நூல் அறிமுகம்: ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day)

அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம்.நூல் அறிமுகம்: ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை சாவகச்சேரியில் 114 ‘டச்சு றோட்’டில் அமைந்துள்ள திருக்கணித பதிப்பகத்தில் அச்சிட்டு 2008ல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலினை நூலாசிரியர் தனது மனைவியான காலஞ்சென்ற ஆசிரியை சேதுநாயகி வைரமுத்து அவர்களது நினைவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தில் தனது ஆசிரியப் பணிக்கு வாழ்க்கை முழுவதும் ஆதர்சனமாகவும், உறுதுணையாகவும் விளங்கியவர் தனது மனைவியார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலின் முதற் தொகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி (Translation 1 & 2)  மொழிபெயர்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி உரையாடலுக்கும் (Conversation) , மூன்றாவது பகுதி கடிதங்கள் எழுதுவதற்கும் (Written Message) நான்காவது பகுதி இலக்கணத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூலின் அநுபந்தம் ஒன்று பொன்மொழிகளுக்காகவும், அநுபந்தம் இரண்டு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பிரிவுகளில் ஆங்கில வசனங்களும், அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. உரையாடல் பகுதியில் தொலைபேசி உரையாடல், நேரடி உரையாடல் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன.  மேற்படி நூலின் இரண்டாவது பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு மொழிபெயர்ப்புக்காகவும், இரண்டாவது பிரிவு இலக்கியப் படைப்புக்காகவும், மூன்றாவது பிரிவு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நூலின் இலக்கியப் படைப்புப் பகுதியில் English is a master key , Pleasures of Reading, Hobbies, The Education, My Aim in Life , Let Us Learn More English And Good English  மற்றும் Good Manners ஆகிய ஒரிரு பக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading →

மார்ச் 2014 கவிதைகள்!


மார்ச் 2014 கவிதைகள்!நீந்தும் மீன்களை வரைபவள்

 

–  எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை –

அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

Continue Reading →

Welcoming more new Canadians! New Canadian citizens in February 2014 almost double compared to one year ago!

Welcoming more new Canadians! New Canadian citizens in February 2014 almost double compared to one year ago!February 28, 2014 — Ottawa — More than 19,200 people from 193 countries have become Canadian citizens at citizenship ceremonies held across Canada over the month of February. This is almost 100 percent higher compared to the same period last year (February 2013) when approximately 9,980 people were granted citizenship across Canada. At 220 citizenship ceremonies held across the country this past month, from school gymnasiums, to Citizenship and Immigration offices, to city halls and hotel conference rooms, Canada has welcomed our newest citizens.  These high numbers demonstrate that the system is becoming more efficient and the backlog of citizenship applications is decreasing, helping more people realize their dream of becoming Canadian sooner. The government’s proposed changes in Bill C-24, the Strengthening Canadian Citizenship Act, will also reduce wait times by streamlining the decision-making process for citizenship. It is expected that these changes will bring the average processing time for citizenship applications down to under one year and that the current backlog will be reduced by more than 80 percent by 2015-2016. 

Continue Reading →

கனடா: போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப வேண்டும்

கனடா: போரினால் பாதிக்கப்பட்ட  தாயக  மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப  வேண்டும்“வட கிழக்கில் வாழும் தமிழ்மக்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) 1990 இல் இருந்து இயன்றளவு உதவி வழங்கி வருகிறது.  போரினால் பாதிக்கப்பட்ட  தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் மீளக்  கட்டியெழுப்ப வேண்டும். அவர்களை  மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும். போர் காரணமாக வட கிழக்கில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்” இவ்வாறு ததேகூ(கனடா)  இன் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்  மருத்துவர் வி. சாந்தகுமார் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.   ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த பெப்ரவரி 23 காலை 11.00  மணி தொடக்கம்  பிப 1.00 வரை  ஸ்காபரோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேசுகையில் “எமது அமைப்புக்குள் இளைஞர்களை உள்வாங்க வேண்டும். பல்கலைக் கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட கால – 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. அவற்றை எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும் கனடா, பிரித்தானியா போல் வெளிநாடுகளில் ததேகூ இன் ஆதரவு அமைப்புக்களை உருவாக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: தமயந்தியின் புகைப்படங்கள்

– ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. –

தமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளதுதமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் – பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் – துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து – இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என – நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த – கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.

Continue Reading →

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை!

இலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்திஇலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார். தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் – மரண வாக்குமூலம்

Continue Reading →

ஆய்வு: ஐந்திணைகளில் அமைந்துள்ள பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பண்டைத் தமிழ்ச் சான்றோர் தம் வாழ்வியலை ‘அகம்’ எனவும் ‘புறம்’ எனவும் இரு கூறாக வகுத்து இயற்கை வழி நின்று பெருவாழ்வு வாழ்ந்து, தம்மவரும் பின்னவரும் பின்பற்ற வழிவகுத்துச் சென்றுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம், இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, போரியல்மரபு ஆகியவை இப் புறத்தின்கண் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் ஈடுபடுவர். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையை எடுத்துக் கூறுகின்றது. இதில் தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் ஈடுபடுவர். அன்புறு காமம் சார்ந்த இப் பகுதியை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று நிலைபற்றிப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் ஒருமித்து ஏழு திணைகள் என்றும் சான்றோர் கூறியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் (கி.மு. 711)     சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.

              ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
             முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள். 01)

இதில், அன்புடைக் காமம் என்றும், அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது ஐவகையான நெறி பற்றிய கூற்றாம். அவை ஐவகை நிலங்களிற்கேற்ப ஒட்டிய சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை எனவும், ஐவகை நெறிபற்றி வகுத்தும், அவற்றைப் பற்பல துறைகளில் நின்று உள்ளத்து உணர்வெழுச்சிகளை நயம்படச் செய்யுள் அமைப்பது பண்டைத் தமிழர் மரபாகும்.

Continue Reading →

ஈழத்துக் கலைஞனின் வாழ்வின் எல்லை…

அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன்ஈழத்தின் வடபுலக் கிராமமான கரவெட்டியில் 10/07/1944இல் பிறந்து கலை உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.எழுத்து,நடிப்பு தன் மூச்சாகக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.தொலைபேசியில் பேசுகையில் அதிராமல்,நிதானமாகக் கேட்டபடி அமைதியாக பதில் சொல்வது அவரின் பழுத்த அனுபவத்தைச் சுட்டி நின்றன.யாழ்ப்பாணத்தில் நாடகம்,நடிப்பு என அலைந்த நாட்களில் யாழ்நகர விளம்பர நிறுவனங்களான பெஸ்டோன்,மணிக்குரல் விளம்பரசேயினரின் ஒலிபரப்பில் அடிக்கடி பயணிக்கையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பயணிக்கும் போதும் பயணிகளை மகிழ்வதற்காக பேரூந்தின் சாரதியால் ஒலிபரப்படும் ஒலிநாடாவும் பயண களைப்புத் தெரியாமல் குதூகலமாய் திரிந்த காலங்களும் உண்டு.பின் இலங்கை வானொலியில் -அண்னை றயிற், ஒலிக்கையிலும் எங்கடை பொடியன் என்று என் தந்தை சொல்லி மகிழ்ந்ததி இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.பிறகு கே.எம்.வாசகரின் இயக்கத்தில் சில்லையூராரின் அறிவிப்பில் ஒலிபரப்பாகிய ‘தணியாத தாகம்’ அந் நாட்களில் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது.இன்றுஎப்படி சின்னத்திரைகள் நம்மவர்களைக் கட்டிப்போட்டதோ அதே போல அந் நாட்களில் இலங்கை வானொலி நாடகங்கள் நம்மை ஆட்கொண்டிருந்ததை மறக்கமுடியாது. தணியாததாகத்தில் சோமு என்ற பாத்திரமே மக்கள் மனதில் இடம்பிடித்தது. யாழ்ப்பாணத்து வழக்கு மொழியை மேடையில் அற்புதமாக கொழும்பு மேடைகளில் ஒலிக்க வைத்ததில் வரணியூரானுக்கும், கே.எஸ்.பாலச்சந்திரனுக்கும் முக்கிய இடம் உண்டு.அதே போல கமலாலயம் மூவீஸாரின் ‘வாடைக்காற்று’ திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து திரையிலும் ஜொலித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் கடமையாற்றியபடி, மேடை,வானொலிநிகழ்விலும் பங்குபற்றினார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புபொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ”கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.”  பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ”இத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்” என்கிறார்.

Continue Reading →

எழுத்துப்பறவை ஒன்று சிறகசைத்தது விண்ணோக்கி: ந,பாலேஸ்வரி

இலங்கை நாவல் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ந.பாலேஸ்வரி.அந் நாட்களில் மித்திரன், ஜோதி, தினகரன், ஈழநாடு, கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, சுடர், சிரித்திரன், கவிதை உறவு, தமிழ்மலர், ஒற்றைப்பனை, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் மலர், சுதந்திரன் போன்ற பல அச்சு ஊடகங்களில் சிறுகதை, நாவல்,கட்டுரை என எழுதிவந்தவர்.இன்றுவரை அவரை நாவல் ஆசிரியராகவே அனைவர்க்கும் தெரியும்.அவர் சிறந்த பேச்சாளர்.சிரித்திரன் ஆசிரியர் கூட அவரின் எழுத்தை சிலாகித்துப் பேசியதை கேட்டிருக்கிறேன்.

இவரின் எழுத்தில் லக்ஸ்மி,ரமணிச்சந்திரன் போன்றோரின் சாயல் இருப்பதாகக் கூறுவர்.ஒருமுறை திரைப்படம் சார்ந்து  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவரின் நாவலைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தோம்.அப்போது செங்கை ஆழியானின் யானை எனும் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொண்டதாகவும்,வனபரிபாலனச்  சட்டம் இடம் கொடுக்காததால் அது கைவிடபட்டதகவும் சொன்னார்கள்.பிறகு காலம் எம்மை மாற்றிவிட அது முடியாது போயிற்று. எளிமையாக வாழ்ந்தவர்.தனது சேகரிப்புகளெல்லாம் அழிந்துவிட்டதாகவும் சொன்னார்.இவரின் தந்தையின் தமிழ்ப்பற்றும்,தந்தையாரின் தம்பி திருகோணமலையின் பிரபல எழுதாளராகவும் இருந்ததும் இவரையும் அதுறை நாடிச் சென்றதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் தந்தையாரின் பெயரான பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரையும் இணைத்தே எழுதினார்.பின்னர் திருமணமாகியதும் கணவனின் பெயருடன் இணைத்து தொடர்ந்து எழுதினார்.

Continue Reading →