சிறுகதை : என்றென்றும் அவளோடு

சுரேஷ் அகணிசிக்காகோ  ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம்  ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.

“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன்  கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில்  அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும்  ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.

சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.

உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்: சுவடு அழியும் காலம்…

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. மண்ணாந்தை மன்னர்கள்’

யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: திரை எழுத்தாளர்கள் சுபாவுடன் ஒரு கலந்துரையாடல்

09-10-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில்,…

Continue Reading →

நூல் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்!

அன்புடையீர். வணக்கம்,  எதிர்வரும்  22/10/2016  சனிக்கிழமை  மாலை  5.30  மணிக்கு   எமது  மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’  திருமதி. சேய்மணி. சிறிதரனின்  மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya  bharathi…

Continue Reading →

நூல் அறிமுகம்: வாழ்வின் கசந்த உண்மைகளிலிருந்து கிளர்ந்தெழும் துவாரகனின் கவிதைக்குரல்

நூல் அறிமுகம்: வாழ்வின் கசந்த உண்மைகளிலிருந்து கிளர்ந்தெழும் துவாரகனின் கவிதைக்குரல்மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.

மேற்சொன்ன கிரியை கவிதை படைத்தல் குறித்து நிகழ்த்தப்படும்போது, ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பாளுமையின் வலிமையைப் பிரயோகிக்க நேர்கிறது. அது ஒரு திட்டமிட்ட பொறிமுறையுமல்ல. கவிதை படைத்தலுக்கான கணங்கள் சம்பவிக்கையில் ஒரு நுண்மையான உட்புலனுணர்வின் உந்துகை அவனது படைப்பை வெளிக்கொணர்கிறது. ஒரு குறித்த சொல் அல்லது ஒரு தொடர், ஒரு நினைவுக்கீற்று எதுவாயினும் அந்தப் படைப்பின் அடிப்படையாக அமையமுடியும். அதனை அடியொற்றி அவன் கட்டமைக்கின்ற கவிதையின் வைப்பொழுங்கு அதில் வெளிப்படுகின்ற உணர்வு அந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகின்ற முறைமை என்பனவெல்லாம் இணைந்து அந்தப் படைப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. படைப்புக்கான உந்துதல் ஒருவனைக் கவிதையில் வழிநடத்தும்போது அவனது பார்வை அங்கு பிரதானத்துவம் கொள்கிறது.

குறித்த ஒரு விடயம் பற்றிய பார்வை அல்லது அணுகுமுறை ஆளுக்காள் வேறுபட முடியும்.  உதாரணத்துக்கு காகக்கூட்டில் ஜனித்து, காகங்களாலேயே போஷிக்கப்பட்டு வளர்கிற ஒரு குயிற்குஞ்சு இனங்காணப்படுகின்ற தருணம், தாயென்றும் தந்தையென்றும் எண்ணிக் கொண்டிருந்த காகங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொத்தித் துரத்தப்படுகின்ற அந்தப்போதுகள்… ஒரு கலைஞனால் பார்க்கப்படுவதற்கும் சாதாரண மனிதனால் பார்க்கப்படுவதற்கும் ஒரு கவிஞனால் பார்க்கப்படுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களிருக்கின்றன.

இத்தகைய ஒரு தவிப்பும் துயரும் சவாலும் நிரம்பிய தருணம் குறித்துத் தனது உணர்வுகளைப் பதிவு செய்ய விழையும் ஒரு கவிஞன் அற்புதமானதோர் கவிதையைப் படைத்துவிடமுடியும்.

Continue Reading →

ஜெயலலிதா எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த வாசகர். பல்துறை ஆற்றலும் நினைவாற்றலும் மிக்கவர்

ஜெயலலிதாபதிவுகள்  இணையத்தில்  கிரிதரன்  குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய  தமிழக முதல்வர்  செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர்  மட்டுமல்ல,  அவர்  சிறந்த வாசகர்.  அத்துடன்  நல்ல நினைவாற்றலும்  பல்துறை ஆற்றலும்  மிக்கவர்.தினமும்  அவர்  நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது  ஒரு  விபத்து. தொடர்ந்து கல்லூரியில்  படித்து  பட்டம்  பெறுவதற்கே  விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்‌ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும்  கேட்டதனாலேயே  அம்மு  என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா  தமிழ்த்  திரையுலகிற்கு வந்தார்.

பந்துலுவின் எம். ஜி. ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை முதலான படங்களே அவருடை முதல் தமிழ்ப்பட வரிசையில் இடம்பெற்றவை.   1961 இலேயே அவர்  Epistle  என்ற ஒரு ஆங்கிலப்படத்திலும் நடித்தவர். 1961 – 65 காலப்பகுதியில் அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்துவிட்டிருந்தார். ஆனால், அவர் எம்.ஜி. ஆருடன் திரையுலகில் இணைந்து அரசியலுக்கு வராமல் விட்டிருந்தால், சிலவேளை சிறந்த எழுத்தாளராகியிருப்பார்.

Continue Reading →