மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 8

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.

ஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற். சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.

இருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.

1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)
2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)

இதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள் டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும்.

Continue Reading →