எழுத்தாளர் தமயந்தியின் (தமயந்தி சைமன்) புகைப்படமொன்று..

எழுத்தாளர்  தமயந்தி (தமயந்தி சைமன்) எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) பல்கலை வித்தகர். எழுத்து, நடிப்பு, புகைப்படம் & காணொளி என இவரது ஆற்றல் பன்முகப்பட்டது, இவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொளிகள், ஓவியங்கள் பலவற்றை மறக்கவே முடியாது, அவற்றுக்காக அவர் பல சமயங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதுமுண்டு.

ஒருமுறை இரவு முழுக்கக் காத்திருந்து தவளைகளின் சங்கீதக் கச்சேரியைக் கேட்பதற்காக எடுத்துப் பதிவு செய்திருந்த காணொளியை என்னால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் மழைக்கால இரவுகளில் , ஓட்டுக்கூரைகளில் பட்டுச் சடசடக்கும் மழையொலிகளூடே வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக்கச்சேரிகளை இரசிப்பதில் பெரு விருப்புடைய எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் அவ்விதம் தவளைகளின் கச்சேரியினை இரசிக்கும் சந்தர்ப்பத்தையேற்படுத்தித்தந்த காணொளி அது.

இங்குள்ள புகைப்படத்தைப்பாருங்கள். எவ்வளவு அற்புதமாகக் காட்சியைக் கமராவுக்குள் கலைத்துவத்துடன் கொண்டு வந்திருக்கின்றார். நம்மத்தியில் இவ்விதமான கலைஞரொருவர் வாழ்கின்றாரென்பதையிட்டு நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: வாசித்துப் பயன் பெறத்தக்க ஆக்கங்களின் வரவுடன்… ஞானம் 2020 ஏப்ரில் மாத இதழ்

ஞானம் சஞ்சிகை ஏப்ரில் 2020'ஞானம்' ஆசிரியர்: ஞானசேகரன்இலங்கையில் கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் மாத இதழின் இம்மாதத்திற்குரிய ( 2020 ஏப்ரில் ) பிரதி கிடைக்கப் பெற்றோம். உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முறியடிக்க ஒவ்வொரு தேசமும் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், இந்த எதிரியின் தோற்றம் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையுடன், இம்மாதம் 01 ஆம் திகதிவரையில் கிடைக்கப்பெற்ற பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களுடனும், இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை தேசத்தின் நலன் கருதி மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்  ஆசிரியர் தி. ஞானசேகரன் விரிவானதோர் ஆசிரியத்தலையங்கம் எழுதியுள்ளார். ஆசிரியர் தி. ஞானசேகரன் தொழில்முறையில் முன்னர் மருத்துவராக இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் பணியாற்றியவர் என்பதும்  குறிப்பிடத்தகுந்தது. முன்னைய காலங்களில் சில வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்த  சில உலக நாடுகளில் நேர்ந்த  தாக்கங்கள் குறித்தும், அதிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டெழுவதற்கு தேவைப்பட்ட காலப்பகுதி  பற்றியும்  விரிவாக பதிவுசெய்துள்ளார். சமூகப்பிரக்ஞையுடன் ஒரு கலை, இலக்கிய இதழாசிரியர் இந்த ஆசிரியத் தலையங்கத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.

Continue Reading →

குறும்படம்: 3 இன் கொரோனா அவுட் – கொரோனா குறும்படம்

குறும்படம்: 3 இன் கொரோனா அவுட் – கொரோனா குறும்படம்

கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியால் மனிதர்கள் முடங்கிப்போயிருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் உலா வர மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த குறும்படம் ஒன்று இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறும்படம் பல இளைஞர்களையும் அதே போன்ற முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உந்துதலை அளித்திருக்கிறது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

Continue Reading →

கலைஞர் இரகுநாதனுக்கு இதய அஞ்சலி ! என்னை வாழ்த்திய எந்தன் இரகு, இன்று நினைவாகிப்போனார்!

“ சிறு நண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை அலை வந்து
அதுகொண்டு போகும்….”

