எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. ‘தமிழ் ஆதர்ஸ்.காம்’ அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.


அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்:  கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும்  பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப  தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே  எனும் ஆசை –இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.

Continue Reading →

ஆய்வு: திணைச்சமூகப் பண்பாட்டில் சூழல் பொருத்தம் – நில ஒப்பாய்வு!

- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் – மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.

Continue Reading →