கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி!

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி!கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது.  முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

கனடாவின் கல்வித்துறை – தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

Continue Reading →

ஆய்வு: சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!

பொன்னிமனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருமணநிகழ்வு
திருமணம் என்பதனை “திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒரு வகை வழக்கமாகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்- பெண் உறவுநிலையைக் குறிக்கிறது” என்பா். (முனைவா் கே.பி.அழகம்மை சமூக நோக்கில் சங்க மகளிர் ப-44 )

“திருமணம் இரண்டு தனிப்பட்டவா்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.இரண்டு குழுக்களிடையே இணைப்பை நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை நியதி ” ( சசிவல்லி தமிழா் திருமணம் ப- 8 ) என்று குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையினையே பெரிதும் பதிவு செயதுள்ளன.இருப்பினும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் பெண் கேட்டு நிச்சயிக்கும் முறையும் வழக்கில் இருந்தமையைக் காணமுடிகிறது.

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ( தொல்.கற் – 1 )

என்று தொல்காப்பியரும் இதனை விளக்குவார்.

அம்மவாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணா்ப்போ ரிருந்தனா் கொல்லோ
தண்டுடைக் கையா் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே ( குறு – 146 )

என்ற பாடல் பெரியவா்கள் கூடிப் பேசி திருமணம் செய்யும் முறையினைப் புலப்படுத்துகின்றது எனலாம்.

Continue Reading →

ஆய்வு: இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க காலத்தில் போட்டி, பூசல், மது அருந்துதல் ஆகிய நிலைபாடுகளை ஒழிப்பதற்காக சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பதில் இடம்பெறும் மனித வாழ்க்கைக்கு உகந்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன, திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் ஆவார். இந்நூல் நான்கு இனிய பொருட்களை எடுத்துக்கூறும் பாடல்கள் நான்கு மட்டுமே (ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து ) எஞ்சியவை மும்மூன்று இனிய பொருட்களையே சுட்டியுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு பாடல்களை கொண்டுள்ளன. மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

Continue Reading →

எழுத்தாளர் தேவகாந்தனுடான நேர்காணல் (மூன்றாம் பகுதி)!

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்:  அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா  (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.

ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது.  நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.

இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.

Continue Reading →

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!1. அப்படியில்லை நான்

அப்படியில்லை நான் என பேசுகின்றான்
ஆடை கிழிந்து
கூந்தல் கலைந்து
அனுமதி மீறலை கடந்த
வண்ண சேலைக்காரி
கண் கலங்கி நிற்கின்றாள்
அப்படியில்லை நான் என கதறுகின்றாள்
கூட்டம் யோசிக்கிறது நாமும் அன்று அப்படியில்லை நான் என சொல்லியவர்கள் தானே
நானும் அப்படியில்லை  என என்னிடமே சொல்லி பார்க்கிறேன்
அவர்கள் நம்ப மறுப்பதை போல
நான் நம்ப மறுக்கிறேன்
முதலில் அப்படியில்லை என்பதன் அர்த்தம் என்ன
மருத்துவமனையில் ஆய்வு அறிக்கை வாங்குமிடத்தில் சொல்லும் அப்படியில்லையா
காவல் அதிகாரி கைது செய்யும் போது சொல்லும் அப்படியில்லையா
கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேட்கும் போது சமாளிக்கும் படி சொல்லும் அப்படியில்லையா
முதலில் அப்படியில்லையின் அர்த்தம் பகிருங்கள்
இந்த காகங்களை பாருங்கள் அரிதான சாப்பாடை பகிர்ந்து உண்கிறது
உங்களிடம் நான் சாப்பாடை கேட்கவில்லை
அர்த்தம் கேட்கிறேன்
நீங்கள் தயவு செய்து விட்ஜென்ஸ்டீனை படித்து விட்டு என்னை குழப்பும் படி அர்த்தம் உரைக்காதீர்
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இதோ பிடித்துக்கொள்ளுங்கள் “அப்படியில்லை நான்”

Continue Reading →

தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ்விழா

தமிழ் உறவுகளுக்கு வணக்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 தமிழ்விழா ஜூலை 1 (வெள்ளி) முதல் ஜூலை 4 (திங்கள்) வரை நியூ ஜெர்சியில்,…

Continue Reading →

நூலகம் அறக்கட்டளை: ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள்

நூலகம் அறக்கட்டளை: ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள்இன்னொரு யாழ்ப்பாண நூலக எரிப்பு நாள் வந்து கடந்து போயுள்ளது. அந்த ஒரு நாளில் நினைவு கூர்ந்துவிட்டுப் போவதால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் ஆவணங்களைக் காக்க முடியாது.

நண்பர்களே, நூலக நிறுவனத்தினராகிய நாம் (www.noolaham.org) ஆண்டு முழுவதும் ஆவணப்படுத்தலில் ஈடுபடுகிறோம். 5,000 நூல்கள், 7,000 சஞ்சிகைகள், 4,000 பத்திரிகைகள், 2,000 பிரசுரங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 18,000 ஆவணங்கள். முழுக்க முழுக்க ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இலட்சம் பக்கங்கள்.

2,700 ஆளுமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி தமிழின் மிகப்பெரும் வாழ்க்கை வரலாற்று அகராதியை உருவாக்கியுள்ளோம்.

அவை தவிர ஏட்டுச் சுவடிகள், நினைவு மலர்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், காணொளிகள் எனச் சகலவிதமான ஆவணங்களையும் திரட்டி ஆவணக்காப்பகமாகச் செயற்படத் தொடங்கியுள்ளோம்.

Continue Reading →

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!அன்புடையீர், உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் தொல்காப்பியம் பற்றிய கருத்தரங்கினையும் முத்தமிழ் விழாவினையும் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை  அழைப்பதில் பெருமகிழ்வு எய்துகின்றோம். இத்துடன் இருநாள் நிகழ்வுகளக்கான நிகழ்;ச்சித் தொகு;பபுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து வருகை தரும்வண்ணம் பணிவன்போடு கேட்டக்கொள்கின்றோம்.

த.சிவபாலு    , தலைவர்   
கார்த்திகா மகாதேவன், செயலாளர்                   

தமிழால் இணைவோம்! தமிழால் வளர்வோம்! தமிழை வளர்ப்போம்!

தகவல்: த.சிவபாலு  avan.siva55@gmail.com


முகநூல்: கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!

– கம்பன் கழகம், பிரான்ஸ் –

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.

முதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.

Continue Reading →