வாசிப்பும், யோசிப்பும் 59 : மேலும் சில முகநூற் குறிப்புகள்!

எனக்குப் பிடித்த நாவல்களில் சில.

வாசிப்பும், யோசிப்பும் : மேலும் சில முகநூற் குறிப்புகள்!இது ஒரு தர அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலல்ல. நான் வாசித்த படைப்புகளில் என் மனதில் முதலில் தோன்றிய படைப்புகளிவை. இங்குள்ள படைப்புகள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தவை.

1. டால்ஸ்டாய் – புத்துயிர்ப்பு
2. தத்தயேவ்ஸ்கி – குற்றமும், தண்டனையும்
3. அதீன் பந்த்யோபாத்யாய – நீலகண்ட பறவையைத் தேடி..
4. தி.ஜானகிராமன் – மோகமுள்
5. எம்.டி.வாசுதேவன் நாயர் –  காலம்
6. ஹெமிங்வே – கடலும், கிழவனும்

Continue Reading →

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..’

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'1.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது.  தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? ‘யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.

Continue Reading →

எழுத்தாளர் அமரர் டானியல் அன்ரனி ஞாபகார்த்த சர்வதேச ரீதியான சிறுகதைப்போட்டி 2014

எழுத்தாளர் அமரர் டானியல் அன்ரனி ஞாபகார்த்த சர்வதேச ரீதியான சிறுகதைப்போட்டி 2014ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தினைப்பிடித்த சிறுகதைப்படைப்பாளியும் முற்போக்கு எழுத்தாளரும், “சமர்”  இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமாகிய திரு டானியல் அன்ரனி அவர்கள் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன அவரது இலக்கியப்பணியை நினைவு கூரும் முகமாக அவரது ஞாபகார்த்த குழுவ…ும் அவரது குடும்பமும் இணைந்து இவ்வருடம் தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இலக்கியப்போட்டிகளை சர்வதேச ரீதியாக நடாத்தி விருதுகளை வழங்க முன்வந்துள்ளனர் என்பதை அக மகிழ்வோடு அறியத்தருகின்றோம்

மேற்குறித்த சிறுகதைப்போட்டியில்
முதலாவது பரிசு – 25,000ரூபாயும் (தங்கப்பதக்கமும்)
இரண்டாவதுபரிசு-20,000ரூபாயும் வெள்ளி
மூன்றாவது பரிசு- 15,000ரூபாயும் வெண்கலம்

அத்துடன் 10 பேருக்கு தலா 5000/= பெறுமதியான ஆறுதல்ப்பரிசில்களுடன் சான்றிதளும் வழங்கப்படவுள்ளது.

Continue Reading →

கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி நினைவஞ்சலி கூட்டம்

1_krisnamoorthy57.jpg - 3.61 Kb

அன்புடையீர், வணக்கம், கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நாளை(12.09.2014) மாலை 8மணி அளவில் தி.ந்கர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெற உள்ளது அனைவரும் வருக

Bharathi Puthakalayam
7, Elango Salai, Teynampet
Chennai – 600 018
# 044-24332424
www.bookday.co.in

Continue Reading →

சிறுகதை பயிற்சி பட்டறை

முன்பதிவுக்கு: 9840698236

சிறுகதை பயிற்சி பட்டறைநண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறது. சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் அழகியபெரியவன்
எழுத்தாளர் போப்
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஜி. குப்புசாமி
எழுத்தாளர் பவா செல்லதுரை
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஷைலஜா

Continue Reading →

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை…

Continue Reading →

கலகலப்பு ” கைத்தலம் “ : எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைகள்

