எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’! –

அனைவருக்கும் வணக்கம், கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’!  -

Continue Reading →

எழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்

குரு அரவிந்தன் – சென்ற மாதம் அமரரான திரு. ஈஸ்வரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதிய கட்டுரை ஒன்று  அவரது நினைவாக இக்கட்டுரை! –

மதிப்புக்குரிய மனிதர் தெ. ஈஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து தனது சிறுகதைத் தொகுப்பைத் தனது நண்பர் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார். அதனால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதற்கதையை வாசித்ததில் ஏற்பட்ட ஆர்வம் எல்லாக் கதைகளையும் வாசிக்கத் தூண்டியது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இவரது எழுத்தாற்றல் இவரை ஒரு படைப்பாளியாக இனங்காட்டி என்னை வியக்க வைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருக்கும் மனிதாபிமானியின் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும், இதைக் கட்டாயம் ஆவணப் படுத்த வேண்டும், இச்சிறுகதைகளை வாசிப்பதால் வாசகர்கள் பலனடைய வேண்டும் என்பதால் இதை எழுதுகின்றேன்.

இந்த நூலுக்கு ‘ஈஸ்வரனின் சிறுகதைகள்’ என்று தலைப்புக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. வானதி பதிப்பகத்தார் அழகாக ஒழுங்கமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். காந்தளகம் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சேற்றி இருக்கிறார்கள். இதற்கான படங்களை ஓவியர் ராஜே அவர்கள் வரைந்திருக்கிறார்கள். இதற்கான அணிந்துரைகளை சொல்வேந்தர் சுகிசிவம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவர் நல்ல நட்புக்கு முதலிடம் கொடுப்பதால் தனது நண்பர்களாகிய எழுத்தாளர் ஈழத்து சோமு என். சோமகாந்தன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். திரு. ஈஸ்வரனின் பதினாறு சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

சின்னச் சின்னச் சம்பவங்கள், சிறிய அதிர்வுகள், வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் பார்வை, மனிதவாழ்வின் தீராத பிரச்சனைகள், சோகம், ஆசை, எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் ஆசிரியர் ஈஸ்வரன் பதிவு செய்திருப்பதாக சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் கன்னி முயற்சி, இது போன்ற  ஆக்கங்களை அடிக்கடி படைத்து வாசகர் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்று வீரகேசரி வார இதழ் ஆசிரியர் ஆர். பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இதனைப் பொழுது போக்கிற்கான படிப்பு என்று எண்ணாமல், வாழக்கைக்குப் பாடமாகத் தெரிகின்ற கதைகள் என்று எண்ணிப் படிக்குமாறு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நூலாசிரியர் பற்றி சிறு குறிப்பு ஒன்றைத் தருகின்றேன்.

Continue Reading →

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும்!

சுப்ரபாரதிமணியன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.  திருப்பூர்  மாவட்டம்!

* மார்ச்  மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். | * மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர். | *

3 நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  ” மறைந்து வரும் மரங்கள்  -“ முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) வெளியிட சசிகலா, பிரணிதா, பிஆர்நடராஜன் பெற்றுக்கொண்டனர்.
* செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “-
-செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “ நூலை ( எதிர் பதிப்பகம் , பொள்ளாச்சி) தமுஎக சங்க ஈஸ்வரன் வெளியிட , பிஆர்கணேஷ், பொன்னுலகம் குணா பெற்றுக்கொண்டனர்
* ம. நடராசன்  – நாவல் “ விசக்கடி “முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) ம. நடராசன்  – நாவல் “விசக்கடி “ வெளியிட, கே.தங்கவேல்    ( Ex MLA), பெற்றுக் கொண்டார்

முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) உரையில்.. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏழாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் பள்ளிகளின் கட்டமைப்பிலும் ஆசிரியர்களின் குறைபாட்டிலும் பள்ளிகள் அப்படியே ஏகதேசம் உள்ளன..குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய் செயல்வழிக்கற்றல் முறை குறித்து கூடுதல் கவனம் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு கல்வி சாராத, பள்ளி சாராதாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவ்ர்கள் மேல் பனி அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.

ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. குழந்தைகளின் கலவிக்காகப் பெற்றோர் உழைத்துச் சேமித்த தொகை முழுவதும் செலவு செய்யவேண்டியுள்ளது. கலவிக்கடன்க்காக்க் கிடைத்த சம்பளத்தில் படித்து முடித்தபின் குழந்தைகள் வேலை செய்ய வேண்டியுள்ளது. தரமான கல்வி கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் தரமற்ற ஆசிரியர்களைக் கொண்டு நட்த்துவதால் இப்படி நேர்கிறது.  தாய்மொழி வழியில் கற்பது தலைசிறந்த கல்வியாக அடிப்படை சிந்தனையை வளர்க்கும் கல்வியாகும். பிறமொழிகள் தேவை கருதி ஆர்வம் கருதி கற்கலாம் . திணிப்பு வேண்டாமே.  சமச்சீர் கல்வி அரசு ஏற்று நடத்துவது, அருகமைபள்ளிகள், சேவை நோக்கிலான கல்வியை அனைவருக்கும் தரும் நோக்கத்தை அரசுகள் கைக் கொள்ளவேண்டும்.

