திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் ‘பண்பாடும் பெண்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி – சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ‘ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.
தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.
இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.
மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.
இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும் வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.