சுப்ரபாரதிமணியன்எழுத்தாள நண்பர் எஸ். சங்கர நாராயணன்  மகன் பிரசன்னா திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் மனதிலிருந்தது. அலுவலகப்பிசாசின் அவஸ்தைதான். அத்திருமண தாம்பூலப் பையில் ஒரு புத்தகம் தந்தது பற்றி பல நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி சில பத்திரிக்கைகள் எழுதின. அந்தப் புத்தகம் அவரின்  16 சிறுகதைகள் கொண்ட ” கைத்தலம் ” என்ற புத்தகம்.   சமீபத்தில் இலக்கிய வீதியின்    ” அன்னம் விருது”  வாங்க சென்னை போயிருந்த போது திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் ஞானராஜசேகரன் கையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை கூட்டியது சங்கரநாரயணன் அந்தப்புத்தக பிரதியைப் பரிசளித்தது. அக்கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த போது மூன்று மாதம் இதை படிக்காமல் போய் விட்ட குறை, திருமண வைபவத்திற்குப்  போகாத குறையை விட  உறுத்தியது. அமர்க்களமான கதைகள் . அபாரமான நகைச்சுவை. புத்தகமெங்கும் நிறைந்திருந்தது. கல்யாண வீட்டின் நல்ல விருந்து போல. . சில பிரசுரமாகாத கதைகளும் பல பிரசுரமான முன்பே படித்து ரசித்த கதைகளுமான தொகுப்பு அது.  இதில் பெண் யாதுமாகி நிற்கிறாள். தாயாய் , சினேகிதியாய், காத்லியாய், குருவாய்  என்று. இப்படி பெண்ணை பெருந்தன்மையுடன் பார்ப்பதற்கு எவ்வளவு முதிர்ச்சி வேண்டும். திருமணத்தை ஒட்டி நடைபெறும் பெண்பார்த்தல், கல்யாண ஏற்பாடுகள், மூகூர்த்த கால சடங்குகள், சச்சரவுகள், குடும்ப போட்டோக்கள் எடுத்துக் கொள்வது, குலதெய்வம் கோவிலுக்குப் போவது, சொந்தங்கள் தரும் மகிழ்ச்சி, சங்கடங்கள் எல்லாம் உள்ளடக்கிய கதைகள் இவை. பெண் பார்க்கும் படலம் முதலே பெண்ணுள் ஆக்கிரமிக்கும் உணர்வுகளை துல்லியமாக்க் காட்டுகிறார். ஊமைப் பெண்ணாக இருந்தாலும் அவள் திடமாக நின்று கணவனுக்கு காவலாளி ஆகிறாள்.  ஜாதீயத்தீ பலரை பலி கொள்கிறது. அம்மாக்களின் பெருமைகளுக்கும்,  தியாயங்களுக்கும் குறைவேயில்லை.கோபத்தை அணிகலனாய் அணிந்து கொள்ளும் ஆண்கள், பொறுமையை அணிந்து கொள்ளும் பெண்கள் என்று உறவுகளில் விதவிதமாய் இருக்கிறார்கள். உறவுகளுக்கு மத்தியில் கிண்டல்கள் மலிந்திருப்பது போல் எஸ். ச வின். உரைநடையில் நகைச்சுவை மலிந்தும் , மிளிர்ந்து கிடக்கிறது.சில உதாரணங்கள்: ஊறுகாய் குலுக்கல் போல்/,பூனை மியாவ் என கோரிக்கை வைக்கும் சாப்பிடுவது உப்புமாவாக இருந்தால் சேமியாவ்./ பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப் பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை./    

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 58: கனடாத் தமிழ் இலக்கியமும் ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும்.

kural_issues.jpg - 65.78 Kbகனடாத் தமிழ் இலக்கியமென்றால் ‘தாயகம்’, ‘காலம்’, ‘தேடல்’, ‘ரோஜா’, ‘பொதிகை’ போன்ற சஞ்சிகைகளும், ‘பதிவுகள்’ இணைய இதழும், ‘தாய் வீடு’, ‘ஈழநாடு’, ‘சுதந்திரன்’, ‘வைகறை’ போன்ற இலவசப்பத்திரிகைகளும், எழுத்தாளர்கள், அமைப்புகளினால் வெளியிடப்பட்ட நூல்களும் ஞாபகத்துக்கு வரும். அவை பற்றிய போதிய பதிவுகள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத (பதிவுகள் இணைய இதழ் தவிர்ந்த) ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, ‘டொராண்டோ’விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து ‘குரல்’ சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. ‘குரல்’ கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.

Continue Reading →

தொடர் நாவல்: 1983

தொடர் நாவல்: 1983  – தாயகம் (கனடா)வில் தொண்ணூறுகளில் தொடர்நாவலாகப் பிரசுரிக்கப்பட்ட எனது நாவலான 1983 தாயகம் சஞ்சிகை நின்று விடவே இடையில் எட்டு அத்தியாயங்களுடன் நின்று போனது. வெளிவந்த அத்தியாயங்களின் விபரங்கள் வருமாறு:  அத்தியாயம் ஒன்று,  அத்தியாயம் இரண்டு,  அத்தியாயம் மூன்று,  அத்தியாயம் நான்கு.,  அத்தியாயம் ஐந்து: பிரச்சினைக்குரிய தீர்வு?,  அத்தியாயம் ஆறு: நடைமுறையும், தத்துவமும்,  அத்தியாயம் ஏழு: போரும், மனிதனும் , சூழலும்.,  அத்தியாயம் எட்டு: அகதி முகாம். இந்த நாவல் 1983 கறுப்பு ‘ஜுலை’க் கலவர நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது; முற்றுப்பெறவில்லை. ஒரு பதிவுக்காக வெளியான எட்டு அத்தியாயங்களும் மீள்பிரசுரமாகின்றன. இந்த நாவலினை மீண்டும் எழுதுவதற்கான நோக்கமெதுவும் தற்போதில்லை என்பதால் இந்தப் பதிவு முக்கியமானது. – வ.ந.கி –

