தமிழினியின் உயிர்க் கொடை!

தமிழினி ஜெயக்குமாரன்அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். மறைந்த விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினியின் சுயசரிதை சிங்கள மொழியில் வெளிவந்து, தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு  இலங்கையில் அதிகளவில் விற்பனையான நூலாக சாதனை படைத்திருக்கிறது. அந் நூலைக் குறித்த சிங்கள வாசகர்களது கருத்துக்களோடு ஒரு கட்டுரையை எழுதி இணைத்திருக்கிறேன்.

இப் புத்தக வெளியீடு, 2016.05.13 அன்றும், மற்றும் கலந்துரையாடல்கள் கொழும்பு, Sri Lanka Foundation Institute, ஹொரண, நகர மண்டபம், கண்டி புத்தகக் கண்காட்சி, ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், கொழும்பு தேசிய நூலக மண்டபம், சர்வதேச புத்தகக் கண்காட்சி போன்ற பல இடங்களில் இப்போது வரையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் இலங்கையின் பல முக்கியமான எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகளோடு, பதிப்பாளர் திரு.தர்மசிறி பண்டாரநாயக்க, மொழிபெயர்ப்பாளர் சாமிநாதன் விமல், தமிழினியின் கணவர் திரு.ஜெயக்குமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருக்கின்றனர். கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள், இந் நூல் தொடர்பான நேரடி மற்றும் சமூக வலைத்தள கலந்துரையாடல்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்


‘இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும்.’

இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது,  ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

Continue Reading →

ஆய்வு: தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும்

எழுத்தாளர் க.நவம்“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!”
ஒன்ராறியோவின் ஸ்றத்றோய் (Strathroy) என்னுமிடத்தில், ஆரன் ட்றைவர் (Aaran Driver)  என்னும் வாலிபன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, தற்போது பிரான்ஸில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் கனடியக் குடிமகளான கிறிஸ்ரியான் ப்பூட்ரோ (Christianne Boudreau)  இப்படித்தான் சொல்லியழுதாள்! ஆரன் ட்றைவரின் கொலையின் மூலம் பெருந்தொகையிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டமை கனடியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஆனால் இருவருடங்களுக்கு முன்னர், சிரியாவில் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து போராடி உயிரிழந்த, தனது 22 வயது மகனான டேமியன் கிளயமனைப் (Damian Clairmont) பறிகொடுத்த தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவைப் பொறுத்தவரை, ஆரன் ட்றைவரின் கொலை அவளுக்கு இன்னொரு அவலச் செய்தி! “என்னையும், எனது மகனையும் குடும்பத்தையும் போலவே, ஆரன் ட்றைவரையும் அவனது குடும்பத்தையும் கனடிய அரசு அனாதரவாகக் கைவிட்டுவிட்டது!” வளரிளம் பருவத்துச் செல்வங்கள் பலவும், வழி தவறிப்போய் மாண்டழிவதற்குக் கனடிய அரசின் கையாலாகாத்தனமும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் காரணங்கள் என அத்தாயானவள் முன்வைக்கும் வாதங்கள் வெறுமனே அலட்சியம் செய்யப்படக் கூடியனவல்ல!

24 வயதுடைய ஆரன் ட்றைவரது தந்தையார் ஒரு வான்படை அலுவலராகப் பணியாற்றியவர். தந்தையாரது பணியின் நிமித்தம் ஆரன் ட்றைவர் ஒன்ராறியோ, அல்பேர்ற்ரா ஆகிய மாகாணங்களில் வசித்தவர். 2014இல் கனடியப் பாராளுமன்றில் தாக்குதல் நடத்திய மைக்கல் ஸேய்ஹஃப் ப்பிப்போவையும் (Michael Zehaf-Bibeauv) பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் விதந்து பாராட்டியவர். தம்மை ஓர் இஸ்லாமியராகச் சுய பிரகடனம் செய்தவர். இஸ்லாமியதேச தீவிரவாதிகளை ஆதரித்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர். விளைவாக, 2015இல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், கணினியோ கைத்தொலைபேசியோ பாவிக்கக்கூடாதென்ற நீதிமன்ற உத்தரவுடன், கண்காணிப்பின் கீழ் காலம் கழித்தவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்றத்றோயிலுள்ள தமது இருப்பிடத்தின் நிலக்கீழறையில் இரகசியமாக வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்து, சனசந்தடி மிக்க ஒன்ராறியோ நகர் ஒன்றில் அதனை வெடிக்க வைக்கவென ஆரன் ட்றைவர் ஆயத்தமாயிருந்தார். தனது நோக்கத்தை வெளியிடும் காணொளி ஒன்றையும் பதிவுசெய்தார். இத்தகவலை அறிந்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI), கனடிய ஆர்சியெம்பியினருக்கு (RCMP) இதனைத் தெரியப்படுத்தினர். ஆகஸ்ட் 10, 2016 புதன்கிழமை ஆரன் ட்றைவர் தமது குண்டுத் தாக்குதற் திட்டத்தை நிறைவேற்றப் புறப்பட்ட தருணம், ஒன்ராறியோ காவல் துறையினருடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்! – யாழ்ப்பாணத்தில் அன்று: ‘டபுள் டெக்கர் பஸ்’ஸில் போனேனடி!

