நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்! இந்தியாவின் ஆத்மாவை யதார்த்தம் சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும் திரையிலும் காண்பித்த கலைஞன் ஜெயகாந்தன்!

நூறாண்டுகள்       நிறைவடைந்த       இந்திய        சினிமாவில்     ஜெயகாந்தனுக்குரிய     இடம்! இந்தியாவின்     ஆத்மாவை      யதார்த்தம்      சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும்      திரையிலும்     காண்பித்த     கலைஞன்   ஜெயகாந்தன்!தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர்  ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் – திரைப்பட இயக்குநர் என பன்முக  ஆளுமை  கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.

அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும்  ஐரோப்பிய மொழிகளிலும்  வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக  மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்டவர்.  ஜெயகாந்தனிடம்  பாரதியின்  இயல்புகளும் இருந்தன. ஜெயகாந்தனும்  தமிழ்  சினிமாவும்  என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின் பொழுது  அவர்  நினைவாக சமர்ப்பித்தேன்.  இக்கட்டுரை  தமிழ்நாடு  குமுதம்  வெளியீடாக வந்த ஜெயகாந்தன்  சிறப்பு  நூலிலும்   இடம்பெற்றதாக  அறிகின்றேன்.

சென்னையில்  தமிழ்  ஸ்ரூடியோ  என்ற  அமைப்பு  தற்பொழுது நூறாண்டுகள்  நிறைவடைந்த  இந்திய  சினிமா தொடர்பாக கருத்தரங்குகளும்  திரைப்பட  அரங்குகளும் நடத்திவருகின்றது. படைப்பிலக்கியவாதியான ஜெயகாந்தன் தமிழ் சினிமாவுக்குள் சுயமாக  நுழைந்து,  தனது  சுயத்தை  இழந்துவிடாமல் கௌரவமாக  விலகி  வெளியே  வந்தவர்.

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?

பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல்  தமிழ் சினிமா இல்லை.

இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில்  (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். அவர்  சொல்கிறார்: “எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால்    இயக்குநர்களுக்கு    ஆழமான    இலக்கியப்பரிச்சயம்    தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி  இயல்புகள் சாத்தியக்கூறுகள்   –    இவை   பற்றிய ஒரு     பிரக்ஞை     வேண்டும்.     அதுமட்டுமல்ல      திரையும் எழுத்தும் தத்தம்    இயல்புகளில்    மிகவும்    வேறுபட்ட    ஊடகங்கள் என்பதையும்      உணர்ந்திருக்கவேண்டும்.      வங்காள    –    மலையாள சினிமாக்களில்  இத்தகைய     புரிதல்    இருபுறமும்   இருப்பதைக்காணலாம்.     அங்கிருந்து      வரும்     பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில்     பெருவாரியானவை      ஒரு      இலக்கியப்படைப்பையே     சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம்.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 199 : இலங்கைச்சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள்!

அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்“கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?

அண்மையில் அகால மரணமடைந்த பின்னர்தான் பலருக்குக் கேலிச்சித்திரக்காரர் (Cartoonist) அஸ்வின் சுதர்ஸன் பற்றி தெரியவந்தது. அவரது படைப்புகள் மீது பலரின் கவனமும் திரும்பியது. என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

அவரது இங்குள்ள கேலிச்சித்திரம் (நன்றி: தமிழ்வின்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிந்த ராஜபக்சவின் கையிலிருந்த ஆட்சி அமைதியான முறையில் மைத்திரி பால சிறிசேனாவின் கைக்கு மாறியது. ஆனால் இன்னும் அரசியல் கைதிகளின் நிலை மாறாதது ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்புகிறது. ஏன் என்ற கேள்விக்குத் தர்க்கரீதியான விடையேதும் கிடைக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அரசை எதிர்த்துப்போரிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் அஞ்சாத அரசு எதற்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தவர்களையெல்லாம் ஆண்டுக்கணக்காக இன்னும் சிறைகளில் வைத்திருக்கின்றது? உண்மையில் அவர்களைச்சிறைகளில் வைத்துப் பராமரிப்பதால் அரசுக்கு வீண் செலவுதான் ஏற்படுகிறது.

இவ்வளவு காலமும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவ்வரசியல் கைதிகள் பலர் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை வெளியில் விட்டால் மேலும் பல குற்றங்களை அரசுக்கு எதிராக அவர்கள் கூறுவார்கள் என்று அரசு நினைக்கின்றதோ? பின் எதற்காக அவர்களை இன்னும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்?

Continue Reading →

சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்

அண்மையில் இலங்கையைச்சேர்ந்த ‘கேலிச்சித்திரக்காரரும் (Cartoonist) ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் விபத்தொன்றில் அகால மரணமடைந்ததாக ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளன. அது பற்றிய தமிழ்வின் செய்தியினை இங்கு…

Continue Reading →