கவிஞர் அம்பிகடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

ஓர்கால் நான் அரசியலில் ஊன்றி நின்ற காலம். 1950 களில் சிறுகதை எழுதுவதுடன் எழுத்துலகில் அடி எடுத்து வைத்த நான், பின்பு விஞ்ஞானக் கட்டுரை, கவிதை என விரிவாக்கம் செய்து, ஈழத்து பேனா மன்னன் எனவும் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் விதந்துரைக்கப்பட்டேன். அதுமட்டுமல்ல. 1968 ஆம் ஆண்டு, புகாரில் ஒரு நாள் என்ற நான் எழுதிய கவிதைக்கு தமிழ்நாட்டிலே அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கையால் தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். அப்போதுதான், அன்பர் இரகுவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிழல் நாடக மன்றத்தின் ஸ்தாபகராகிய அவர், கவிதை நாடகம் ஒன்றை மேடையேற்றுதற்கு என்னிடம் வந்தார். அத்தொடர்பால் “வேதாளம் சொன்ன கதை” என்ற எனது கவிதை நாடகத்தின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். நிழல் நாடக மன்றம் அதனைத்தயாரித்து 1970 இல் மேடையேற்றியது. நானும் நாடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். பின்னாளில் அவர் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற திரைப்படத்தை எடுத்தபோதும் என்னிடமிருந்தும் ஒரு பாடலைப் பெற்றுக்கொண்டார். காலத்தின் கோலத்தில், வீடு, ஊர், சொந்தம், சுற்றம், உறவு, விளைநிலம் எல்லாம் விட்டு ஏதிலிகளாக, புலம் பெயர்ந்த அவர், பிரான்ஸ் நாட்டிலே தஞ்சம் புகுந்தார். நான் அவுஸ்திரேலியாவின் கரையேறினேன். அதேசமயம் எமது உறவு நீடித்து நிலைத்தது. அவர் புகலிடத்திலும் தன் கலைப் பணிகளைத் தொடர்ந்தார். காலஞ் சுழன்றது காட்சிகள் மாறின.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 20

அத்தியாயம் இருபது

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 20மிகவும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் எங்களைப் படுத்தி எடுத்தார்கள். நாங்கள் ஏன் தோணியிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறோம், ஏன் பகல் முழுதும் பயணம் செல்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தொணப்பினார்கள். இடையில் அவர்களுக்கு ஜிம்மின் மீது சந்தேகம் எழுந்தது. அவன் தப்பித்து ஓடிப்போகும் நீக்ரோவா என்று வினவினார்கள். நான் கூறினேன் “சரியாகப் போச்சு! தப்பித்து ஓடும் நீக்ரோ தெற்குப் பகுதிக்கா ஓடுவான்?” இல்லை. அங்கே அவன் போகமாட்டான் என்றார்கள். எப்படியாவது சில விஷயங்களை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதால் நான் இவ்வாறு கூற ஆரம்பித்தேன்.

“என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் வசிப்பது நான் பிறந்த மிஸ்ஸோரியில் உள்ள பைக் நாட்டில்தான். ஆனால் என் அப்பா, எனது சகோதரன் ஐக் என்னைத்தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு நாற்பது மைல் கீழாக நதியின் மேற்புறம் இருக்கும் ஒரு சிறிய குதிரைப் பண்ணை வைத்திருக்கும் எனது சித்தப்பா பென் என்பவருடன் வசிக்கச் செல்லலாம் என்று என் அப்பா முடிவெடுத்தார். வறுமையில் இருந்த என் அப்பாவுக்கு கடன் அதிகம் என்பதால் எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்தக் கடனை அடைத்தபின் எங்களிடம் மீதம் பதினாறு டாலர்கள் பணம் எஞ்சியிருந்தது . அத்துடன் எங்களின் நீக்ரோ ஜிம் எங்களுடன் இருந்தான்.”

