லண்டனில் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட சமர்ப்பணம்

‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’   ‘கானடா ராகத்தில் ராமநாத் சீனிவாச ஐயங்கர் இசையமைத்த கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘நேர நம்’ வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்த செல்வி பிரித்தி மகேந்திரன் முத்துசுவாமி டிக்சிதர் இயற்றிய ஆதி தாளத்தில் – ஹம்சத்தவனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதிம், மற்றும் எம்.என். தண்டபாணிதேசிகர் இயற்றிய அமிர்தவக்கினி ராகத்தில் – தாளம் ஆதியில் அமைந்த ‘என்னை நீ மறவாவாதே’, தியாகராஜ சுவாமிகள் கௌளை ராகம் – தாளம் ஆதியில் அமைந்த பஞ்ச ரத்தின கீர்த்தனை ‘தூ டூ கு கல’, மேலும் ‘பரோவா பாரமா’ என்ற பௌகுதாரி ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பாடல், நாகபூஷணி அம்மனுக்கு கே. மணிபல்வனின் தந்தை கனகரட்னம் இயற்றிய ‘எத்தனை காலம்’ என்ற பாடலுக்கு ஆதி தாளம் – காப்பி ராகத்தில் கே. மணிபல்லவம் இசையமைத்த பாடல் ,  பிரித்தியின் குரு மணிபல்லவம் கே. சாரங்கன் இயற்றி இசையமைத்த சிவரஞ்சனி ராகத்தில் – தாளம் ஆதி – தில்லானா போன்ற பல ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி கச்சேரியை இனிமை, கம்பீரம், குழைவு, சோகம், ஏக்கம் நிறைந்த பாவங்களால் அவரது இசை மாறிமாறி ஒலித்தமை பாராட்டுக்குரியது என மேலும் அவர் பாராட்டினார்.’

Continue Reading →

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.

Continue Reading →

கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை

நூலாசிரியர் அகில்இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து  வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே  ஆகும்.

Continue Reading →

தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்!

– பதிவுகள் இணைய இதழில் 2005 காலகட்டத்தில் விவாதங்கள் பல நடைபெற்றன.  எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதிட்டுக்கொண்டார்கள்.  முட்டி மோதிக்கொண்டார்கள். இங்கு வெளிப்படும் கருத்துகள் பதிவுகள் இதழின் கருத்துகளல்ல. வாதங்களில் பங்குபற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகளே.  உயிர்மை ஏப்ரல் 2005  இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்று கட்டுரையொன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அது தொடர்பாக R.P. ராஜநாயஹம் ‘சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! ‘ என்றெழுதிய கட்டுரையும் , அதனைத் தொடர்ந்து வெளியான எதிர்வினைகளும்  ஒரு பதிவுக்காக  ‘பதிவுகள் அன்று’ பகுதியில் மீள்பிரசுரமாகின்றன. – ஆசிரியர் –

தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்!  – R.P. ராஜநாயஹம் –

1_ashokamitran_b.jpg - 12.73 Kb R.P. ராஜநாயஹம்மிழ் இலக்கியச் சூழலை நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களமாக்கி அழிப்பதுதான் தன்னுடைய நோக்கமென்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார். உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்பதாக இவர் எழுதியுள்ள கட்டுரை இவருடைய நேர்மையின்மையின் வெளிப்பாடு. ‘அசோகமித்திரன் – 50’ ஒளிப்பேழையை காலச்சுவடு மூலமாக கிழக்கு பதிப்பகத்திடமிருந்து பெற்று அந்த நிகழ்ச்சியை முழுமையாக, மூன்றுமுறை ஆழ்ந்து பார்த்தேன். சுந்தர ராமசாமி தன் பேருரையில் அசோகமித்திரனுக்கு பூரண மஹா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்து கௌரவித்திருக்கிறார். பேசியவர், பேசப்பட்டவர் இருவரையும் பற்றி எண்ணும்போது தியாகய்யரின் ஸ்ரீராகக் கீர்த்தனை ‘எந்த்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு’ என்நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தது. சுந்தர ராமசாமி பேசியதின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘மிக முக்கியமானவராக அசோகமித்திரனை நான் கருதுகிறேன். நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்ச்சிக்காக இப்போது எண்பது கதைகளை என்னால் வாசிக்க முடிந்தது. இந்த சிறுகதை உருவத்தின் மீது இந்த கலைஞன் கொண்டிருக்கிற தீராத ஆசை. ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றிப் பேச நாம் இங்கே கூடியிருக்கிறோம். அசோகமித்திரன் 1950 வாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்களின் பாதிப்பு அவரிடம் இல்லை. அவருடைய எழுத்தால் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை அவரால் கவரமுடியவில்லை. இடதுசாரி, முற்போக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றவர்களுக்கு இவருடன் உறவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. வாழ்க்கை பற்றி ஓயாத கவலை, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்ற இவருடைய அக்கறையை அவர்கள் பரிசீலனை செய்யாதது ஏன்? வாசகர்கள் இரண்டு வகை 1. இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்கள். 2. விசுவாசமான வாசகர்கள். இவர்களில் இலக்கியத்தை நேசிக்கிற வாசகர்களால் இனி அசோகமித்திரனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். அசோகமித்திரனின் படைப்புகள் சுவாரசியமாக, உறுத்தல் இல்லாதவை. வாழ்க்கையின் சாராம்சத்தை படைப்பாக மாற்ற இவரால் முடிந்திருக்கிறது’.