Continue Reading →

” அவுஸ்திரேலியாவில் வதியும் சிங்கள தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்ட ‘கெயர்லங்கா’ அமைப்பு அம்பாறையிலும் கண்டிப்பகுதிகளிலும் சமீபத்தில் இஸ்லாமிய மக்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக கண்டிக்கிறது,”

" அவுஸ்திரேலியாவில் வதியும் சிங்கள  தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்ட 'கெயர்லங்கா' அமைப்பு அம்பாறையிலும் கண்டிப்பகுதிகளிலும் சமீபத்தில் இஸ்லாமிய மக்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக கண்டிக்கிறது,"

” அவுஸ்திரேலியாவில் வதியும் சிங்கள  தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்ட ‘கெயர்லங்கா’ அமைப்பு அம்பாறையிலும் கண்டிப்பகுதிகளிலும் சமீபத்தில் இஸ்லாமிய மக்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக கண்டிக்கிறது, மிகவும் கவலை கொள்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும்  இலங்கை வன்முறையில் மூழ்கக்கூடாது. வன்செயல்களை யார்  உருவாக்கினாலும் அவர்கள் மீது  முறையான விசாரணைகள்  மேற்கொண்டு  சட்டத்தினால்  தண்டிக்கப்படவேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கவேண்டிய  பாதுகாப்புத்துறையினர்   அமைதியை நிலைநாட்டவேண்டும். ”  இவ்வாறு  அவுஸ்திரேலியா “கெயார் லங்கா” அமைப்பின் தலைவர் டொக்டர் நடேசன் அமைப்பின் சார்பாக  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Continue Reading →

தம்பா (நோர்வே) கவிதைகள்: ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு.

1. ஏட்டிக்குப் போட்டி.

- தம்பா (நோர்வே) -பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன்  வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.

பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து  தவறிழைக்க.

Continue Reading →

ஆய்வு: மூதுரையில் வாழ்வியல் சிந்தனைகள்

- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். - நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.

ஓளவையார்:
ஓளவையார் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் அவ்வை, தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண், அம்மை, அன்னை என்று விளக்கம் தருகின்றன.  பொருளுக்கு ஏற்ப ஒளவையின் உருவமும் கற்பனை செய்யப்பட்டது. மதிப்புமிக்க முதிர்ச்சி பெற்ற தவமகள் ஒருத்தியின் திருத்தோற்றமே நம் கண்முன் நிற்கிறது. வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த பெண் புலவர்கள் ஒளவை என்ற பெயரில் தங்களை அழைத்துக் கொண்டதாக ஆய்வாளர் சுட்டுவர்.  ஓளவை என்ற பெண் கவிமரபு பல்வேறு காலங்களில் தொடர்ந்திருக்கிறது.  சங்க காலத்திலும் அதற்குப்பிறகும் வாழ்ந்த ஒளவையார் பலரென்பர்.  அவர்களுள் நீதிநூல்களைப் பாடிய சோழர்கால ஒளவை கி.பி.12ஆம் நூற்றாண்டினர் என அறிஞர் மு.அருணாச்சலம் கருதுகிறார். ஆடவரைச் சார்ந்து பெண் ஒழுகவேண்டும் என்ற அடிமைத்தனத்தை சங்ககால ஒளவை முன்மொழியவில்லை. ஆனால் ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிருத்தப்பட்டனர்.

மூதுரை:
மூப்பு 10 உரை ஸ்ரீ மூதுரை, மூத்தோர் 10 உரை ஸ்ரீ மூதுரை எனவும் பதம் பிரிப்பர்.  மூதுரை கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களை உடையது.  நம் முன்னோர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வேண்டிக் கொண்ட பின்பே ஆரம்பிப்பார்கள்.  முழுமுதற் கடவுளுமான தும்பிக்கையானாகிய விநாயகனைப் போற்றிப் பணிந்த பிறகே எதையும் தொடங்குவார்கள்.  ஓளவையார் மூதுரையைப் பாடும் முன் வேழமுகத்தானை வணங்கித் துதிக்கிறார்.     வாக்குண்டாம் என கடவுள் வாழ்த்துப்பாடல் தொடங்குவதால் மூதுரை “வாக்குண்டாம்” எனவும் வழங்கப்படுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்:-
நீதிநூல்கள் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்தியம்புகின்றன. நம் பெரியார்கள் மக்கள் நேர்மையாக வாழ்ந்து பண்பாளர்களாகத் திகழவேண்டும் என்று சின்னச்சின்ன வார்த்தைகளில் நீதிகளைக் கூறினார்கள்.  மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறுதிநாள் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வியல் நோக்கில் மனித சமூகம் நாளும் வளர்நிலை பெற்றுவருகின்றது. வாழ்வியல் நோக்கம் மனித சமுதாயத்தில் நிலைபெற்று உள்ளது. வாழ்வின் மேம்பாடு இன்றைய காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் மேன்மை பெற்று உள்ளது.    

