எம். ஜெயராமன் (மெல்பேண் … அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

1. வாய்க்கும் நல்ல தீபாவளி

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ பற்றி…..; முனைவர் சி. மெளனகுருவின் ‘சங்காரம்’ கவிதை நாடகம் பற்றி…

1. கவிஞர் நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ பற்றி…..

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...ஈழத்துத்தமிழ்க் கவிதையுலகில் எம்.ஏ.நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ முக்கியமான கவிதைத்தொகுதி. நுஃமானின் ஐந்து நெடுங்கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசகர் சங்க வெளியீடாக (கல்முனை) வெளியானது.

இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் ‘அதிமானிடன்’ கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

Continue Reading →

வே.நி. சூர்யா கவிதைகள்!

1. தாந்தேவின் நரகத்தில் நான்

 தாந்தேவின் நரகத்தில் நான்அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி

(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )

Continue Reading →

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில் தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்……. தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.தீண்டாமைக்கும்…

Continue Reading →

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் – 28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில் தொழில் நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்திய ஒன்றுகூடல்!

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!” அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன.”

இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி)  அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய  நிதியத்தின் தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  குறிப்பிட்டார். மெல்பன், வேர்மண்  தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  நிதியத்தின்  உறுப்பினர்கள்  கலந்து  சிறப்பித்தனர். இலங்கையிலும்  உலகநாடெங்கிலும்  போர்களினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும்  உயிரிழந்த  மக்களுக்கும்,  கடந்த ஆண்டு இறுதியில்  மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  ஒரு  நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது. நிதியத்தின்  2015- 2016  ஆண்டறிக்கையை  துணை  நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும்  நிதியறிக்கையை  நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஶ்ரீஸ்கந்தராஜாவும்  சமர்ப்பித்தனர்.

Continue Reading →

இலண்டன்: புத்தக அறிமுக விழா!

செல்வி கார்த்திகா மாகேந்திரனின் புத்தக அறிமுக இசைச் சமர்ப்பணவிழா22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் தேனுண்ட வண்டுகளாக மயங்கி மகிழ்வுற்றதையும் காணக்கூடியதாக இருந்தது. கார்த்திகாவின் இனிமையான குரலில் நானும் என்னை மறந்து இசையோடு சங்கமித்துவிட்டேன். இந்த நேரத்தில் கார்த்திகாவின் ஆசிரியை இசைக்கலைமணி, கலாவித்தகர் திருமதி. சேய்மணி. சிறிதரன் அவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் பல்லாயிரம் இசைவல்லுனர்களை உருவாக்குவார் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. நிகழ்வின் போது கார்த்திகாவிற்கும் ஆசிரியருக்கும் இடையில் இருந்த புன்னகையின் ஊடான தொடர்பு இரசிக்கக்கூடியதாக இருந்தது.

14 வயதிலேயே நூல் எழுதும் வல்லமை கொண்ட கார்த்திகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.  தொடரட்டும் உங்கள் கலைப்பயணம். இந் நிகழ்வில் மிகப் பிரமாதமாக இசைக் கருவிகளை வாசித்தவர்கள், அழகாக நடனமாடிய சிறுவர்கள், அனுபவம்மிக்க சிறந்த அறிவிப்பாளார், உரையாற்றியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். முக்கியமாக திரு.மகேந்திரன் குடும்பத்தினர் சபையோரை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகாட்டும் .

Continue Reading →

குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.

–  முனைவர் ஆர்.தாரணியின் ‘‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். –  பதிவுகள் –


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

சாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான  வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.

Continue Reading →

தம்பா கவிதைகள்!

தம்பா1. தீக்குச்சிகளின் நடனம்.

மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.

போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.

இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.

கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.

Continue Reading →

ஆய்வு: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.   

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →