வாசிப்பும், யோசிப்பும் 165: ஹைக்கூக் கவிதைகள் பற்றியதொரு ‘ஹைக்கூ’ப் புத்தகம்!

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள். கவிதையுலகில் ஹைக்கூக்களும் கடுகைப்போலிருந்தாலும், வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தில் மிகவும் வலிமையானவை.

ஹைக்கு வகைக்கவிதைகளை இயற்ற விரும்புபவர்கள், இவ்வகைக்கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் எனப்பல்வகைக் கவிதைப்பிரியர்களுக்கும் உறுதுணையாகவிருந்து வழிகாட்டும் நல்லதொரு வழிகாட்டிதான் Haiku in English‘ (ஆங்கிலத்தில் ஹைக்கூ) என்னும் கைக்கடக்கமான இச்சிறு நூலும். இதனை எழுதியவர் ஹரோல்ட் ஜி. ஹென்டெர்சன் ( Hraold G.Henderson. இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள் இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள்: Charles E. Tuttle Co.

நூல் அறிமுகக் குறிப்பு, ஜப்பானியக் ஹைக்கு, ஆங்கிலத்தில் ஹைக்கூ, ஹைக்கூவை எழுதுதலும்,  கற்பித்தலும், அநுபந்தம் ஆகிய பிரிவுகளாக விளங்குகின்றது.

ஹைக்கூவானது ஜப்பானியர்களால் பல நூறு வருடங்களாகப் பாவிக்கப்பட்டுவரும் கவிதை வடிவம். தமிழில் திருக்குறள் ஈரடிகளில் , குறள் வெண்பாவாக , ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்திருப்பதுபோல் , ஜப்பானியக் ஹைக்கூவும் மூன்று அடிகளில் , சில கட்டுப்பாடுகளுக்கு அமைய எழுதப்படும் குறுங்கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதையின் பொதுவான அம்சங்களாக அல்லது விதிகளாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. மூன்று அடிகளில் 17 அசைகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். முதல் அடியில் 5 அசைகளையும், இரண்டாவது அடியில் 7 அசைகளையும், மூன்றாவது அடியில் 5 அசைகளையும் கொண்டதாக ஜப்பானியக் ஹைக்கூ இருக்க வேண்டும்.

2. ஹைக்கூவானது இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் (event) பற்றியதாக இருக்க வேண்டும்.

4. அந்தச் சம்பவமானது நிகழ்காலத்தில் நடப்பதாக நிச்சயம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடப்பதாக இருக்கக்கூடாது.

Continue Reading →