ஆய்வு: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.   

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியல்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.

மெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.

(1)    மெய்ப்பாடுகளின் வகை
1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.

‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப.’ – (பொருள். 245)

2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.

‘நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.’ – (பொருள். 246)

Continue Reading →

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.

இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.

பேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு, ‘ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்’ என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

இனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன.

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்!

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான…

Continue Reading →

கவிதை: ஓவியன் பெரேடைப் பற்றி

அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையதுஅங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை…

Continue Reading →

பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் ‘பண்டைத் தமிழர் பண்பாடு’ பற்றி……..

குரு அரவிந்தன் – கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 25-09-2016 தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைவர் உரையில் இருந்து ஒரு பகுதி..-

இன்றைய விழாவின் நாயகரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆவர்களே, என்றும் அவருக்குத் துணையாக நிற்கும் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களே, இன்றைய நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களே, மற்றும் மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களே, சபையோர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மாலை வணக்கத்தை முதற்கண் தெவிவித்துக் கொள்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் பண்டைத்தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்திருக்கின்றது.

‘ஈழத்தமிழரின் வரலாறு இலகு தமிழில் எழுதப்பட வேண்டும்’ என்ற மதிப்புக்குரிய  விபுலாந்த அடிகளின் கனவை, அண்ணாமலை கனடா வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம் அவர்கள் இன்று இந்த வரலாற்று நூலான பண்டைத் தமிழர் பண்பாடு என்ற நூலை வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நான் இன்னும் முழமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் அட்டைப் படத்தைப் பார்த்த போது மிகப் பழைய காலத்து தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு நூலாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த நூலுக்கான மதிப்புரையை முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கின்றார். கடல் கோள்களால் அழிவுற்ற குமரிக்கண்ட நாடுகளைப் பற்றியும், மெசப்பெத்தோமிய, சுமேரிய நாகரிகங்களின் அடிப்படை வரலாற்றுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களின் பாரம்பரியம் என்ன என்பன பற்றியும் இந்த நூல் எடுத்துச் சொல்வதை அடிக் குறிப்புகளைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மொழியின் தொன்மையையும், பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றியும், தமிழ் எழுத்துக்கள் பற்றிய ஆய்வினையும், தமிழர்களின் இசையறிவு, கலையறிவு, சிற்ப அறிவு போன்றவற்றையும் இந்த நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

Continue Reading →