வாசிப்பும், யோசிப்பும் 166: முனைவர் தாரணியும், புகலிடத்தமிழ் இலக்கியமும்…

Dr. R. Dharaniமுனைவர் ஆர் .தாரணி (Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D) அவர்களை எனக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தெரியும். இணையம் மூலம் அறிமுகமான இலக்கியவாதிகள், கல்வியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர். இவரை நான் முதலில் அறிந்துகொண்டதே சுவாரசியமானதோர் அனுபவம். இணையத்தின் முக்கியமான பயன்களை எனக்கு உணர்த்திய அனுபவம் அது. அப்பொழுது நான் இணையத்தில் எனக்கொரு பக்கத்தை வைத்திருந்தேன். அதில் என் சிறுகதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் பலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் மான்ரியாலிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி , கனடிய அரசின் நிதி உதவியுடன் Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!’ என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அதற்காக அவர்கள் கனடிய எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய இணையத்தளப்பக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் கனடாவில் வாழும் பல்லின எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள்தம் இணையத்தளங்கள் மற்றும் அவ்விணையத்தளங்களுக்கான இணைப்புகள் என அப்பக்கத்தில் தகவல்களைப்பதிவு செய்திருந்தார்கள். (இந்தத்தளம் இப்பொழுது இயங்குவதில்லை.)

அக்காலகட்டத்தில்  புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதுவதற்காக, அது பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் முனைவர் தாரணி. அவர் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றியே அச்சமயம் இணையத்தில் தேடிக்கொண்டிருந்ததாகப்பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அச்சமயம் அவரது கண்களில் மான்ரியால் பல்கலைக்கழகம் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருந்த கனடிய எழுத்தாளர்கள் பற்றிய இணையத்தளமும், அதிலிருந்த என் பக்கத்துக்கான இணைப்பும் பட்டிருக்கின்றது. என் பக்கத்திலிருந்த புகலிட வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த கதைகளை, சிறு நாவலான ‘அமெரிக்கா’ ஆகியவற்றை வாசித்திருக்கின்றார்.அவற்றை வாசித்ததும் என் கதைகளையே மையமாக வைத்துத் தான் எழுதவிருந்த புகலிட ஆய்வுக்கட்டுரையினை எழுதுவதாகத்தீர்மானித்து என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு “‘Seeking the invisible Humanness in an Alien Land’ :  A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan” . இவ்வாய்வுக் கட்டுரையினைத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருந்தார்.

Continue Reading →

ஆய்வு: சமூகத்தின் பெண்ணிண அடையாளம் : சிலம்பும் சிலம்பு கழீ நோன்பும்

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும்  ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து  நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.

இச்சிலம்போடு தொல்தமிழர்கள் திணைச்சமுதாய வாழ்வில் பெண்களுக்கென்று பண்பாட்டில் சில வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் நிகழ்த்தி வந்தனர். அச்சடங்குகள் திணைச்சமுதாயத்திற்கே உரித்தான பண்பாட்டு அடையாளமாக வளம் வந்தது. அதில் சிலம்பு கழீஇ நோன்பும் அடங்கும். இச்சடங்கைத் திருமணத்திற்கு முன்பாகக் கடைப்பிடித்து வந்ததாகவும் திருமண காலத்தில் அதனை மீண்டும் நீக்கியதாகவும் திணைச்சமுதாயப் பண்பாடு எடுத்துரைக்கிறது. சிலம்புகழீஇ நோன்பின் தொடர் மரபுகளைத் திணைச்சமூக முதுகுடிகள், முதுபெண்டிர்கள் கடைப்பிடித்ததுடன் இளமகளிர்களின் (தலைவியின்) கற்பு வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும்,  இனக்குழு மரபிற்கு உட்பட்டும் இதனைச் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக களவு (காதல்) வயப்பாட்டில் இளமகளிர் (குமரிகள்) தன்னுடைய காதலனுடன் உடன்போக்கு செல்லத் துணிவதும் உடன்போக்கு செல்லும் காலத்தில் காலில் அணியப்பட்ட சிலம்பினைக் கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டு நிலம்பெயர்ந்து செல்வதும் மரபாக்கப்பட்டுள்ளது. பின்னர் வளர்ச்சி பெற்ற காலங்களில் கற்பின் அடையாளமாகவும் மாறத்தொடங்கியது. ஆனால்,  இன்றைய சூழலில் சிலம்பு பல்வேறு வடிவங்களில் திரிகிறது. அவ்வாறு திரிவதற்கான காரணம், சூழல் மாற்றம் இவைகள் குறித்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில்  இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: கொன்றைவேந்தன் காட்டும் அறநெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள்

“கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் – சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.

Continue Reading →

ஆய்வு: சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்!

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சங்ககாலப் போரில்  அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2.    வேந்தர் மற்றும் குறுநில மன்னர்  கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத்             தாக்குதல்
3.    வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4.    வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5.    இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்

என்பவையாகும்.

Continue Reading →