“ஆயிரத்து நானூறு மைல்கள் கடந்து செல்ல ஒரு படகின் அடிமட்ட இடத்தில் தங்குவதற்கான கட்டணத்தொகை கூட எங்களிடம் இல்லை. இருக்கட்டும். ஒரு நாள் நதி பெருகி வருகையில் அதிர்ஷ்டவசமாக அப்பாவுக்கு இந்தத் தோணி தட்டுப்பட்டது. எனவே நாங்கள அனைவரும் இந்தத் தோணியிலேயே நியூ ஆர்லியன்ஸ் புறப்படுவது என்று முடிவு கட்டினோம். ஆனால் அப்பாவின் அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. ஒரு நீராவிப் படகு இந்தத் தோணியின் முன்பகுதி ஓரத்தில் ஏறியதால் நாங்கள் அனைவரும் நீருக்குள் விழுந்தோம். நீராவிப்படகின் துடுப்புச் சக்கரத்தின் கீழ் அனைவரும் விழுந்தோம் என்றாலும் நானும் ஜிம்மும் திரும்ப மேலேறி வந்து விட்டோம். ஆனால் அப்பா நன்கு குடித்திருந்ததாலும், எனது தம்பி ஐக் நான்கு வயதுக் குழந்தை என்பதாலும், அவர்களால் மேலே வர முடியவில்லை. நல்லது. அடுத்த நாள் அதிக அளவில் மக்கள் படகில் வந்து எங்களுக்குத் தொந்திரவு கொடுத்து ஜிம்மை என்னிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போகப் பார்த்தார்கள். ஜிம்மை தப்பி ஓடிப்போன நீக்ரோ என்று அவர்களும் நினைத்து விட்டார்கள். அதனால்தான் பகல் பொழுதுகளில் நாங்கள் நதியில் மிதந்து செல்வதில்லை. இரவுகளில் எங்களுக்கு எந்தத்தடையும் இருக்காது.”

“என்னைக் கொஞ்சம் தனியாக சிந்திக்க விட்டால், பகல் பொழுதிலும் நமக்குத் தேவையானால் தோணியில் பயணம் செய்ய நல்ல ஒரு வழி கண்டுபிடிப்பேன். திரும்ப ஆழமாக யோசித்து சீக்கிரமே ஒரு நல்ல திட்டம் தயாரிக்கிறேன். இன்று விட்டுவிடலாம். அந்த நகரின் வழியாக பகல் வெளிச்சத்தில் போகாதிருப்பது நல்லதுதான். அது நமக்கு ஆபத்தாகக் கூட விளையும்” பிரபுவானவர் கூறினார்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 19

அத்தியாயம் பத்தொன்பது

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 19சில சமயங்களில் காட்டுத் தவளைகள் கத்தும் ஒலியைத் தவிர்த்து மற்ற அனைத்தும் நிச்சலனமாக, ஏதோ இந்த உலகம் முழுதும் அயர்ந்து தூங்குவதைப் போல தென்படும். அடுத்த கரையில் மரங்கள் அடர்ந்திருப்பதால், நீரின் மேல் நீங்கள் காணும் விடிகாலை முதல் காட்சி ஒரு மந்தமான கோடு போன்ற ஒளி மட்டுமே. நீங்கள் முதலில் அது மட்டுமே காண முடியும். பின்பு வானத்தில் வெளுத்துப் போனது போன்றதொரு புள்ளி தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பரவ ஆரம்பிக்கும். பிறகு சிறிதாக நதிக்கு வெளிச்சம் கிடைக்க ஆரம்பிக்கும். கருப்பு நிற நதி சாம்பல் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். நதியின் மேல் வெகு தொலைவில் வணிகக் கப்பல்கள் கறுப்புப் புள்ளிகளாக மிதந்து கொண்டிருக்கும். அதே போன்றே கறுப்புக் கோடுகளாகத் தொலைவில் தென்படுவது தோணிகளாக இருக்கும். சில சமயங்களில் அந்தப் பிரதேசமே அரவமற்று இருப்பதால் வெகு தூரத்திலிருந்து கூட துடுப்புகள் நீரை உடைத்துத் துழாவும் ஒலி அல்லது அது போன்ற பல ஒலிகள் கலந்த ஓசைகளை நீங்கள் நன்றாகக் கேட்கலாம்.

