வ.ஐ.ச.ஜெயபாலனுடனான சந்திப்பு.| காலம் – 19.12.2015 (சனிக்கிழமை) மாலை 5.30 – 8.00 மணிவரை இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12…
அன்பு ‘பதிவுகள்’ வாசகருக்கும் உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம். அச்சில் மற்றும் இணைய வெளியில் வெளியாகும் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை யாவுமே நம் வாசிப்பை வளப்படுத்துபவை. ஒரு விமர்சகராக மற்றும் வாசகராக அவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.வாய்ப்பளித்த வ.ந.கிரிதரன் அவர்கட்கு நன்றிகள். அன்பு சத்யானந்தன்.
மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ( ஜப்பான் : ஹாருகி முரகாமி; ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் )
மலைகள் இணைத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் அற்புதமான சிறுகதைக்கான இணைப்பு இது. மொழிபெயர்ப்பு நம் தமிழில் எழுதப்பட்ட கதை இது என்னுமளவு நம்மை முரகாமிக்கு அண்மைப்படுத்துகிறது.
கதையின் இந்தப் பகுதி முத்தாய்ப்பானது மட்டுமல்ல நம் சிந்தனையைத் தூண்டுவது:
‘சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.’
நீண்ட பெரும் முயற்சி, உழைப்பு, பணச்செலவு, நேர அர்ப்பணம் எனத் தன்னியல்பின் வழி நின்று அர்ப்பண சிந்தையோடு செயற்பட்டதன் விளைவாக எமது கைகளில் இன்று வன்னியபற்றிய தாக்கம் மிக்க ஆவணத்திரட்டு ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இந்த முயற்சியைச் செய்தவர் நோர்வேயில் வாழ்ந்துவரும் வவுனிக்குளத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம். வவுனிக்குளம் 2ம் படிவத்தைச் சேர்ந்தவர். அங்கு கிராமசேவையாளராகப் பணியாற்றியதோடு திடீர்மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நிதவானாகவும் கடமையாற்றிய பெரிய தந்தையாரின் மகன் கந்தையா பரமநாதனுக்கும் வவுனிக்குளத்தில் 1958ம் ஆண்டு குடியேறியதிலிருந்து அப்பிரதேச மக்களின் அனைத்து நலன்களிலும் அயராது உழைத்த தனது தாயார் திருமதி கந்தையா வள்ளியம்மைக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணையும் மக்களையும் ஆத்ம சுத்தியோடு நேசிக்கும் ஒருவராலேயே இத்தகைய ஒரு ஆக்கத்தைச் செய்த தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் கந்தையா சுந்தரலிங்கம். “நாம் வாழும் வன்னிமண் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னுள் புதைத்துக் கொண்டு அடுத்த சந்ததிகளையும் வாழவைப்பதற்காக பரந்து விரிந்கிடக்;கிற, புதைந்து கிடக்கும் அந்த மண்ணின் வரலாற்றையும் வாழவைப்பாதற்காக அடுத்த சந்ததிகளுக்காகச் சொல்லவேண்டிய கடமையுணர்வை ஏநோ நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம். ஒரு பெரம் நீண்ட வரலாற்றின் வாரிசுகள் கதைபேசி உறவாடிய வாழ்க்ககை ஒன்றும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இது ஐரோப்பய காலனிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வன்னியரின் போராட்டக்களம். விருந்து படைத்த மருதம், நெய்தல், முல்லை மண்கள் கூடிக்கலந்த பண்பாடு துளித்த தாய் மண்வன்னி” எனத்தனது பதிப்புரைக்கு முத்தாரம் இடும் அவர், “அநதத் தாய் மண்ணும் மரபும் ‘சார்ந்து நாம் முன்னோர்கள் சந்தித்த எழுச்சிகளும் வீழ்சசிகளுட், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு சிலிப்பபான புதிய அனுபவத்தைத் தரக்கூடும், வயல், காடு, குளம், கடல் பறவை, விலங்குகள் என எங்கள் முன்னோர்கள்சந்தித்த இயற்கைச் சூழல் நம்கண் மன்னே விடைபெறுகின்றது. மரபுகளிலும் சூழல்களிலும் நாம் கொண்டிருக்கும் உணர்ச்ியற்ற போக்கு எதிர்காலச் சந்ததியினரை மேலும் மண்ணில் இருந்து அந்நியப்படுத்திவுடும். வரலாறு கிழித்துப்போடப்பட்ட இந்நொரு ஓவியமாகவே இன்று வன்னியைப்ப ◌ார்க்கமுடிகிறது. வரலாற்றின் நிகழ்வகளையும் மரபுகளையும் மாத்திரமின்றிகூழலையும் சேர்த்து கோர்வைப்படுத்துவது ஒரு சமூக வழிப்புணர்வனை உருவாக்கும். அது ஒரு மிக அமைதியான, அறிவுபூர்வமான சந்ததிகளின் வளர்ச்சிக்கு உதவும்” எனக்குறிப்பிட்டுள்ள அவர்என தனது பதிப்புரையில் மண்ணின் பெருமையையும், அங்கு புதையுண்டுள்ள தொன்மை வரலாற்றையும் வெளியே கொண்டுவரவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் தன்னுள்ளத்துள் கொண்டதன் பயனாக பதிவாக்கப்பட்டதே இந்த ஏடு.
மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –
அத்தியாயம் ஏழு: நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்!
இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன. பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமானமொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வுகளைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.
முகவுரை
‘சரசோதி மாலை’ என்னும் சோதிடம் பற்றிய நூல் இலங்கையில், தென்னகத்தில் அமைந்திருந்த தம்பதெனிய என்னும் வரலாற்று இராசதானியில் கி.பி. 1310 ஆண்டளவில் அரங்கேற்றப்பட்ட தமிழ் நூலாகும். பண்டைய தமிழ் நூல்களைத் தேடியெடுத்து அவற்றைப் பதிப்பிக்கும் பணி ஈழத்தவரான ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை மற்றும் தமிழ் பற்றுக்கொண்டவரான தமிழ் நாட்டைச் சேர்ந்து உ.வே.சாமிநாத ஐயர் ஆகியோரைப் பின்பற்றி பல முயற்சிகள் காலங்காலமாக இடம்பெற்றுவருவது கண்கூடு. இவ்வகையிலே ‘சரசோதி மாலை’ கொக்குவில் சோதிடப் பிரகாசயந்திர சாலையில் மூன்று முறை பதிப்பிக்கப்பட்டுள்ளமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். 1892ல் முதலாம் பதிப்பும் 1909ல் இரண்டாம் பதிப்பும், குரோதி வருடம் அதாவது 1925ல் மூன்றாம் பதிப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை மறுபதிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2014ல் பதிவு செய்துள்ளது. இந்த நூலை அறிமுகம் செய்யப்புகுந்த கலாநிதி பாலசிவகடாட்சம் அவர்கள் அதனைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டுப் பார்வை” என்னும் படைப்பினை கனடாவில் கடந்த யூன் 6. 2015 அன்று அறிமுகம் செய்துவைத்தார்.
சரசோதி மாலைக்கு ஒரு மாலையா?
‘சரசோதிமாலை’ என்ற பண்டைய படைப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை ஏன் மீள் பதிவாக்கம் செய்யப்படவேண்டும்? இதன் பயன்பாடு எத்தகையது? நாம் வாழும் காலகட்டத்திற்கு இந்நூல் ஏற்புடையதா? இது யாரைச் சென்றடையும்? என்பனபோன்ற கேள்விகள் நம்முன்னே எழுகின்றன. மனித வாழ்வு இயற்கையோடு ஒட்டியது. இயற்கையின் செயற்பாடுகளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான ஒரு பார்வையை அல்லது ஆய்வினை மேற்கொள்ளுவதன் மூலமே தமிழனின் பாரம்பரியத்தையும் அவனது வாழ்வியலையும் அறிந்துகொள்ளமுடியும். பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஈழத்தின் தென்பகுதியை ஆட்சிசெய்த மன்னனான பராக்கிரமபாகு சோதிட நூலான ‘சரசோதி மாலை’யை இந்தியாவில் இருந்து வருவிக்கப்படட போஜராஜ பண்டிதரை ஆக்கும் வண்ணம் வேண்டியதன் பயனாக கி.பி. 1310ல் தனது அரசவையில் அரங்கேற்றம் செய்வித்தான் என அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரசோதி மாலை பற்றி அறிந்திருந்த கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் தனது கற்கைத்துறையான தாவரவியிலை விடுத்துச் சோதிட நூல்பற்றி ஆராய முற்றபட்டது ஏன்? என்ற வினாவிற்கும் அவரது ஆய்வினை நுணுகி நோக்குவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும். அவரது ஆராய்வூக்கமும் தமிழர் சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்றுதல் மட்டுமன்றி எம்முன்னோர் எமக்காக விடுத்துச் சென்ற அறிவியல் பற்றிய உண்மைகளை உலகறிய வைக்கவேண்டும் என்ற உந்துதலும் அவரது பெற்றோர் வாழையடி வாழையாகக் செய்துவந்த மருத்துவம், சோதிடம் போன்ற துறைகளில் பெற்றிருந்தத தேர்ச்சியும், அனுபவமும் அறிவாற்றலும் இதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன என ஊகிக்க இடமுண்டு.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ
–— உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு ) –
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, 13-12-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.