‘நெய்தல்’ கவிதைக்கான இதழ் 2

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

உங்களின் படைப்புக்களுடன் இவ்வாரம் வெளிவருகிறது. இதழின் அச்சுப் பிரதி தேவையானோர் சந்தாவைச் செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம். பி.டி.எப் வடிவம் தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நெய்தலின்  இதழ் ஒன்றிற்கும் (2017),இரண்டிற்குமான (2018) இடைவெளி சற்று அதிகம் தான்.
கவிதைக்கான இதழ் ஆரம்பிக்கவேண்டும் என்ற கனவின் வெளிப்பாடே நெய்தலின் வருகை.எனினும் வழமையான வாழ்வியல் அசௌகரியங்களால் தாமதமாகின..
தொடர்ந்து காலம் பிசகாது வெளிக்கொணர முயற்சிக்கிறோம். நெய்தலை  இதர படைப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்.

Continue Reading →

உலகப் பெண்கள் தினவிழா!

– இவ்வறிவித்தலைப் பிரசுரிப்பதில் தாமதமாகிவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இதனைப் பதிவு செய்கின்றோம். – பதிவுகள் –

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

உலகப் பெண்கள் தினவிழா!இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு வரும் சனிக்கிழமையன்று மார்ச் 3ஆம் திகதியன்று பிற்பகல் 230 தொடக்கம் 530 மணி வரை கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கருத்து ரீதியான நிகழ் வுகளையடக்கிய விழாவை நடாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கென பெண்களால் நடாத்தும் விழா இது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Continue Reading →

அ.ந. கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்…

அன்புடன்  சகோதரர்க்கு வணக்கம்! நலமாக இருப்பீhகள் என நம்புகிறேன். இத்துடன் மகளிர் தினத்துக்குக்கான கட்டுரை அனுப்புகிறேன். அ.ந. கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள் தொடாச்சியாகபடித்துவருகின்றேன். நான் சிறுமியாக இருந்தவேளை…

Continue Reading →

சர்வதேச மகளிர் தினம் ‘இதுதான் நேரம்’

சர்வதேசப் பெண்கள் தினம்- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -தொனிப்பொருள்
2018 ஆம் ஆண்டின் மார்ச் எட்டாம் திகதியில் நடைபெறும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாக ‘இதுதான் நேரம்’ (வுiஅந ளை ழெற)   அமைகின்றது. கிராமிய நகர்ப்புறச் செயற்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினமானது முன்னர் என்றும் இல்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் உரிமைகள், சமத்துவம், பெண்களுக்கான சமூகநீதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் பின்னணியில் இடம்பெறுகின்றது.

பாலியல் தொந்தரவுகள், பெண்களின் மீதான வன்முறைகள், பெண்களுக்கெதிரான பாகுபாடு என்பன பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகாக இடம்பெற்று வருகின்றன. உலகெங்கிலும் பொது அரங்குகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. இந்த அநீதியான நிலை மாற வேண்டும் என்ற உணர்வு முன் என்றுமில்லாத வகையில் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளது. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடாத்தப்படும் ஒரு ஒளி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். உலகின் மிகப் பெரும் தலைநகரங்களில் எல்லாம் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கெதிராக இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து சாதாரண கிராமங்கள் வரை பெண்கள் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் பெண்களின் போராட்டம்
மன்னாரைத் தளமாகக்கொண்டு செயற்பட்டு சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பாலியல் சமத்துவத்துக்காவும், பெண்களுக்காகவும்  அயராது போராடி வரும் திருமதி ஷெரீன் அப்துல் சறூர் அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு லண்டனில் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் பெருமையோடு இத்தினத்தில் பாராட்டுகின்றேன்.

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கூறி இடம்பெற்று வரும் நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் பெண்களே அணிதிரண்டுள்ளனர். காணாமல் போன தங்களின் கணவர்களுக்காகவும், புதல்வர்களுக்காகவும் வீதிகளில் நின்று காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டும், சுலோகங்களைக் கோசித்துக் கொண்டும் பெண்களே நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். கணவன்மாரை இழந்த நிலையிலும் அவர்கள் அங்கவீனர்களாகிப்போன நிலையிலும் பெண்களே குடும்பச் சுமைகளைத் தங்கள் தோளில் சுமந்து வருகின்றனர்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: திரைப்பட ரசனை வகுப்பு & அழியாத கோலங்கள் திரையிடல்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

தொடங்கி வைத்து திரைப்பட ரசனை குறித்து பேசுபவர்: இயக்குநர் வெற்றிமாறன் | 18-03-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு. | MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். | தனி நிகழ்விற்கு: சந்தா 100 ரூபாய்.

நண்பர்களே சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் தொடக்க விழா மற்றும் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரையிடப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன் திரைப்பட ரசனை பற்றிய அறிமுக வகுப்பும் எடுக்கவிருக்கிறார். மிக முக்கியமான இந்த நிகழ்வில் இன்னும் 50 பார்வையாளர்கள் மட்டுமே இணைய முடியும். இது பொது நிகழ்வல்ல, எல்லாரும் கலந்துக்கொள்ள இயலாது. உறுப்பினர்கள் அல்லது திரைப்பட சங்க விதிமுறைப்படி சந்தா செலுத்தியே பங்கேற்க முடியும். இந்த தொடக்க விழாவிற்கு கட்டணம் நூறு ரூபாய். முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தனியே சந்தா செலுத்த தேவையில்லை. புதிய நண்பர்கள் பியூர் சினிமா அலுவலகத்தில் நூறு ரூபாய் சந்தா செலுத்தி உடனே உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன், இந்த நிகழ்வில் இன்னும் 50 வரை மட்டுமே கலந்துக்கொள்ள இயலும். எனவே உங்கள் இருக்கையை உறுதி செய்ய உடனே சந்தா செலுத்தி நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நேரில் வந்து 100 ரூபாய் செலுத்த இயலாதவர்கள் அலைப்பேசியில் உங்கள் பெயரை பதிவு செய்து நிகழ்வு நடக்கும் அடுத்த ஞாயிறு MM திரையரங்கில் நேரில் பணம் செலுத்தி நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம்.

Continue Reading →

அண்மைய முஸ்லிம் – சிங்கள இனக்கலவரம் பற்றி…

அண்மைய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் பற்றி...இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு. அண்மையில் நடந்து சற்றே தணிந்துள்ள சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகளைப் பார்த்தேன். பலவற்றிலும் வதந்திகளின் அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மீது குற்றஞ்சாட்டும் இனக்குரோதம் மிக்க பதிவுகளையும் பார்த்தேன். நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையில் தமிழர்களின் பதிவுகள் சில உணர்ச்சி மிக்கவையாக, இனக்குரோதம் மிக்கவையாக இருந்தன. சென்றவை சென்றவையாகவே இருக்கட்டும். குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் அனைவர் பக்கம் தவறுகள் உள்ளன. நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்கள் படிக்க வேண்டுமே தவிர அவற்றையே கூறிக்கொண்டு அவற்றில் குளிர் காய முடியாது. ஆனால் தற்போது நடைபெற்ற கலவரச்சுழலில் நான் அவதானித்த நம்பிக்கை தரும் ஆரோக்கியமான நடவடிக்கைகளாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன்:

இம்முறை தென்னிலங்கையில் ஊடகங்கள் அல்லது சிங்கள் மக்கள் பலர் நடந்து முடிந்த கலவரத்தையிட்டு வாய் மூடி மெளனத்திருக்கவில்லை. ‘கலம்போ டெலிகிறாப்’ பத்திரிகையில் கலவரத்தை அடக்காமல் பார்த்துக்கொண்டிருந்த காவற் துறையினரைப் பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளைக் காணொளி ஆதாரங்களுடன் பிரசுரித்துள்ளது. கலவரத்துக்குக் காரணமான பெளத்த துறவியை உடனடியாக இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள் மக்களில் பலர் இத்துறவியின் நடவடிக்கையை மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்வினைகளை இணையத்தில் வாசித்தேன். பாராமுகமாகவிருந்த காவல் துறையினரையும் கண்டித்திருக்கின்றார்கள். அதன் பின்னராவது காவற் துறையினர் கலவரத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அரச பத்திரிகையான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் கூட உடனடியாகக் கலவரத்தைக் கண்டித்து ஆசிரியத் தலையங்கம் வெளியாகியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க தென்னிலங்கை ஊடகங்கள், மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இத்தருணத்தில் 1977 இனக்கலவரத்தில் நாட்டின் ஜனாதிபதி தம்மிஷ்ட்டர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்’ என்று போர் முழக்கமிட்டதை நினைத்துப்பார்க்கின்றேன். அன்றைய நிலைக்கும் , கலவரம் நடந்த உடனேயே அது பற்றிய காரமான விமர்சனங்களை வைக்கும் ஊடகங்களும், சிங்கள மக்களுள்ள இன்றைய நிலைக்குமிடையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இதனை நாம் வரவேற்போம். இனக்குரோதத்துடன் இப்பிரச்சினையை அணுகும் தமிழ் முகநூல் பதிவாளர்களில் மிகச்சிலரே தென்னிலங்கைச் செய்திகளைப் பிரசுரித்திருந்தார்கள். மற்றவர்கள் வழக்கம்போல் எவற்றையும் வாசிக்கும் மனோநிலையற்றவர்கள் தம் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக வெட்டி முழங்கியுள்ளார்கள். இவர்கள் கண்களை மூடிக்கொண்ட பூனைகள். ஒருபோதுமே இவர்கள் தம் கண்களைத்திறந்து எவற்றையும் அணுகுவதில்லை. இவர்களைப்பொறுத்தவரையில் தெரிவதெல்லாம் இருட்டே. ஒளியல்ல.

Continue Reading →