அளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் – அண்ணா – நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். – என்றார். தம்பி – அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரை இன்று வரையில் நான் நேரில் பார்த்தது கிடையாது.ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம் இல்லை. என்றேன். இன்றைய தலைமுறை வாசகர்கள் கேட்கலாம் -அது என்ன சேரன் – சோழன்? என்று. சங்ககாலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள் பாண்டியன் – சேரன் – சோழன். ஆனால் நவீன உலகத்தில் ஈழத்தில் அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர் சேரன் – சோழன் – பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை – இனியாள். சேரனும், பாண்டியனும் , மகள் அவ்வையும் தற்பொழுது கனடாவில். சோழன் அமெரிக்காவில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில். இதில் மற்றுமொரு தகவலும் இருக்கிறது. தற்காலத்தில் பேசுபொருளாக இருக்கும் சோவியத்தின் உக்ரேயினைச்சேர்ந்த பெண்ணைத்தான் பாண்டியன் மணம் முடித்தார். அவர்களின் மூத்த புதல்வன் பெயர் எல்லாளன். எல்லாளனும் பெற்றோர்களுடன் கனடாவில். மகாகவியை நான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் மறைந்தார். எனினும் மகாகவியின் பிள்ளைகளுடன் எனக்கு உறவும் உரையாடலும் இருக்கிறது.
– ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள். கவிதைக்கான குறிப்பு எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது. –
நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள
விபூஷிகா எனும் சகோதரி
விமானத்தைக் காணவில்லை
உலக வரைபடமே இங்கே பார்
யோசனைகளோடு விம்மியழுது
உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்
அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே
நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம். விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது. நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாக அகதா கிறிஸ்டியின் நைல் நதியில் மரணம் நாவல் படமாகியது (Death on the Nile) இந்தப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நினைவிலிருந்தாலும் அதில்வரும் நைல் நதிப்பயணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. முக்கிய நதிகளில் தெற்கேயிருந்து வடக்கு ஓடுவது நைல் நதி மட்டுமே. ஆதிகாலத்தில் இருந்தே நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. நைல் நதியில் தெற்கு நோக்கி, அதாவது சூடான் பக்கமாக செல்லும் போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாய்மரத்தை விரித்தால் படகு போய்க் கொண்டேயிருக்கும்.அதே போல் வடக்கு நோக்கி நைல்நதியில் செல்லும்போது , பாயை இறக்கிவிட்டால் அந்த நீரோட்டத்தில் அலக்சாண்ரியாவுக்கு வந்து மத்திய தரைக்கடலை அடைந்து விடலாம். இவ்விதமாக காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை என்பது வரலாற்றாசிரியர்களின கருத்து. எகிப்தை ஆயிரம் வருடங்கள் ஆண்டவர்களான கிரேக்கர்,ரோமர் முதலானோர் பலமான கப்பல்ப் படையை கொண்டவர்களாகவும் சிறந்த கப்பலோட்டிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள்.
வணக்கம், ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம், 14.03.2014 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது. தலைமை : பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள்; சிறப்புரை: திரு லேனா. தமிழ்வாணன்.. விருதாளர்: தடகள வீராங்கனை செல்வி ஆ. இந்து.. அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.. தாங்களும், தங்கள் இல்லத்து இளைய தலைமுறையினரும், கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் ..
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது. ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.
“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை. இவ்வாய்வுகள் மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.
கலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.
ஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரல் தமிழ் இலக்கிய அறிமுகம் | உரை: கலாநிதி நா.சுப்பிரமணியன்ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 29-03-2014 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரைஇடம்: மெய்யகம் |…