒரு சில வயதான ரசிகர்கள் உள்ளனர். நான் வெகுதூர பயணத்தில் இருக்கும்போது சாலையின் ஓரத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் நின்றுகொண்டே.சில்லறைகள் பல கொட்டும்.நோட்டுகள் சில விழும்.இது நான் எழுதி சம்பாதித்ததைவிட அதிகமாக இருந்தது.
நானும் மனிதன் தானே என நிருபிக்க ஒரு பெண்ணை காதலித்தேன்.அவள் பெயர் மாதவி.அவளுக்கு இப்போது இரு ஆண் குழந்தைகள்.நிச்சயம் நான் ஒரு துரதிருஷ்டசாலி.என் காதலியின் கல்யாணம் என் மனதின் முன்பே நடந்தேறியது.அன்றிலிருந்து தெரிந்தது நான் மனிதன் அல்ல.நாம் சிரிப்பதும்,சந்தோஷப்படுவது வீண் என.அவளின் கல்யாண நாளில் இருந்தே நான் என் மகிழ்ச்சியுடன் விவகாரத்து பெற்றிருந்தேன்.
வரவர என் தொழிலும் வீழ்ச்சி தான்.அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்து உங்கள் படைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றே பதில் வந்தது.வேறு வழியில்லாமல் சிற்றிதழ்களுக்கு அனுப்பி பார்த்தேன்.ஒன்றும் நடக்கவில்லை.அவர்கள் அனைவரும் பெயர் பிரபலமானதா என்று பார்த்தார்களே ஒழிய படைப்பை பார்க்கவில்லை.
தரமான இலக்கியம் பிரசுரமான காலம் போய் நவீனத்துவம் என்ற பெயரின் பெயரில் நகைச்சுவை இலக்கியமும்,தனிநபர் விமர்சனமும் பத்திரிக்கைகளை கோலோச்சின.எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுத தெரியாது.எனக்கு தெரிந்தது எல்லாம் ஜெயகாந்தனும்,நகுலனும்,பிரமிளும்,மெளனியும்,சுந்தர ராமசாமியும் ,ஆத்மாநாமும் தான்.இதனால் என்னவோ என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்டது என்றே எனக்கு பொருள்கொள்ள தோன்றியது.
ஜெயந்தி சங்கரின் சிறுகதை கடத்தல்காரன் – நவீனத்துவத்தின் நுட்பம்
யதார்த்தவாதம் என்னும் புனைவு மற்றும் வாசிப்பு இன்றும் இருப்பதே. நவீனத்துவம் அதன் மாற்றாக அதை அனுப்பி விட்டு வந்ததல்ல. நவீனத்துவம் வாசகரின் வாசிப்பும் புரிதலும் செறிவு பெற்றதன் அடையாளம்.. இன்று படைப்பாளிகளுக்கு யதார்த்த நவீனப் புனைவு இரண்டுமே உள்ளடக்கம் அல்லது மையக்கருவை ஒட்டி பாங்காகப் பயன்படுகின்றன.
ஒரு பிரதிக்குள் என்ன வர வேண்டும் என்பது ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வு. அவர் சிந்தனையைத் தூண்டும், மனமாற்றத்தை வேண்டும் ஒரு கருத்தை முன் வைக்கலாம். அது அவர் மனதில் தீவிரமாகப் படும் ஒன்றை அவர் வாசகருடன் பகிர்வது இயல்பானதே. அது பிரசாரமாக இல்லாமல் கலையாக நுட்பமாக வெளிப்படும் போது இலக்கியத்துக்கு அணி சேர்க்கும் பங்களிப்பாகிறது.
முதலில் ‘கடத்தல்காரன்’ சிறுகதையை வாசிப்போம். அதற்கான இணைப்பு — இது.
முதல் வாசிப்பில் நாம் இதை என்னவாகக் காண்கிறோம்? கதை சிங்கப்பூரில் நடப்பதை நாம் ரயில் பயணத்தின் ஊடேயும் மற்றும் உரையாடல்கள் வழியும் அறிகிறோம். இல்லையா? சீன முதியவர் பலரிடமும் மிகவும் அடக்கமான குரலில் மெலிதாகக் கேட்டது என்ன என்பதும் நமக்குத் தெரியும். அதை ஏன் மெலிதான குரலில் கேட்டார் என்பதும். சிங்கப்பூரில் பிச்சை எடுப்பது சட்டரீதியாகக் கடுமையாகத் தடை செய்யப்பட்டது. பிச்சை போட்டவரும் விதிவிலக்கல்ல. தண்டனை உண்டு. பலரிடமும் கேட்டவர், மலாய், சீன, தமிழ் பயணிகளிடம் அவர் பாரபட்சமின்றிக் கேட்கிறார். இறுதியில் ஒரு தமிழ்ப் பயணி பயந்து பயந்து ஆனால் தவறாமல் தந்து செல்கிறார். இதற்குப் பிறகு நாம் கதையின் தலைப்பைப் படிக்கிறோம். கடத்தல்காரன். யார் கடத்தினார்? எதைக் கடத்தினார்? கடத்தல் என்பது என்ன? ஒரு ஊரில் கிடைக்க அரிதான ஒன்றை, வேறு ஊரிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டு வருவது இல்லையா? சிங்கப்பூரில் சட்டம் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காத பாரம்பரியம் இருக்கும் போது தமிழ் ஆள் அங்கே தமது ஊர்க் கலாச்சாரமான பிச்சை போடுவதைக் கடத்தி விட்டார்.
கதையின் மிகப்பெரிய பலம் தலைப்பு கதையின் மீது வைக்கப்பட்ட ஒரு திலகம் போலில்லாமல் கதையின் முக்கியமான அங்கமாக கதாசிரியர் தம் பதிவைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிற முக்கியமான பதப் பிரயோகமாக வந்திருப்பது கவிதைகளில் மட்டுமே காணப்படுவது. சிறுகதைகளில் அபூர்வமாகவே கிடைப்பது. மிகவும் பாராட்டத்தக்கது.