வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும்

எழில்வேந்தன்அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான்  பதிலுக்குக்  கேட்டேன். அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான  பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும்  பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர்,  ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.  இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.

Continue Reading →

தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம்! சிவாஜியின் கனவு தொலைந்தது!. வாரிசுகளின் கனவு விதையாகிறது!

சாந்தி தியேட்டர்முருகபூபதி“பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே ”   என்பது  நன்னூல்  வாக்கு.  இதனை பனையோலையில்   எழுத்தாணியால்  பதிவுசெய்தவர்  பவனந்தி முனிவர்   என்று   சொல்லப்படுகிறது. வள்ளுவரும்   கம்பரும்  இளங்கோவும்  அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும்   எழுத்தாணியையும்  ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான   எழுத்துக்களைப்படைத்தனர்  என்பதற்காக  இந்த நூற்றாண்டின்  பிள்ளைகள்  பனைமரம்  தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள்   கணினியிலும்  கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே  சினிமாப்படங்களையும்  சின்னத்திரை மெகா தொடர்களையும்  விளையாட்டுக்களையும்,  தாம்  விரும்பும் இசை, நடன  நிகழ்ச்சிகள்  உட்பட  அனைத்தை  பொல்லாப்புகளையும் முகநூல்   வம்பு  தும்புகளையும்  பார்த்துக்கொள்ளமுடியும். இனி  கையில்  எடுத்து  வாசிக்க  புத்தகம்  எதற்கு ?  படம்பார்க்க தியேட்டர்தான்   தேவையா? சில  படங்களை  அகலத்திரையில்  பார்த்தால்தான்  திருப்தி எனச்செல்பவர்கள்  விதிவிலக்கு. தொலைக்காட்சியின்   வருகை,  திருட்டு விசிடியின்  தீவிர  ஆக்கிரமிப்பு   முதலான  காரணிகளினால்,  திரையரங்குகள் படிப்படியாக   மூடப்பட்டுவருகின்றன.

இலங்கை,   இந்தியா  உட்பட  வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள்  சிறிய  திரையரங்குகள்  தோன்றிவிட்டன. ஒரு  வணிக வளாகத்திற்குள்  பிரவேசித்தால்  சின்னச்சின்ன திரையரங்குகளையும்   தரிசிக்கமுடியும். மனைவியுடன்   ஷொப்பிங்  செல்லும்  கணவன்,  மனைவியால் பொறுமை  இழக்கும்  தருணங்களில்  அந்த  அரங்கினுள்  நுழைந்து ஏதாவது  ஒரு  படத்தை  கண்டுகளித்துவிட்டு,  மனைவி  ஷொப்பிங் முடிந்ததும்,  பொருட்களை  காவி வருவதற்கு  செல்லமுடியும். இதுதான்  இன்று  பல  குடும்பங்களில்  நடக்கிறது. வெளிப்புற   படப்பிடிப்புகளினாலும்  காதல்  காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள்   வெளிநாடுகளில்  லொகேஷன்  தேடுவதனாலும் இந்தியாவில்  பல  சினிமா  ஸ்ரூடியோக்கள்  மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில்  பிரபல்யமான  எஸ். எஸ். வாசனின்   ஜெமினி,  சேலம் மொடர்ன்   தியேட்டர்ஸ்  சுந்தரத்தின்  பல  ஏக்கர்  நிலப்பரப்புள்ள  ஸ்ரூடியோ,   சென்னை  நெப்டியூன்,  ஏ.எல். ஸ்ரீநிவாசனின்  சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  கற்பகம்,  பானுமதியின் பரணி, நாகிரெட்டியின்   விஜயா, வாஹினி,  எம்.ஜி.ஆரின்  சத்தியா   உட்பட சில  சிறிய   ஸ்ரூடியோக்களும்   மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால்,  பஸ்பயணிகள்  நடத்துனரிடம்  ஜெமினிக்கு ஒரு  டிக்கட்  என்று  கேட்டு  ஏறி  இறங்கும்  காட்சியை  காணலாம். ஜெமினிக்கு  இன்று  அதுதான்  வாழும்  அடையாளம்.   அந்த புகழ்பெற்ற  ஸ்ரூடியோவிலிருந்துதான்  மகத்தான  வெற்றிப்படங்கள்  ஒளவையார்,  சந்திரலோகா,   வஞ்சிக்கோட்டை  வாலிபன், ஒளிவிளக்கு  என்பன   வெளியாகின.

Continue Reading →

‘குடிவரவாளன்’ பற்றி குப்பிழான் சண்முகம்!; கனடாவில் ‘தாய்வீடு’!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது ‘குடிவரவாளன்’ நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ‘ மீண்டும் தொடங்கும் ‘மிடுக்காய்’ தொடரும் வாழ்வு.

Continue Reading →

ஆய்வு: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலை!

நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.

Continue Reading →

தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன கலை திரைப்பட மையமும் இணைந்து ரொறன்ரோ வில் நடத்தும் சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா.

12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, Scarborough Civic Centre, 150 Borough Dr,, Toronto, Ontario M1P 4N7மேலதிக தொடர்புகளுக்கு: 416 450…

Continue Reading →

கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்!

– கற்சிலைமடு மாணவர்களுக்காக நூலகமொன்றினைச் சிறிய அளவில் ஆரம்பிக்க நண்பர் ஜெயக்குமரன் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார். அது பற்றி அவர் முகநூலில் இட்டிருந்த பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.…

Continue Reading →

கற்சிலைமடுவின் குழந்தைகள்!

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது. கனடாவில் வதியும் எழுத்தாளர் வ.ந கிரிதரனின் “குடிவரவாளன்” நாவலின் அறிமுகநிகழ்வின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு தொகைப்பணமே நூலாசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இச்செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சு.குணேஸ்வரன், சித்திராதரன் ஆகியோர், குறித்த பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டுக்கு பொறுப்பாகச் செயற்படும் திரு தர்சன் (ஆசிரியர்) அவர்களை கற்சிலைமடுவில் நேரில் சந்தித்து கற்றல் உபகரணங்களை ஒப்படைத்தனர்.

Continue Reading →

ஒரு வழிப்போக்கனின் கவிதை 02

கவிதை கேட்போம் வாருங்கள்!விசித்திர உலகமாய் மாறிவிட்டது ….!!!

தினப் பத்திரிகையை வாசித்து ….
உலக நடப்பை விவாதித்து ….
கொண்டிருந்த இருவரைப் பார்த்து ….
தோளில் இருந்த துணியால் ….
வாயை பொத்தியபடி சிரித்த ….
வழிப்போக்கன் ……..!!!

பேசத்தொடங்கினான் ….!!!

விசித்திர உலகமையா ……
உண்மை உலகை ஒருமுறைசுற்றி…..
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி …..
வந்து விடுகிறது – இதுதான் இன்றைய …..
உண்மையின் இன்றைய நிலை ….!!!

Continue Reading →

உள்ளமதைத் திருப்புங்கள் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின  – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.

தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !

Continue Reading →

நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது”  மேற் கூறிய  எடுகோளுடன்   கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’  என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து   அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக  இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும்  இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது.  இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும்  ஆடை அணிகலங்கலிருந்து  மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.

Continue Reading →