Continue Reading →

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்டப் புளுகுகள்!

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்ட புளுகுகள்! [ சக இணையச் சஞ்சிகையான ‘திண்ணை’ நமது நட்புக்கும் மதிப்புக்குமுரியது. ரோஸாவசந்தின் இக்கட்டுரை ஆரோக்கியமானதொரு விவாதத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் கருதியும், கருத்துச் சுதந்திரம் கருதியும் [அதற்காகப் பதிவுகள் நூற்றுக்கு நூறு வீதம் கருத்துச் சுதந்திரமான சஞ்சிகை என்று மார் தட்டிக் கொள்ள நாம் வரவில்லை] பதிவுகளில் பிரசுரமாகின்றது. திண்ணையைப் பொறுத்தவரையில் இணையத் தமிழ் சஞ்சிகைகளில் முதலாவதாக வெளிவந்த/ வெளிவருகின்ற ஆரோக்கியமான, காத்திரமான தமிழ் இணையச் சஞ்சிகை என்ற பெருமை அதற்குண்டு. இணைய விவாதப் பக்கம் எம்மை நாட வைத்ததே திண்ணையின் விவாதத் தளம்தான். இக்கட்டுரையினை இங்கு பிரசுரிப்பதன் மூலம் திண்ணையையோ அல்லது அதன் படைப்பாளிகளையோ (நானும் அவர்களிலொருவன் தான்) அவதூறு செய்யும் நோக்கம் எமக்குக் கிடையாது என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். – ஆசிரியர் -]

-3. எழுத மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஒரே மாதிரியான விஷயங்களை, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எத்தனை முறை சொல்வது! எனது பால், ஜாதி, சமூக நிலை காரணமாய் எனக்கு கிடைத்த எந்த சலுகையையும் விட்டுவிடாமல் அனுபவித்துகொண்டு, அதனால் விளைந்த ஒரு திமிரும் ஏதோ ஒருவகையில் கலந்துதான் ஒவ்வொருவார்த்தையும் என்னிடமிருந்து பிறக்கின்றன. இதில் என் குரல் திண்ணையில் அமுக்கபட்டது குறித்து ஒப்பாரி வைப்பது போன்ற ஆபாசம் கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் என் எழுத்து திண்ணையில் தடை செய்யபட்டது குறித்து, என் பொருட்டு யாரும் இரங்கல் தெரிவிக்க நியாயமான காரணங்கள் இல்லை. இந்த கட்டுரையுடன் தொடர்புள்ள ‘விவாதம்’, மற்றும் திண்ணை என்ற பத்திரிகை, அதில் உள்ள ‘கருத்து சுதந்திரம்’, அதன் ‘நாட்டாமை’, குறித்து பலருக்கு இருக்கும் பிம்பம் இவற்றை மனதில் வைத்து சில தகவல்களை மட்டும் குறிப்பாய் கீழே தருகிறேன். 

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கையின் மண்வாசனையை இலக்கியப்படைப்புகளில் பரவச்செய்த மருதூர்க்கொத்தன், இன்று அவரது பிறந்த தினம்

1_maruthurkoththan.jpg - 9.85 Kbமுருகபூபதிபல   படைப்பாளிகள்   தமது   இலக்கியப்பிரதிகளை  எழுதும்பொழுது இயற்பெயரை  விடுத்து   புனைபெயர்களில்    அறிமுகமாவார்கள்.   பலர்   தமது   பிறந்த  ஊருக்குப்பெருமை   சேர்க்கும்   வகையில் தமக்குத்தாமே   ஊருடன்   இணைந்த  புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில்  அவர்களின்    இயற்பெயரை    பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண   சான்றிதழ் –  மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும்.    இலக்கிய   வட்டத்திலும்   குடும்ப  மட்டத்திலும் புனைபெயரே   நிலைத்துவிடும். கிழக்கு   மாகாணத்தில்   இஸ்மாயில்    என்ற   பெயரில்  ஒரு எழுத்தாளர்  இருந்தார்    எனச்சொன்னால்  எவருக்கும்  தெரியாது. மருதூர்க்கொத்தனையா  சொல்கிறீர்கள்   என்று   அவருக்கு  மிகவும் நெருக்கமான   சிலரே    குறிப்பிடுவார்கள். கிழக்கு   மாகாணத்தில்   கல்முனைக்கு   அருகாமையில்   பெரிய நகரமும்   அல்லாமல்   சிறிய   கிராமமாகவும்   காட்சியளிக்காத கடலோர   சிற்றூர்   மருதமுனை. இந்த   ஊரில்  மருதூர் ஏ. மஜீத்  –   மருதூர்க்கனி   –   மருதூர் வாணன் என்ற   பெயர்களில்   எழுதியவர்களின்   வரிசையில்   முன்னோடியாக இருந்தவர்   மருதூர்க்கொத்தன். 1935  ஜூன்  மாதம்  6  ஆம்  திகதி   அநுராதபுரத்தில்   பிறந்த   இஸ்மாயில்   என்ற    மருதூர்க்கொத்தன்    (இன்று  அவர்  உயிருடன் இருந்திருந்தால்  79   ஆவது   வயதை   குடும்பத்தினருடனும் இலக்கிய   நண்பர்களுடனும்    கொண்டாடியிருப்பார்.)  2004 ஆம் ஆண்டு  ஏப்ரில்  மாதம்  19  ஆம்   திகதி  மறைந்தார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்

- மு. நித்தியானந்தன் - “watch our girls march fearless of the fight 
Torch of learning burning ever bright”     – இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.

இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி  ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.

      ‘நடு இரவில்
      எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
      சூரியன் உதிக்கும் பொழுது
      இருள் தோன்றுகின்றது’

என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 43: முகநூற் குறிப்புகள் சில.

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

– அவ்வப்போது முகநூல் பக்கங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புகளில் சிலவற்றை இம்முறை பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன்.  –

 

நல்ல எழுத்தும், வாசிப்பும்!
 
நல்ல எழுத்து என்பது எப்பொழுதும் , வாழ்க்கை முழுவதும் ஒரு நண்பரைப்போல் கூட வருவது. இவ்விதம் வரக்கூடிய எழுத்துகளைத்தான் நான் நல்ல எழுத்து என்பேன். என்னைப் பொறுத்தவரையில் தத்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் போரும், சமாதானமும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு , வால்ட்டயரின் ‘கேண்டிட்’, டானியல் டிபோவின் ராபின்சன் குரூசோ, ஹெமிங்வேயின் ‘கடலும், கிழவனும்’, ஜான் மாட்டலின் ‘பை’யின் வாழ்வு, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீல கண்டப் பறவையைத் தேடி’, பாரதியார் கவிதைகள், ‘மோபிடிக்’, ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘செம்பருத்தி’, அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள், ‘ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்’ (நாவல்), ஜேர்சி கொசின்சிகியின் Being There போன்ற புத்தகங்களைக் கூறலாம். இவர்களை ஓர் உதாரணத்துக்குக் கூறினேன்.

Continue Reading →

சிறுகதை: துயர் ஆரஞ்சுகளின் நிலம்

சிறுகதை: துயர் ஆரஞ்சுகளின் நிலம்ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம்.  ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை, சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள் சோர்வுற, பெண்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்ய என, நீ, நான் நம் வயதொத்தவர்கள் இந்நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவு முதிர்ச்சியற்றவர்களெனினும் ஆதி அந்தம் என எதுவும் விளங்கவில்லை எனினும்- உண்மை மெதுவாக துலங்க ஆரம்பித்தது. காலையில், யூதர்கள் பின்வாங்கும் நிலையில்  அவர்கள் எரிச்சலுடன் மிரட்டல் விடுத்தவாறு இருந்தபோது– ஒருபெரிய லாரி ஒன்று எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது.. படுக்கைகளின் ஒரு சிறு தொகுப்பு இங்கும் அங்கும் விரைவாக, எரிச்சலுடன் எறியப்பட்டது. நான் வீட்டில் பழஞ்சுவர் ஒன்றின் மீது வியந்து நின்று கண்ட நிலையில் உனது தாய், அத்தை மற்றும் குழந்தைகள் லாரியில் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னுடைய தந்தை ,உன்னை, உனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை பொருட்கள் மீது உள்ளெறிந்தவாரிருந்தார். உனது தந்தை என்னைப் பற்றி ஓட்டுநரின் மேற்புறம் காணப்பட்ட பலகைக்கு மேலாக உயர்த்தினர்; அங்கு எனது சகோதரன் ‘ரியாத்’ அமைதியாக அமர்ந்திருந்தான். நான் ஒரிடத்தில் அமைதியாக அமரும் முன் லாரி நகரத் தொடங்கியது. அன்பிற்குரிய ஆக்ரி, ராஸ் நாகுராவிற்கு செல்லும் சாலை எம்மை அழைத்துச் சென்ற வழியில் வாகனம் கிளம்பியதும் கண்களிலிருந்தும் மறையத் துவங்கியது.

Continue Reading →