வாசிப்பும், யோசிப்பும் 202: என் குருமார்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

என்னைப்பொறுத்தவரையில் என் குருமார்கள் நூல்களே! அவற்றை எழுதிய எழுத்தாளர்கள், அறிஞர்களே! அவர்களின் இருப்பிடமான நூலகங்களே என் ஆலயங்கள். எனது குருமார்களின் உதவியினால் அறிவியல் , அரசியல், வரலாறு,…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 201: ஜெயலலிதா என்னும் எழுத்தாளர் பற்றி……

ஜெயலலிதாவின் கட்டுரைத்தொகுப்பு.ஜெயலலிதா அன்று.‘காவிரி தந்த கலைச்செல்வி’ என்னும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய தொடரொன்றின் முதற்பகுதியை யு டியூப்பில் பார்த்தேன். அந்நிகழ்வினைத்தொகுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுதாங்கன். அதில் ஜெயலலிதாவின் எழுத்து முயற்சிகளைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவார். .

எண்பதுகளில் ‘எண்ணங்கள் சில’ என்னும் தொடர் எழுதினார்  அதனைத் ‘துக்ளக்’ சஞ்சிகையில். எழுதியிருக்கின்றார்.

‘தாய்’ வார இதழில் ‘எனக்குப் பிடித்த ஊர்’, ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’, ‘எனக்குப் பிடித்த ஓவியர்’, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’, ‘எனக்குப் பிடித்த நாவல்’, ‘எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்’ என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே ‘மனதைத்தொட்ட மலர்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த நாவலாக சார்ள்ஸ் டிக்கன்ஸின் ‘டேவின் காப்பர்ஃபீல்ட்’ டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.

68இல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.’இவை ‘காவிரி தந்த கலைச்செல்வி’ காணொளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.

Continue Reading →