கவிதை: முத்த சுதந்திரம்.

கவிதை: முத்த சுதந்திரம்.

அள்ள அள்ள குறையாத அன்பின் கொடையிது
கொடுப்பதனால் மட்டுமே பெற்றுக்கொள்கிற
அன்பின் பரிவர்த்தனை.
கொடுப்பதற்கென்றே உதடுகளில் ஒட்டியிருக்கிற முத்தம்
எப்போதும் எந்த நேரத்திலும்
தன்னை வழங்கத் தயாராக இருக்கிறது.

Continue Reading →

ஆய்வு: பெண்ணியக் கவிஞர்களின் ‘பாலியப்பெண்ணியம்’

 - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் – பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.

பாலியப்2பெண்ணியம்
‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்; நுகர் பொருளாதலை விமர்சிப்பது ஆகும். மேலும் இப்பெண்ணியவாதிகள் பின்வரும் கூறுகளில் பாலியப் பெண்ணிய இலக்கியம் படைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது  (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie  Conbry))
எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (dimple Godiwala)
இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)
தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலிகே.பாரடைஸ் (Emily K. Paradise)

ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய பாலுறவுக் கவிதைகள் ஆகும்.

உடல்அரசியல் போராட்டம்
உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண் மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்கு புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு ‘எக்ரிடியூர் பெமினைன்’ (நுஉவசவைரசந குநஅiniநெ)  எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு ‘ உடலை எழுதுவது ‘ என்பது பொருள். ஷொவால்டர் இதனை ” மொழியிலும் நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்;பது ”  என்று விளக்குவார்.  முன்னைய மரபுகள்  பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.

Continue Reading →

‘ழகரம் 5’ சிற்றிதழ் சஞ்சிகை வெளியீட்டில் எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் சில நிமிடங்கள்…

எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் ‘ழகரம்’ சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.


நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.


நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், ‘காலம்’ செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் ‘தீபம்’ சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!.

கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? – வ.ந.கிரிதரன் –

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

Continue Reading →

சிறுகதை: மூச்சு விட மறுத்தவனைப்பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய  உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. “எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்” என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.

இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.

மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ  என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.

Continue Reading →

கவிதை: உஷ்ணப்பூக்கள்!

முல்லை அமுதன்

தினமும்
தன் பூந்தோட்டத்தை
அழகு பார்த்தாள்
என் மனைவி.
ஒவ்வொரு பூவாய்க் கையில்
எடுத்து ரசித்தாள்.
நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று
ஆவலாய்
கதவைத் திறந்தாள்.

Continue Reading →

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்
தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது
அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால்
நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம்
கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்
நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது
உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்
இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

Continue Reading →

நிகழ்வுகள்: கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்!

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம்        16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. கலாமணி கணேசன்(…

Continue Reading →

கவிதை: எழுத்தாளர் கீதம்! – அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) –

எழுத்தாளர் கீதம்!

– அறிஞர் அ.ந.கந்தசாமி –

அறிஞர் அ.ந.கந்தசாமி

[ ‘புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரினை ‘நூலகம்’ தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘எழுத்தாளர் கீதம்’ கவிதையினை இங்கு பதிவு செய்கின்றேன். இக்கவிதையானது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம்  பரந்துபட்டது. ‘துறவியும் குஷ்ட்டரோகியும்’, ‘எதிர்காலச்சித்தன் பாடல்’, ‘கடவுள் என் சோரநாயகன்’ போன்ற கவிதைகள் முக்கியமானவை. ]


சங்கு முழங்குது! சங்கு முழங்குது!
சங்கு முழங்குது கேள் – புதுமைச்
சங்கு முழங்குது கேள்.
எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது.
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே –
சங்கு முழங்குது.               – சங்கு முழங்குது

சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி
நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்!
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே – கலைச்
சிற்பிகளே! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம்! – புது
அமைப்பும் நிறுவிடுவோம்.            – சங்கு முழங்குது

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 174: செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’;

செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’ நாவல் அவரது முதலாவது நாவல். ‘கலைச்செல்வி’ நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று ‘நந்திக்கடல்’ . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் ‘அன்பு புத்தகசாலை’யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் ‘கிரெளஞ்சப்பறவைகள்’. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே ‘நந்திக்கடல்’ யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: ‘தற்போது நூலகத்தில் ‘நந்திக்கடல்’ நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக ‘நூலகம்’ தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( ‘மறுமலர்ச்சி’, ‘கலைச்செல்வி’ இதழ்கள் உட்பட).

இவ்விதமாக ‘நூலகம்’ தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் ‘நூலகம்’ போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

Continue Reading →