அகணி சுரேஸ் எழுதி மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள “இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு” நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல்!

காலம் (Date & Time) : 04-11- 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 2:30 மணி – மாலை 5:30 மணிஇடம் (Venue) : ஈஸ்ட் ரவுண் மண்டபம்…

Continue Reading →

வி.என.மதிஅழகன் ‘சொல்லும் செய்திகள்’ நூல் அறிமுகவிழா! விழா!

“உங்கள் வருகை எங்கள் உவகை. உள்ளன்போடு அழைக்கிறேன். உங்கள் வி.என்.மதிஅழகன்”“வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்” கருவி நூல் வெளியீடு ஸ்காபறோ சிவிக் சென்ரர் அங்கத்தவர் சபா மண்டபம். நொவம்பர்…

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 7: விம்பம் நடாத்திய பெருவிழா! விம்பம் அமைப்பினரின் முழுநாள் நாவல் கருத்தரங்கு தொடர்பாக—

முற்றுப் பெறாத உரையாடல்கள் - 7: விம்பம் நடாத்திய பெருவிழா! விம்பம் அமைப்பினரின் முழுநாள் நாவல் கருத்தரங்கு தொடர்பாக---  மீண்டுமொரு முழுநாள் நாவல் கருத்தரங்கொன்றினை விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பானது வெற்றிகரமாக நடாத்திக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஒளியூட்டப்பட்ட நாவல்கள் அல்லது பிரபல்யமான படைப்பாளிகளின் நாவல்கள் என்றில்லாமல் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை களமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்ற படைப்புக்களையே தனது தேர்வாகக் கொண்டுள்ள விம்பம் அமைப்பானது இம்முறையும் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டிலிருந்து சற்றும் வழுவாமல் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இதற்காக தனியொரு மனிதனாக இருந்து அர்ப்பணிப்புடன் இயங்கும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் பணிகள் என்றுமே எம்மைப் பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துபவை. இது நான்காவது நாவல் கருத்தரங்கு. கடந்த 22.10.201 சனிக்கிழமையன்று வழமை போன்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற்ற இம்முழு நாள் கருத்தரங்கில் சமகால இலக்கியப் படைப்புக்கள் ஆன 10 ஈழ, தமிழக, பிறமொழி நாவல்கள் 18 விமர்சகர்களினால் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்பட்டன. இது மட்டுமன்றி ஒளிப்படக் கலைஞர்கள் சுகுணசபேசன் (லண்டன்), தமயந்தி (நோர்வே), தமிழினி (கனடா), அமரதாஸ் (சுவிஸ்), கருணா (கனடா), சாந்தகுணம் (லண்டன்) ஜெயந்தன் (சுவிஸ்)ஆகியோரது ஒளிப்படக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றிருந்தது.

கலை 11 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கின் இருபுறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஒளிப்படங்களினால் அரங்கம் பிரமிப்பூட்டும் அழகுடன் திகழ்ந்தது.

நிகழ்வின் முதலாவது அமர்வு நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக தேவகாந்தன் எழுதிய ‘கந்தில் பாவை’ நாவல் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது. இந்நாவல் குறித்து கனடாவில் இருந்து ஸ்கைப் மூலம் கவிஞர் மு.புஷ்பராஜன் அவர்களும் கவிஞர் நா.சபேசனும் நிகழ்த்தினார்கள். இருவருமே இந்நாவல் குறித்த எதிர்மறையான கருத்துக்களையே அதிகம் வைத்தனர். முக்கியமாக இருவரும் இந்நாவலில் உள்ள வரலாற்று, புவியியல், விஞ்ஞான தகவல் பிழைகளையே அதிகமாக சுட்டிக்காட்டினர். இன்னமும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் போல் குறுகி விட்டதாகவும் கூறினார்கள். இதனை அவர்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் அல்லது எண்ணவோட்டத்தில் சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால் இது தேவகாந்தன் என்னும் ஒரு அற்புதமான கதை சொல்லியினால் ஒரு உன்னதமான தளத்தில் படைப்பு மொழியில் எழுதப்பட்ட நாவலாகவும், கடந்த பல வருடங்களில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் நான் கருதியிருந்த எனது எண்ணங்களில் எந்தவித மாற்றங்களினையும் ஏற்படுத்தவில்லை.

Continue Reading →

வாசிப்பும்,யோசிப்பும் 301: நினைவில் நிற்கும் எஸ்.பொ!

எழுத்தாளர் எஸ்.பொ

எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் ஒருமுறை (2000) கனடா வருகை தந்திருந்தார். வருவதற்கு முன்னர் எனது முகவரிக்கு எனக்குக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதிலவர் தன் கனடா விஜயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தொடர்ந்து செய்யவுள்ள உலகப்பயணம் பற்றியும் கூறியிருந்தார். அதிலவர் கூறியிருந்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

“படைப்பிலக்கியத்திலே நீங்கள் அடைந்துவரும் முன்னேற்றமும் வெற்றியும் மனசுக்குக் குளிர்வினைத்தருகின்றது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகின்றேன். நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Toronto வில் தங்கலாம் என்பது திட்டம். அங்கு வாழும் தமிழ் நேசங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம்.

இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். …. கனடாவிலிருந்து லண்டன் போய், அங்கிருந்து சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று , சென்னையை அடைவது திட்டம். தற்பொழுது நான் அதிக காலத்தினைச் சென்னையிலேயே செலவு செய்கின்றேன். உலகப்படைப்பிலக்கிய மையம் ஒன்றினை இங்கு நிறுவியுள்ளேன். புத்தாயிரத்திலே புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளே இலக்கிய வீரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற சுவிஷேசத்தின் பிரசாரகனாயும் சென்னையில் வாழ்கின்றேன்.”

