முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.

முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.       ‘2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து இன்றைய காலகட்டத்தை உபயோகித்து, தமிழர்களுடைய போராட்ட வரலாற்றையே ஆராய்ந்து பார்த்துள்ளது இந்த நூல். தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்நது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு என்ற ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்கள் பற்றியும் பக்க சார்பில்லாமல் இந்நூலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜெயபாலன். ஜனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தார்மீகப் போராளியின் பதிவாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்’ என்று அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் அண்மையில் கிழக்கு லண்டன் றினிற்ரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூல் அறிமுகத்தின்போது அந்நூல் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வி.சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் ‘2008 – 2009 ஆண்டுக் காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த அவலங்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஜெயபாலன் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார். ஜெயபாலன் என்ன அரசியல் நிலைப்பாட்டில் இருந்தார் என்பது இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இதில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தேசியத்தைக் கைவிட்டு சிறீலங்காவின் தேசியத்துள் கரைந்து போய்விடவேண்டும் என்றுதான் கூறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எரிச்சோல்ஹைம் போன்ற வெளித்தரப்பு அதிகாரங்களின் ஏவலாளிகளுக்கு கொடுக்கின்ற மதிப்பை எங்களுடைய புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கின்றபோது எழுகின்ற வினா. ஆனாலும் ஜெயபாலன் உண்மையிலேயே ஜனநாயகத்திலும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றத்திலும் ஆர்வமுடையவர் என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்றும் தெரிவித்தார்.

‘இந்த நூல் அறிமுவிழாவில் அரசியல் ஆய்வாளரும், ஒரு பேப்பர் ஆசிரியருமான கோபி ரத்தினம் பேசுகையில்: இது மிகவும் முக்கியமானதொரு பதிப்பு. இது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அலட்சியப்படுத்த முடியாதது. உடனுக்கு உடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவ்வப்போது தொகுத்து மிகவும் நிதர்சனமான உண்மையயை சந்தேகத்திற்கு இடமின்றி பதிவு செய்துள்ளது இந்நூல். தனித்துவமான மனிதனாக இருந்து ஜெயபாலன் ஒரு பார்வையாளனின் பதிவாக இந்நூலைக் கொண்டுவந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

Continue Reading →

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
வயல்வெளித் திரைக்களத்தினர்
புதுச்சேரி – 605 003
தொடர்புக்கு: 9442029053


நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்தது யார்? இப்படிப் படைப்பதற்கான காரணம் என்ன? இறைவன் உண்டா? இல்லையா? இறைவன் தான் என்னைப் படைத்தான் என்றால் இத்தனைத் துன்பங்களை ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறாக வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்விகளை உள்ளடக்கியது மெய்யியல்.

தத்துவம் என்ற சொல் மெய்யியல் என்பதற்கு நிகரான சொல் இல்லை. தத்துவம் என்பது அது நீ, நீயே பிரம்மம். என்று பொருள் தரும் வடசொல். மெய்யியல் என்பது இதிலிருந்து வேறுபட்டது. வாழ்வின் அடிப்படை என்ன? மனித துயரங்களுக்கு எது காரணம்? என்று ஆராய்வது.  வள்ளுவர் கூறுவது போல ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும்’ (355) – ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது’ (423) – மெய்யியல். மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியலாகும்.

மேற்கத்திய  மெய்யியலாளர்  மெய்யியல் என்பதை   நான்கு  கூறுகளாகப்  பகுக்கின்றனர். 1.   நுண்பொருளியல்    (meta pshyics),  2.  அளவையியல்   (logic),   3. அறவியல் (ethics),      4. அழகியல் (esthetics) என்பனவாகும். வாழ்வின் அடிப்படை எது என்று ஆராய்வது நுண்பொருளியல். ஆய்வுக்கான தர்க்கம் பற்றியது அளவையியல். அறவியலும், அழகியலும் வாழ்வின் பிற கூறுகள். மேற்கத்திய மெய்யியல் கூறுகள் இவை என்றால் இந்திய மெய்யியலையும் இதே கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்யமுடியும். இவ்வகையில் தமிழ் மெய்யியலையும் ஆய்வுசெய்யலாம்.

தமிழ் மெய்யியல் கருத்துகள் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் உலகாய்த சிந்தனைகளைக் கொண்டுள்ளதை இனங்காணமுடியும். உலகாய்தமாவது ‘கடவுள், மாயை, பிறவிசுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாய்தம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், உலக உடன்பாட்டுச் சிந்தனையும் கொண்டது.  இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது’ (உலகாய்தம், வீக்கிப்பிடியா).   இவற்றை முன்வைத்து இவ் ஆய்வு அமைகிறது.

Continue Reading →