அத்தியாயம் ஒன்று!

வாழ்க்கை சில வேளைகளில் சலிப்புற்றுப் போய்விடுகின்றது. இனம் புரியாத சோர்வும், தளர்வும் உடல் முழுக்கப் பரவிவிடுகின்றன. ஏனென்று  புரியாததொரு ஏக்கம் , எதற்காக  இந்தப் பிறப்பு? , பிறப்பின அர்த்தமென்ன? என்பன போன்ற விடை தெரியாக்கேள்விகளால் நெஞ்சு நிறைந்து விடுகின்றது.  சிறு கிரகம். சிறு தீவு. இதற்குள் ஒரு வாழ்க்கை. பிறகேனிவ்விதம் மோதலும், இரத்தக்களரியும்… ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய பொழுதுகளைச் சிதைத்துச் சீரழிக்கின்றோம். ஏன்? இனம், மதம், மொழி போன்ற விடயங்களில் மனிதர்கள் இன்னமும் மந்தைக் கூட்டம் போன்றுதான் செயற்படுகின்றார்கள். ஆறாவது அறிவைப் பாவிக்க விடாமல் உணர்வுகள் தடுத்து விடுகின்றன. சரி, பிழை எல்லாம் தெரிந்துதானிருக்கின்றது. ஆனாலும் அவற்றை உணர்ந்து வாழ முடிவதில்லை. அண்மைக்காலமாகவே மீண்டும் தமிழ் மக்கள் மீதான் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடரத்தொடங்கி விட்டன. காந்தியம் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். ஆங்காங்கே படையினரால், காடையினரால் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் தொடரத்தொடங்கி விட்டன. குடும்பத்தவரை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. என்னையே நம்பிக் கனவுகளுடனிருக்கின்றார்கள். எத்தனை வருடங்கள் எங்களிற்காக அம்மா மாடாய் உழைத்திருப்பா. ஒரே மகனையும் கொழும்புக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு நாடிருந்த நிலையில், குமருகளுடன் கிராமத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த உள்ளத்தை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது.  கணவனையிழந்த நிலையில் , தன்னந்தனியாக, எவ்வளவு நெஞ்சுரத்துடன் எங்களை வளர்த்து வந்திருக்கின்றா. அந்தக் கருணைக்கு நாங்கள் எவ்விதம் கைம்மாறு செய்யப்போகின்றோம்? இதற்கிடையில் மல்லிகா வேறு. இவள் என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களில் ஒருத்தி.  சிங்களப் பெண்.  கள்ளங்கபடமற்ற அவள் சொல்லும், செயலும் , நெஞ்சும் என்னை ஏனோ தெரியவில்லை ஈர்க்கத்தான் செய்து விடுகின்றன.  இவள் விடயத்தில் நான் என்னை மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருக்கின்றது.  வாழ்க்கையைத் தொலை நோக்குடன் சிந்திப்பவன் நான். அதிலும் அதிகமாக சமுதாயப் பிரக்ஞையென்று சொல்லுகின்றார்களே அதில் கொஞ்சமும் என்னிடமுமிருப்பதாகக் கருதுபவன்.  நாடிருக்கும் நிலையில் எப்படியெப்படியெல்லாம் என் வாழ்க்கை சுழன்றடிக்கப்போகின்றதோ தெரியவில்லை. இந்த நிலையில் இவளை என்னுடன் இணைத்துப்பார்க்கவே முடியாமலிருக்கின்றது. யதார்த்தத்தில் சாத்தியமாகக் கூடிய விடயமாகவும் தெரியவில்லை.

Continue Reading →

‘செப்டெம்பர்’ 2014 கவிதைக்ள்!

செப்டம்பர் 2014  கவிதைக்ள்!மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைக்ள்!

1. கூடு

மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,

உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,

பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,

Continue Reading →