இவ்விதம் கூறியிருக்கும் எஸ்.பொ அவர்கள் கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு கூறியிருப்பார்: “இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத் தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூலொன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப்பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்”

Continue Reading →

ஆய்வு: செவ்விலக்கியங்களில் சீரிளம் பெண்மை

-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.முன்னுரை
மானிடப்பிறவியில் மகத்துவம் வாய்ந்த பிறவியாகச் சிறப்புடன் கூறப்பட்டு,காலங்காலமாய் கண்ணைக்காக்கும் இமைபோல, இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் பெண்மை போற்றத்தக்கது. போற்றுதற்குரிய பெண்மையைச் செவ்விலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகமும் புறமும்

சங்ககால மக்களின் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாகச் சான்றோர் பாகுபடுத்தினர். இதில் அகமாக அமைவது வீடு; புறமாக அமைவது நாடு எனக் கொள்ளலாம். காதலும் வீரமும் எனக் குறிப்பிடினும் சாலப் பொருந்தும். வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்ற முதுமொழியை கூர்மதி கொண்டு காணும் போது, பெண்மை சிறந்தால் ஆண்மை சிறக்கும் என்பதை உணரலாம். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து, நன்மக்களைப் பெற்று, சுற்றந்தழுவி, அறம் பல செய்து வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கருதி வாழ்ந்தனர்.

“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை”
“ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்”

என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டால் அறியலாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரி, நிகர்,சமானம் என்ற மூன்று வார்த்தைகளில் ஆணித்தரமாக பதிவேற்றிய நிலை மனங்கொளத்தக்கது.

மனை விளக்கு
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெறினும் மனைக்குத் தேவையான மனைவியைப் பெறாதவனாயின் அவன் வாழ்வு சிறப்படையாது. இருளை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய விளக்குப் போல மனைக்குரியவளாக மனைவி திகழ்கின்றாள்.

“ மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை             
நடுகல் பிறங்கிய உவல்இடு……”
(புறம் – 314)

“ மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே…..”
(நான்மணிக்கடிகை- 105)

மேற்கூறிய பாடல்கள் வீட்டிற்குத் தேவையானவள் மனைவி என்பதைப் பெருமையுடன் கூறியுள்ளன. மனைவி இருந்தால்தான் அது மனை என்பதை செவ்விலக்கியங்கள் செம்மையாக உணர்த்தியுள்ளன.

Continue Reading →

சிறுகதை: ரலி மிதி வண்டி ( சைக்கில்)

யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு போகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் கொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் போக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் கொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர்

கொழும்பில் உள்ள வோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் போல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கிலோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து கொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச் செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . கோப்பாயில் இருந்து வரும் அவனோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் சொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் காந்தனை தங்களோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை.


யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் தொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு மோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை சோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், மோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் போரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷோ போக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு மோட்டார்-பைக்கைக் கொண்டது. வடக்கில் மோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிபொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி போக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 7௦௦௦0 மோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிபொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் பொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் சோம்பேறியாகி பொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக மோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து

 

Continue Reading →

சிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்!

சிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்!பயணிகளின் கைகளில் பதினொறாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி தன்னைத் தானே கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா என்கிற காஷ்மீர் சிறுமியிருந்தாள். 

பலரின் கட்டை விரல்கள் ஆண்ட்ராய்டு திரையை கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. ஒரு ஆணின் கட்டளைக்கு பயந்தோடும் பெண்ணைப்போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடியிருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபாவின் முகம் மட்டும் தனித்து தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க ஆஷிபா தரையில் குப்புறக் கிடந்தாள். அது வெறும் புகைப்படம்தான் என்றாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்திருந்தது. 

ஆஷிபா சிரித்த முகமாக இருந்தாள். பால்வடியும் முகம். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் ஆஷிபாவை திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘ இச்…’ கொட்டிக்கொண்டார்கள். 

ஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ…?’. அவருக்கானப் பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவர் ஒரு பெண்ணாக இருந்தார் ‘ ஏன் மேய்த்தாலாம்…, அப்பன் பாக்கெட்டை நிரப்பத்தான்…’ 

முன்னவர் பின்னவரைத் திரும்பிப்பார்த்தார். ‘ என்ன இருந்தாலும் அவள் பெண். குழந்தை வேறு இல்லையா…?. காலம் கெட்டுக்கிடக்குது. ஒரு பெண், அதுவும் சிறுமி ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்க வேண்டியதில்லை என்கிறேன்…’ 

‘அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டேவா போகமுடியும்…’

‘ பின்னே வேண்டாமா…?’

‘ இப்ப இவ செத்து குழிக்கு போயிருக்காள், அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம்..? ம்…..’ அவள் கேட்டக் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார். 

Continue Reading →

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2018) –

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 - 2018)  -   அவுஸ்திரேலியா  : 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும்  வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் 

இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House –  Karobran Drive, Vermont South VIC 3133)  நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெறும்.

இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

இந்நிகழ்வில், கலந்துரையாடலும் இராப்போசன விருந்தும் இடம்பெறவிருப்பதனால், தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும். இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Continue Reading →

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்! காலம் உருவாக்கிய எழுத்து!

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்! காலம் உருவாக்கிய எழுத்து!இயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.

இன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.

சுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின்  ” சாயத்திரை  “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.

Continue Reading →