வாசிப்பும், யோசிப்பும் 203: எழுத்தாளர் சொக்கன் முற்போக்கிலக்கியவாதிகளிலொருவர்!

எழுத்தாளர் சொக்கன்சொக்கனின் 'சீதா' நாவல் (வீரகேசரி பிரசுரம்)– யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் வருடாந்த நிகழ்வான ‘கலையரசி 2016’ விழா மலருக்காக, எழுத்தாளர் சொக்கனைப்பற்றிச் சுருக்கமாக எழுதிய கட்டுரையிது. –


ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர், ஆசிரியர்கள் பலர் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அவர்களில் சொக்கன் என்றழைக்கப்படும் கலாநிதி கந்தசாமி சொக்கலிங்கம் அவர்களுமொருவர். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் சொக்கன்.  யாழ் ஸ்ரான்லி கல்லுரியில் இடைநிலைக்கல்வியைக்கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான், இளநிலை, முதுகலை ஆகிய பட்டங்களுடன் கெளரவக் கலாநிதி பட்டங்களையும் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றியவரிவர்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், நாடகம் , இலக்கிய ஆய்வு என சொக்கனின் பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், சைவ மதத்துக்கும் மிகுந்த பங்களிப்பு செய்திருக்கின்றார் சொக்கன். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் ‘தமிழ்மாமணி’, இந்துக் கலாச்சார அமைச்சின் ‘இலக்கியச்செம்மல்’ , அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ‘மூதறிஞர்’ பட்டத்தினையும், விடுதலைபுலிகள் அமைப்பு வழங்கிய மாமனிதர் பட்டத்தையும்  பெற்றவர்..

இவரது ‘கடல்’ சிறுகதைத்தொகுப்பு 1972ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசினைப்பெற்றுக்கொண்டது. ‘வீரத்தாய்’, ‘நசிகேதன்’, ‘நல்லூர் நான் மணிமாலை’, ‘நெடும்பா’ ஆகிய கவிதைத்தொகுதிகள், ‘சிலம்பு பிறந்தது’, ‘சிங்ககிரிக் காவலன்’ ஆகிய நாடகங்கள், ‘சீதா’, ‘செல்லும் வழி இருட்டு’ ஆகிய நாவல்கள் மற்றும் ‘ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி’ (முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட ஆய்வு நூல்) ஆகியவவை அவரது இலக்கிய வரலாற்றைச்சிறப்பிப்பவை.

Continue Reading →