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஓர் ஒளவையார். அரிதாகக் கிடைக்கப் பெற்ற மானிடப் பிறவியை பண்பட்டதாக வாழ வாழ்வியல் சிந்தனைகள் வளமானவையாக இருக்க வேண்டும்.  இன்று ஊhடைன ளுpநஉயைடளைவ என்று கூறுவதைப் போல குழந்தைகளுக்காக உள்ள பாடல் வரிசைகளில் ஒளவையாரின் பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும். ஒளவையார் மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் சிந்தனைகளை குழந்தைகளுக்காகப் பாடினாலும் பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியவையாக உள்ளன எனலாம்.

Continue Reading →

ஆய்வு: கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்தெளிதல், இல்லது காய்தல், உள்ளது உவத்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பாதல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ ஆகியவற்றை தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.24)  இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1 தெய்வம் அஞ்சலும் அகநானூறும்
தெய்வமஞ்சலென்பது, “தெய்வத்தினை யஞ்சுதல்” (இளம்.மெய்.24) எனவும், “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தபாதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்;  அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது மற்றுத் தனக்குத்  தெய்வந் தன் கணவனாகலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சபடுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது-ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் – இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபாடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும்.” (குழந்தை. மெய்.24) எனவும், “களவின் கண்ணும் வரைவின் கண்ணும் “பிரியேன் பிரியின் தரியேன்” எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக  ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊருநேருங்கொல் எனக் கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவ பொருளாகவும் கிளவியாகத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வம் என்பது பெறப்படும்.”  (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

தலைவனின் சூள் பொய்த்தவழி அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சும் தலைவி தெய்வத்தைப் போற்றல் தெய்வமஞ்சலெனப்படும். இங்கு தெய்வமெனப்படுவது ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலானோரைச் சிறப்பாகக் குறிக்கும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறுந்.87, கலி.88 ஆகிய பாடல்களையும், பேராசிரியர் கலி.16, 75, தொல்.கற்.5 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.87 ஆம் பாடலையும் குழந்தை, கள.6 ஆம்  நுற்பாவையும், பாலசுந்தரம் கலி.16, 75 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

Continue Reading →

ஆய்வு: கற்பிற்குரிய மெய்ப்பாடுகளும் மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை, மனன் அழியாதவழி புலப்படுவன எனவும்;  மனன் அழிந்தவழி புலப்படுவன எனவும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.23-24) இவ்வியலில் மேற்கூறிய மெய்ப்பாடுகளையும் அதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும்
மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளாக, முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை ஆகியனவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்.மெய்.23) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1:1.முட்டுவயிற் கழறலும் அகநானூறும்
முட்டுவயிற் கழறலென்பது, “களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனை கழறியுரைத்தல் என்றவாறு.”(இளம்.மெய்.23.) என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். முட்டுவயிற் கழறலென்பது களவுக்காலத்து தலைவியைக் குறியிடத்துச் சந்திக்க இயலா காலத்து நேர்ந்த முட்டுப்பாடு காரணமாக தலைவனை கழறி உரைத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.296ஆம் பாடலையும்;  மேலும் பாரதி, பாலசுந்தரம், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர்,

“நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றார் றோழிநங் களவே”(அகம்.122)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நொச்சி வேலியாகச் சூழ்ந்து நிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி நொச்சிவேலிப் புறங்காடு என்க என்பதில் ‘பலமுட்டின்றால் தோழிநங் களவே’ என்பது முட்டுவயிற் கழறலாகும். இதில் இரவு நேரச் சத்திப்பு இத்துணைத் தடைகளை உடையது. ஆகையால் விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தலைவனை வற்புறுத்துவது இதிலுள்ள குறிப்பு.

