பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான். “டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா”என்று மதி துரிதப் படுத்தினான். 2..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட கிராமம் அது!செட்டியார் பகுதியில் நகுலன் இருப்பவன்.ஒரு கிலோ மீற்றர் தூரம் தள்ளிய சந்தையடியில் மதி.வரும் போது கூட்டிக் கொண்டு வருவான்.நட்பு வேரிட்டதால் மதியும் காத்திருப்பான். அவர்களுடைய 8ம் வகுப்பில் 15…20 பேர்களாக பெண்கள் இருந்தார்கள்.எல்லா வகுப்புகளிலும் சராசரியாக அப்படித் தான் இருந்தார்கள்.ஆண்கள் தம் மத்தியில் நட்புடன் பழகினார்கள் தவிர பெண்களை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. வெள்ளை நாரை போல ஒல்லிக்குச்சியாக சாரதா,கொஞ்சம் அளவாக சதை போட்ட புவனா,சிரிச்சா அழகாகத் தான் தெரிவாள்.குறுகுறுவென அளவெடுக்கிற மாதிரி பார்த்து ஏதாவது சொல்லி பெடியளை சினமேற்றி விடுற சியாமளா,ஓரே ஆண்டில் பிறந்திருந்தாலும் மாதத்தில் மூத்தவளாக இருப்பாள் போல தோன்றியது.சின்னப் பெட்டைகளாக ராசாத்தி,பவானி,சரசு..பெரும் கூட்டம் தான்.
அன்று கல்லூரியின ‘பெயார்வெல் டே’. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு ‘ஆட்டோகிராப்’ இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் அதிகம் சந்தித்திருக்கி;றார்கள். பேசியும் இருக்கிறார்கள். எல்லாமே சாதாரன பேச்சுக்கள். கல்லூரி தொடங்குவது பற்றி… பாடத்திற்கு வர முடியாமை பற்றி… பாடக் குறிப்புகளை கை மாற்றிக் கொள்வது பற்றி… நண்பர்களின் சுகவீனம் பற்றி.. இப்படி நிறைய ‘பற்றி’ கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சைந்தவிக்கு, ஆகாஷ் மீது நிறையவே நேசம் இருந்தது. இது சக மாணவர்கள் இவர்களிருவரையும் இணைத்துப் பேசியதால் உண்டானதாக இருக்கலாம். இன்னொரு புறம் இவர்களிருவருக்குள்ளும் அது இல்லாமல் எப்படி சக மாணவர்கள் இணைத்துப் பேச முடியும் என்ற கேள்வியும் நியாயமானது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன? ஆகாஷும் சைந்தவியுடன் விஷேடமாகவே பழகுவான். மெல்லிய புன்னகை, காருண்யப் பார்வை, அமைதியான பேச்சு என அவனது ஒவ்வொரு நகர்வும் சைந்தவிக்குள் காதலை நங்கூரமிட்டு உட்கார வைத்திருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் நேசத்தைச் சொல்லவில்லையாயினும் இவர்களது கண்கள் சந்திக்கும் போதெல்லாம் காதல் மொழியில்தான் பேசிக் கொண்டன. கண்களுக்கு இருக்கும் நேர்மை பெரும்பாலும் உதடுகளுக்கிருந்ததில்லை.
2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது. இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ? எவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.
அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ‘இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்’ (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள் என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.
திரு. விசயரத்தினம் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஆராக் காதல் கொண்டவராதலால் அவருடைய கட்டுரைகள் அனைத்திலும் இலக்கிய வாடை கமழ்கிறது. அறிவியலை அணுகும் போதும் அதனைப் பழந்தமிழ் இலக்கியத்தின் ஊடாகப் பார்க்கின்ற ஒரு போக்கைப் பார்க்க முடிகின்றது.
கட்டுரைகளிற் பெரும்பாலானவை தமிழ் இலக்கியம் பற்றியே பேசுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்த ஒழுகலாறுகள் பற்றியும் ஆணித்தரமாகக் கூறிச் செல்கிறார். பண்டைத் தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும், குறுந்தொகைக் காட்சிகளின் மாட்சிமை பற்றியும், தொல்காப்பியர் காலம் பற்றியும், சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.
இரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில். எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்”பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள். எசேக்கியல் காளியப்பன் அவர்களின் அருமையான வாழ்த்துடன் ஆரம்பித்தாலும் அனைவரையும் அழைத்து செல்கிற பக்கம் அணிந்துரை. திறனாய்வின் தேர்ந்த புலமையை மிக எளிமையாகவும், அழகாகவும் ‘பரவசப்படுத்தும் யாரையும்’எனும் மகுடத்தில் மதிப்பிற்குரிய க.பஞ்சாங்கம் ஐயா கூறியிருக்கும் கருத்துக்கள் வாசிப்பவர்களை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கின்றன.” வாசகர் நோக்கில் அனுபவம்… என்று மு. ராமச்சந்திரன் தமிழ் மொழியைத்தாண்டி சமூகப் பொறுப்புள்ள வலுவான வரிகள் தன்னை வெகுவாய் பாதித்ததாக கூறியிருப்பது படைப்பாளிகளுக்கும், தொகுப்பாளிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நோக்கவுரை எனும் மகுடத்தில் பொள்ளாச்சி அபி வாழ்க்கையின் ஒரு பகுதி காதலென்பது பொய்,காதல் மட்டுமே வாழ்க்கையெனக்கருதும் சிலருக்கு சாட்டையை வீசியிருப்பது அடித்தளும்பாய் தெரிகிறது.இன்றைய நிலையின் தேவையுணர்ந்து எழுதும் சிலரை சுட்டுவித்து அடையாள படுத்தியிருப்பது ம், இன்னும் எழுத புதிதாக தளத்திற்குள் தம்மை இணைக்கும் கவிதா நெஞ்சங்களை நோக்குணர்ந்து ஆக்குவோம் இலக்கியம் என்ற தொனியில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்திருப்பது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல்.
எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
நந்தனம் YMCA மைதானத்தில் [அரசுக் கல்லூரி அருகில்] 11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 304_ல் புதுப்புனல் தனது வெளியீடுகளை காட்சிக்கும்,…
* திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு: “பனியன் நகரம்“ 2013
* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல்
27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை: அரிமா கேபிகே செல்வராஜ் ; *முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி, சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன் ; சிறப்புரை: கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி, சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி, வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள்,…