இரண்டு மூன்று நாட்கள் அப்படியே கடந்தது. மிகவும் சீராகவும், அமைதியாகவும், இனிமையாகவும் கடந்து போனதால் அது அழகாக நீந்திப் போனது என்று நீங்கள் குறிப்பிடலாம். எப்படி நேரத்தைக் கடத்துவது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது. நாங்கள் இருந்த இடத்தில் நதி மிகவும் பூதாகரமாக அகன்று, சில சமயங்களில் ஒன்று அல்லது ஒன்றரை மைலுக்கு விரிந்து கிடந்தது. இரவு நேரங்களில் பயணம் செய்து கொண்டும் பகல் நேரங்களில் மறைந்து கொண்டும் இருந்தோம். இரவு நேரம் முடித்தவுடன் வழிதேடிச் செல்லும் பயணத்தை நிறுத்திவிட்டு, கரையின் அருகே, பெரும்பாலும் மணல்திட்டுகளுக்கு அடியில் தேங்கி நிற்கும் நீரில் தோணியை கட்டிவைப்போம். இளம் பஞ்சுப்பொதி மரங்கள் மற்றும் வில்லோ மரங்களின் கிளைகளை வெட்டி அவற்றை வைத்து தோணியை மறைத்து வைப்போம். பிறகு மீன்களுக்காக வலையை அமைத்து வைத்து விட்டு நதி நீருக்குள் சறுக்கி நன்கு விளையாடிக் களித்து எங்களைப் புதுப்பித்துக் கொள்வோம். அதன் பின்னர் கணுக்கால் அளவே நீர் நிறைந்து மணல் பரந்து கிடக்கும் ஆழமற்ற நீரில் கால்களை நனைத்தபடி அமர்ந்து சூரிய உதயத்தை ரசிப்போம்.

அடுத்து வெகு சீக்கிரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நீரின் விசையை தடுத்து நிறுத்தும் ஏதோ தடை நீரின் உள்ளே மறைந்துள்ளது என்ற அர்த்தம் கொள்ளும் வகையில், நதியின் மீது நீண்ட கோடு ஒன்றை நீங்கள் காண முடியும். அதனுடன் நதியின் மீது மூடிய பனிமூட்டம் அப்படியே சுருண்டு நதியை விட்டு மேல் நோக்கிச் செல்வதையும் காணலாம். கிழக்கு வானின் சிவப்பு இன்னும் அதிகமாகி, நதியின் மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி அதன் மூலம் நதியின் அடுத்த கரையில் உள்ள மரங்களின் விளிம்பில் இருக்கும் மரவீடுகளைக் கூட நமக்குக் காண்பித்துக் கொடுக்கும். அவைகள் மர அறுவை மற்றும் விற்பனை நிலையங்களாக இருக்கக்கூடும்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 18

அத்தியாயம் பதினெட்டு

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 18கர்னல் க்ராஞ்போர்ட் ஒரு மேன்மை பொருந்திய கனவான், தெரியுமா! உண்மையாகவே அவர் ஒரு கனவான்தான். அவரின் குடும்பமும் அவரைப் போன்றே மேன்மையானது. கேள்விப்பட்டவரை அவர் நல்லகுடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று கூறுகிறார்கள். பந்தயக் குதிரையின் வளர்ப்பு எத்தனை மதிப்பு வாய்ந்ததோ அதே அளவு மதிப்பு நல்ல குடும்பத்தில் வளர்க்கப்பட்ட மனிதனுக்கு உண்டு என்று அந்த விதவை டக்லஸ் எப்போதுமே கூறுவாள். எங்கள் நகரிலேயே அவள் ஒரு மிகச்சிறந்த மேல்குடிவகையை சார்ந்த பெண்மணி என்பதை யாரும் ஒருபோதும் மறுக்கவே மாட்டார்கள். ஏன், மண்ணில் புரளும் கெளுத்திமீன் போன்ற வகைப் பரம்பரையைச் சார்ந்த என் அப்பா கூட அவ்வாறுதான் கூறுவார். கர்னல் க்ராஞ்போர்ட் நல்ல உயரத்துடன், ஒல்லியான தேகத்துடன் மாநிறத்துடன் தோற்றம் அளிப்பார். அவர் முகத்தில் எந்தப் பகுதியிலும் சிவப்புத் திட்டுக்களுக்கான அறிகுறி இருக்கவே இருக்காது. தினமும் காலை முகச்சவரம் செய்து அவரின் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பார். மெல்லிய உதடுகள் மற்றும் மூக்குத் துவாரங்கள், உயர்ந்த நாசி, கெட்டியான புருவங்கள் இவற்றுடன் ஏதோ இருட்டுக் குகைக்குள் இருந்து உங்களை நோக்குவது போன்றே காணப்படும், மேல்நெற்றிக்குள் உள்ளடங்கி இடுங்கி இருக்கும் கறுத்த கண்கள் ஆகியவை அமையப் பெற்றவராக அவர் இருப்பார். அவரின் நெற்றி உயர்ந்திருக்கும். அவரின் தலைமுடி கருமை நிறத்துடன் நீண்டு அவரின் தோள்ப்பட்டைகளில் புரண்டு வீழும். அவரின் கைகள் சன்னமாக நீண்டு இருக்கும்.