1:1:2 முனிவு மெய்ந்நிறுத்தலும் அகநானூறும்
முனிவு மெய்ந்நிறுத்தலென்பது, “வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலமையும்.”(பேரா.மெய்.23.)  எனவும், “வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.”(பாலசுந்.மெய்.23)எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இவற்றுள் இளம்பூரணர் ‘வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை’ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் ‘வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை’ எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல், என்பது கோடாமை தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். இதனை விளக்க, பாரதி, குறுந்.218 ஆம் பாடலையும்; மேலும், பாரதி, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறுந்.4 ஆம் பாடலையும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

Continue Reading →

ஆய்வு: உவகையெனும் மெய்ப்பாடும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்1. இக்கட்டுரையில் உகையெனும் மெய்ப்பாடும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. உவகையெனும் மெய்ப்பாடும் அதன் விரிகளும்
உவகையெனும் மெய்ப்பாட்டின் விரிகளாக, செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினையும் கூறுகின்றார் தொல்காப்பியர்151 என மேலே சொல்லப்பட்டது. இந்நான்கு விரிகளையும் விளக்கும் உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
உவகையென்பது,

“உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.”152
என பேராசிரியரும்;

“ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனோடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து.
புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைத்தலும்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே.”

எனச் செயிற்றியனார் விரித்தோதினாராயினும் இவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கும்.”153

Continue Reading →

சித்தர்கள் …… வைதீகர்களே!

சித்தர்கள் …… வைதீகர்களே!இந்தியாவில் வைதீக சமயம் தனக்கானக்கட்டமைப்பை எல்லாப் படிநிலைகளிலும் உருவாக்கிக் கொண்டுள்ளது. வைதீகம் வேதங்களையும் உபநிடதங்களையும் முதன்மையாகக் கொண்டு அதையே கடைபிடித்து, சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வாழ்தலே வைதீகத்தின் உள்ளார்ந்த பொருளாகும். “இந்துமதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒருதத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது.  வடமொழி, வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது” எனத் தொ. பரமசிவன் கூறுகிறார். (தொ.பரமசிவன் சமயங்களின் அரசியல்,ப.63) இச்சமய அவதானிப்பில் இருந்த நெருடல்களைக் கண்டு வெகுண்டு ஒதுங்க நினைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள், காலங்காலமாக நம்மிடையே பழகிப்போன வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழிபாட்டு மரபின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம்.  சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் சமயத்தின் மீது இருந்த பற்றையும் பொது அடையாளமாக வெளிக்காட்டவும் முனைந்தவர்கள்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட – சித்தர்கள் யார்? – எங்கிருந்து வந்தார்கள்? – கலகக் குரலுக்குரியவர்களா? – அவர்களுடைய குரல் யாருக்கான குரல்? – சமயப்புறந்தள்ளிகளா? – இயற்கை வாழ்வியல் விரும்பிகளா? – புது வழிபாட்டு முறையை உருவாக்கியவர்களா?  – சமூக சிந்தனையாளர்களா? – என்பன போன்ற வினாக்களை எழுப்பிக்கொண்டு, சித்தர்கள் வைதீக மரபை தக்கவைக்க புறப்பட்ட வைதீகர்களே என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு சித்தர்களின் இலக்கியப் பதிவுகளின் வழியாக விடைகாண முயல்கிறது இக்கட்டுரை.

சித்தர்களின் காலம்
சித்தர்களின் காலத்தைச் சரியாக வரையறைசெய்ய இயலவில்லை.  அறிஞர்கள் பலரும் பலவிதமாக கருத்துக் கூறுகின்றனர். சதாசிவ பண்டாரத்தார் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டே சித்தர்கள் காலம் என்கிறார்; வி. செல்வநாயகம் கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று குறிப்பிடுகிறார்.  எம்.எஸ். பூரணலிங்கம்பிள்ளை 8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை சித்தர்கள் காலம் என்கிறார். மு. அருணாசலம் மற்றும் மு. இராதாகிருஷ்ணன் இருவரும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.  நீலகண்ட சாஸ்திரி, ஹண்டர், கால்டுவெல், தெ.பொ.மீ. போன்றோர் 16ஆம் நூற்றாண்டு என்கின்றனர்.  ஆனால், கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சித்தர்கள் காலமாகக் கொள்ளலாம்.  இக்காலகட்டம் சித்தர்கள் பெருமையாக பேசப்பட்ட காலப்பகுதியாகும்
.
மேற்கண்ட முரண்பட்ட கூற்றுகளால் சித்தர்களின் காலத்தை உறுதிசெய்ய இயலவில்லை.  ஆனால், சமயவாதிகளின் கருத்து ஒற்றுமை காரணமாகச் சமூகம் சார்ந்த நிலையிலும், ஆன்மீக நிலையிலும் இறைவனைஅடைவதற்குரிய நெறிமுறைகளைச் சொன்னவர்கள் சித்தர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Continue Reading →