அன்புடையீர், மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம் மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145 ஆகியன-நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் இவ்விதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும். ,நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைபார்வையிடலாம். மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை மல்லிகைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு,இம்மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் ஒரு பிரதியை(cc) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.அதை போல் ஞானம் சஞ்சிகைபற்றிய கருத்துக்களையும் அதே முறையில் அனுப்பி வைக்கு மாறு வேண்டுகிறோம். – அன்பன் , மேமன்கவி
புதுவையில் 03-08-2012 அன்று நடந்த ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் அறிமுகவிழாவில் அகில் நடத்தி வருகின்ற தமிழ்ஆதர்ஸ்.கொம் இணையத்தள பணிக்காக புதுவை நண்பர்கள் தோட்ட அமைப்பால் இலக்கிய விருது வழக்கப்பட்டது. இவ்விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அன்பினிய நண்பரவர்கட்கு, வணக்கம். நான் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஏழாம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன்.…
[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது ‘பதிவுகளி’ல் பதிவு செய்வது ‘பதிவுகள்’ வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது ‘பதிவுகளில்’ மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட ‘அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் ‘எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது’ நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]
[எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட இக்கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – பதிவுகள் -]
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, உங்கள் வளைத்தளத்தில் (Jeyamohan.in) 23.5.2012 அன்று எஸ்.வி.ராஜதுரைக்கு எழுதியுள்ள பதிலில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்: “உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.”
“இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”
– August 1, 2012 – (Bangkok) – Burmese security forces committed killings, rape, and mass arrests against Rohingya Muslims after failing to protect both them and Arakan Buddhists during deadly sectarian violence in western Burma in June 2012. Government restrictions on humanitarian access to the Rohingya community have left many of the over 100,000 people displaced and in dire need of food, shelter, and medical care. The 56-page report, “‘The Government Could Have Stopped This’: Sectarian Violence and Ensuing Abuses in Burma’s Arakan State,” describes how the Burmese authorities failed to take adequate measures to stem rising tensions and the outbreak of sectarian violence in Arakan State. Though the army eventually contained the mob violence in the state capital, Sittwe, both Arakan and Rohingya witnesses told Human Rights Watch that government forces stood by while members from each community attacked the other, razing villages and committing an unknown number of killings. “Burmese security forces failed to protect the Arakan and Rohingya from each other and then unleashed a campaign of violence and mass roundups against the Rohingya,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “The government claims it is committed to ending ethnic strife and abuse, but recent events in Arakan State demonstrate that state-sponsored persecution and discrimination persist.”
ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன குட்டித் தங்கைக்கும் நான் பிரியமானது போல, அங்கு வந்த அமுத சுரபி பத்திரிகை மூலம் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் தெரிய வந்தது போல, செல்லஸ்வாமி வீட்டில் நான் முதன் முதலாகப் படித்த ஆங்கிலப் புத்தகம் Andre Maurois என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் சுயசரிதமாகிய Call No Man Happy என்னும் புத்தகம் அதில் என்ன படித்தேன் என்பது இப்போது அனேகமாக மறந்துவிட்டது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது தான் புத்தகமாக ஒரு தொடக்கம். எனக்கு இப்போது வெகு மங்கலாக நினைவில் இருப்பதெல்லாம் அவரது இளம் வயது காதல்களைப் பற்றியும் ஷெல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்கள் மீது அவருக்கு இருந்து பிடிப்பு பற்றியும், அவர் பின்னர் French Academy யால் கௌரவிக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் எனது தேர்வு இல்லை. செல்லஸ்வாமி வீட்டில் இருந்தது, எளிதாகக் கிடைத்த முதல் புத்தகம். படித்தேன்.
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.
நிழல் நவீன சினிமாவுக்கான களம்: -தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 27வது குறும்படப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15…