தினமும் சுத்தமான மேல்சட்டையை அணிந்து அதன் மேல் முழுதும் மூடக் கூடிய லினன் துணியாலான சூட் உங்களின் கண்ணை உறுத்தும் தூய வெள்ளை நிறத்தில் அணிந்து இருப்பார். பித்தளை பொத்தான்களுடன் உள்ள, முன்புறம் குறைந்தும் பின்புறம் வால் போன்று இரண்டாகப் பிரிந்து இருக்கும் நீல நிற வால் கோட் ஞாயிற்றுக் கிழமைகளில் முறைப்படி அணிவார். வெள்ளிப் பூணுடன்கூடிய மஹோகனி மரத்தாலான தடி ஒன்றை கையில் பிடித்துச் செல்வார். ஒரு சிறுதுளி அளவு கூட அற்பத்தனமான விஷயங்களை அவரிடம் காண முடியாது. அவர் என்றுமே உரத்துப் பேசவே மாட்டார். மிகவும் அன்பான மனிதன் என்பதை நீங்கள் உணர முடிவதால் நீங்கள் அவரிடம் கொஞ்சம் நிம்மதியாகப் பழகமுடியும். சில சமயங்களில் அவரின் மெல்லிய புன்னகை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் ஒரு சுதந்திரத் தூண் போன்று அவர் நிமிர்ந்து நின்று, அவரின் புருவங்களுக்குக் கீழிருந்து மின்னல் சுடர்விடுவது போன்ற கோபம் தெறித்தோடுகையில், முதலில் ஓடிப் போய் ஒரு மரத்தில் தொத்தி உங்களை முதலில் காத்துக்கொண்டு, பின்னர்தான் என்ன சேதி என்று கேட்க முடியும்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 17

அத்தியாயம் பதினேழு

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 17அடுத்த ஒரு நிமிடத்தில், திறந்திருந்த சன்னல் வழியாக தன் தலையை நீட்டாமல் ஒரு குரல் மட்டும் பேசியது.

“போதும் நிறுத்துங்க, பசங்களா! யார் அங்கே?”

நான் கூறினேன் “அது நான்தான்.”

“யார் அந்த நான்?”

“ஜார்ஜ் ஜாக்சன், சார்!”

“உனக்கு என்ன வேண்டும்?”

“எனக்கு ஏதும் தேவை இல்லை சார். இந்தப்பக்கமாக நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். உங்களின் நாய்கள் என்னை அனுமதிக்கவில்லை.”

“இந்த இரவு வேளையில் அனாவசியமாக எதற்கு இந்தப்பக்கம் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாய்? ஹே!”

“நான் சுற்றித் திரியவில்லை சார். நீராவிப்படகின் மேலிருந்து தவறி நீரில் வீழ்ந்து விட்டேன்.”

“ஓ! உண்மையாகவா? யாரேனும் தீக்குச்சி உரைத்து லாந்தரைப் பற்றவைக்கலாமே? உன் பெயர் என்னவென்று சொன்னாய்?”

“ஜார்ஜ் ஜாக்சன், சார்! நான் ஒரு சிறுவன்.”.

“இங்கே கவனி. உண்மையை மட்டும் நீ சொன்னால், பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் அங்கிருந்து நகரப் பார்க்காதே. எங்கே இருக்கிறாயோ, அங்கேயே நில். உங்களில் ஒருத்தர் சென்று பாப் மற்றும் டாம் இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி , துப்பாக்கியையும் எடுத்து வாருங்கள். ஜார்ஜ் ஜாக்சன்! வேறு யாரேனும் உன்னோடு இருக்கிறார்களா?

Continue Reading →