மெல்பனில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 200 ஆவது ஆண்டு நிறைவு விழா! பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்சுவை நிகழ்ச்சிகள்!

[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகிறோம். ஒரு பதிவுக்காக இங்கே விபரம் பதிவாகின்றது. – பதிவுகள் ]

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இலங்கையில்  நீண்ட கால  வரலாற்றைக்கொண்ட  தெல்லிப்பழை யூனியன்   கல்லூரிக்கு  தற்பொழுது  200 வயது.   அதனை  முன்னிட்டு உலகில்  பல  நாடுகளில்  வதியும்  கல்லூரியின்  பழைய  மாணவர்கள் ஒன்றுகூடி   தமது  கல்வி  வளர்ச்சிக்கு  வித்திட்ட  கல்விச்சாலைக்கு நன்றி   தெரிவிக்கும்  எண்ணத்துடனும்  அங்கு  பணியாற்றிய அதிபர்கள்,  ஆசிரியர்களின்  தன்னலம்  கருதாத  சேவை மனப்பான்மையை    நினைவு கூர்வதற்காகவும்  பழைய  மாணவர்  ஒன்றுகூடல்களையும்   பல்வேறு  நிகழ்ச்சிகளையும்  ஒழுங்கு செய்துவருகின்றனர்.

அந்த  வரிசையில்  அவுஸ்திரேலியாவில்  மெல்பன்  நகரில்  வதியும் யூனியன்    கல்லூரியின்  பழைய  மாணவர்கள்  ஒன்றுகூடும்  200  ஆவது   ஆண்டு  நிறைவு  விழா எதிர்வரும்  28  ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை   மாலை   4   மணிக்கு   பல்சுவை   கதம்ப நிகழ்ச்சிகளை   ஒழுங்கு  செய்துள்ளனர்.

மெல்பனில்   Dandenong Menzies  மண்டபத்தில் ( Menzies Avenue, Dandenong)   நடைபெறவுள்ள   இவ்விழா,  Athys  Jewellers – Perpetua Money Transfer, Prime Developers  ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன்  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது.

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியங்களின் அமைப்பு

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

Continue Reading →

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்; அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள அறநூல்களில் ஒன்றாக நான்மணிக்கடிகை அமைந்துள்ளது.இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலை இயற்றியவர் விளம்பிநாகனார்.இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் பெண்ணுக்கான வரையறுக்கப்பட்ட நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண் இயற்கையின் ஆற்றல்மிகு படைப்பாக விளங்குகிறாள்.அவளால் தான் அன்பையும் இனிமையையும் பெற முடியும்.மாதர் என்ற சொல்லிற்குக் காதல் என்ற பொருள் உண்டு.மாதர் முகமே எனது புத்தகம் என்று ரூசோ கூறியுள்ளது நோக்கத்தக்கது.பெண்ணைவிட பெருமையுடையது யாதொன்றுமில்லை எனவே தான் வள்ளுவரும் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’என்று போற்றியுள்ளார்.

பெண் என்னும் தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அது பெண்ணை உணர்த்தும் மாதர் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள் என்று திரு.வி.க அவர்கள் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்ற நூலில் கூறியிருக்கிறார்.(ப.3) நான்மணிக்கடிகையில் பெண்கள் குறித்த செய்திகள் 34 பாடல்களில்  (11, 14, 15, 20 ,22, 24 ,26 ,34 ,35, 38 ,39 ,43, 45, 47 ,55, 56 ,57 ,65 ,67 ,73 ,81, 85 ,87, 90, 91 ,92 ,93 ,95 ,97, 99, 101, 102, 105 );நாற்பது கருத்துக்களாக இடம்பெறுகின்றன.

Continue Reading →