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் ‘டபுள் டெக்கர் பஸ்’கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய ‘டபுள் டெக்கரில்’ சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். ‘டபுள் டெக்கரில்’ பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். ‘டிக்கற்’ எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்தது.

‘டொராண்டோ’வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான ‘டபுள் டெக்கர்’ பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் ‘டபுள் டெக்கரி’ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். ‘டபுள் டெக்கரில்’ பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் ‘டபுள் டெக்கரில்’ பஸ்ஸில் போனேனடி!’ என்று  பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.

‘டபுள் டெக்கர்’ பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart’ ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த  பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை.  இவ்விதம் யாழ்ப்பாணத்து ‘டபுள் டெக்கர்’களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு 🙂 காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. 🙂 அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. 🙂

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்! கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள்!

இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்வள்ளுவர் கம்பன்   இளங்கோ  பாரதி  முதலான முன்னோடிகளை  நாம்  நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான்  அவர்கள்  என்று ஓவியங்கள் உருவப்படங்கள்  சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை  நம்மில்  பலர் பார்த்திருந்தாலும்,  கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான   கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற  படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரபாண்டிய  கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜியின்  உருவத்தில்   திரைப்படத்தில்  பார்த்துவிட்டு  அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம். பிரிட்டிஷாரின்  கிழக்கிந்தியக்கம்பனிக்கு  அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில்  தொங்கவிடப்பட்ட   வீரபாண்டியகட்டபொம்மன்  மடிந்த  மண்  கயத்தாறைக் கடந்து 1984  இல்   திருநெல்வேலிக்குச்  சென்றேன். கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட   அந்தப் புளியமரம்   இப்பொழுது அங்கே இல்லை. கட்டபொம்மன்   பற்றிய  பல கதைகள்  இருக்கின்றன.  அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன்  என்றும்   வழிப்பறிக்கொள்ளைக்காரன்   எனவும் எழுதப்பட்ட   பதிவுகளை  படித்திருக்கின்றேன்.  இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய  தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு   முன்பே எனது  இளம்பருவ  பாடசாலைக்காலத்தில்  இலங்கை  வானொலியில்  வீரபாண்டிய  கட்டபொம்மன்   திரைப்படத்தில்  சக்தி  கிருஷ்ணசாமியின் அனல்கக்கும்  வசனங்களை சிவாஜிகணேசனின்  கர்ஜனையில்  அடிக்கடி   கேட்டதன்பின்பு- அந்த  வசனங்களை  மனப்பாடம்செய்து  பாடசாலையில்  மாதாந்தம்  நடக்கும் மாணவர்  இலக்கிய மன்ற  கூட்டத்தில்   வீரபாண்டிய கட்டபொம்மன்  வேடம்  தரித்து நடித்தேன்.  ஜாக்சன்  துரையாக நடித்த  மாணவப்பருவத்து  நண்பன்  சபேசன்  தற்பொழுது   லண்டனிலிருக்கிறான். இடைசெவலைக்   கடந்துதான்   திருநெல்வேலிக்குப்போக   வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு.  அந்த இடத்தில்  இறங்கி கட்டபொம்மன்   சிலையைப்பார்த்தேன்.   பாடசாலைப்பருவமும்   வீரபாண்டிய  கட்டபொம்மன் திரைப்படமும்  நினைவுக்கு  வந்தன.  அவ்விடத்தில் அந்தச்சிலை  தோன்றுவதற்கு  முன்னர்  மக்கள்  தாமாகவே  ஒரு நினைவுச்சின்னத்தை   எழுப்பியிருந்தார்களாம். எப்படி…?

Continue Reading →