ஆய்வு: திணைச்சமூகப் பண்பாட்டில் சூழல் பொருத்தம் – நில ஒப்பாய்வு!

- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் – மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.

Continue Reading →

மர மனிதன்: ஓகே குணநாதனின் சிறுவர் நூல்! குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த சுற்றுச்சூழல் செய்திகள்!

சுப்ரபாரதிமணியன்ஓகே குணநாதன் அவர்கள் இவ்வாண்டில் மூன்று பரிசுகளைத் தமிழகத்தில் பெற்று கவனத்திற்குரியவரானார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,   ( சிவகாசி விழா ) ,  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருப்பூர் இலக்கியப்பரிசு ( சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) ஆகியவை அவை. தமிழகச் சிறுவர் இலக்கியப்படைப்பாளி மறைந்த கோவை பூவண்ணனை ஆதர்சமாகக் கொண்டவர்.அவரின் படைப்புகளின் சமீப மையம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என்பது குறிப்பிடதக்கதாகும்.

படங்கள் இல்லாத சிறுவர் நூல்கள் தமிழகத்தில் நிறைய வருகின்றன. படங்களும் அவை தரும் காட்சிப்படிமங்களும் சிறுவர்களுக்கான குதூகலத்தன்மை கொண்டதாகும். இதன் மறுபுறமாய்  ஓகே குணநாதன் நூல்களைச் சொல்லலாம்.அவற்றின் கதைப்பிரதிகளில் வரிகள் மிகக் குறைவாக இருக்கும். ஓவியங்களும், சித்திரங்களும் நிறைந்து காணப்படுவது அவரின் நூல்களின் சிறப்பியல்பு என்று சொல்லலாம்.

சமீபத்தில் அவர் கோவையில் குழந்தை எழுத்தாளர் செல்லகணபதியைச் சந்தித்த போது சிறுவர் இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் குறைந்து போயிருப்பதை கவலையுடன் அவதானித்தார். இது ஆரோக்யமானப் போக்கில்லை என்றும்  சொன்னார்.

Continue Reading →

பத்தி 12 : இணைய வெளியில் படித்தவை

யுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே”

எழுத்தாளர் சத்யானந்தன்காலச்சுவடு ஏப்ரல் 2016 இதழில் யுவனின் நீள்கவிதைக்கான இணைப்பு இது.  தமிழ்ச் சூழலில் கவிதை வாசிப்பு, விமர்சனம், கவிதை பற்றிய புரிதல் இவை படைப்பாளிகளுக்கே பிடித்தமான ஒன்று இல்லை. தனக்குக் கவிதை பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு பார்வையைப் பதிவு செய்பவர்களே விரல் விட்டு எண்ணக் கூடிய மூத்த படைப்பாளிகளில் வெகு சிலர். பிறர் நேர்மையாளர்கள். கவிதை என்ற ஒன்று இலக்கியத்தில் இருக்கிறது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாத நிம்மதி உடையவர்கள்.

கவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த தரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.

யுவனின் நீள் கவிதை பற்றிய மனத்தடை ஒன்றே. அதை நான் கடக்கவில்லை. ஆனாலும் இன்னும் மீள் வாசிப்பில் எனக்குள் விவாதித்தபடி இருக்கிறேன். கவிதையின் மிகப்பெரிய பலம் அது சொற்களை விரயம் என்னுமளவு வாரி இறைக்கும் புனைவு எழுத்தை – கதை அல்லது கட்டுரை – தனது சொற்சிக்கனத்தில் எள்ளுவது. குறிப்பாக யுவன் புனைகதை, கவிதை இரண்டுமே கைவரும் அபூர்வ உயிரினமானவர். காவியமாயில்லாத ஆன்மீகப் பொறியின் அடிப்படையிலான கவிதை எழுதியவர் ஏன் நீள் கவிதை எழுதினார்? இந்தக் கேள்வி என்னுள் இன்னும் நெருடியபடி தான் இருக்கிறது.

Continue Reading →

ஆய்வு: ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்!

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கருதப்படும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இந்நூல்கள் எவை என்பதை பற்றி

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

Continue Reading →

ரொறன்ரோவில் நடந்த இசைத்திறன்காணல் நிகழ்ச்சி

ரொறன்ரோவில் நடந்த இசைத்திறன்காணல் நிகழ்ச்சி அண்மையில் ரொறன்ரோ,  கனடாவில் உள்ள பிரபல இசைக்கல்லூரியான பாரதி கலைக்கோயிலின் வருடாந்த இசைத் திறன் காண் போட்டி நடைபெற்றது. தமிழ் மொழி, தமிழ் இசை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் பேணிக்காப்பதற்காக சிறந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைக்கல்லூரி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணவர்களைக் கலைத்துறையில் இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்கியிருக்கின்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் வைத்திய கலாநிதி செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கு பற்றித் தமது திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில்,

‘புலம் பெயர்ந்த இந்த மண்ணில் கடந்த 25 வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை அவதானித்து வருபவன் என்ற முறையில், இந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழியையும், பண்பாடு கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதில் பல மன்றங்களும், கல்லூரிகளும் முன்னின்று பாடுபடுகின்றன என்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். அந்த வகையில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கனடிய மண்ணில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இசை என்பது வெறும் இசையல்ல, அது மனதில் ஆரோக்கியத்தை வளர்க்கின்றது. இங்கே இசைபயிலும் பிள்ளைகள் கல்வியிலும் சிறந்தவர்களாக மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. தவறான வழியில் செல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் இசை, கலை, பண்பாடு, கலாச்சாரத்தைக் கற்பிக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எங்கள் தமிழ் மொழி இந்த மண்ணில் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமையும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளிலேதான் இருக்கின்றது. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்த மண்ணில் கலையை மட்டுமல்ல மொழியையும் காப்பாற்ற வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். எமது இலட்சியங்களை நிறைவேற்ற முடிந்தவரை ஒன்றுபட்டு உழைப்போம்.’

Continue Reading →

மீள்பிரசுரம்: கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?:

ஸ்டீபன் ஹாக்கிங்ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.

ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.

இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு. ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 169: நாவல் ‘குடிவரவாளன்’ பற்றிய வாசிப்பனுவமும், புலம் பெயர் அனுபவங்களும்…

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நேற்று நண்பர் எல்லாளன் தொலைபேசியில் அழைத்தார். அழைத்தவர் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உரையாடினார். எதனைப்பற்றியென்று நினைக்கின்றீர்கள்? எல்லாம் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த என் நாவலான ‘குடிவரவாளன்’ பற்றித்தான்.
நாவலை வாசித்தபொழுது தன் நெஞ்சினைத்தொட்டு விட்டதாகக் கூறினார். தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் அசை போட வைத்துவிட்டதென்றார். இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாம் தலைமுறையினர் பலரும் அனுபவங்களை விபரிப்பதால் பலருக்குத் தம் வாழ்வின் அனுபவங்களை நிச்சயமாக நினைவூட்டியிருக்கும்.

மேலும் தனது அனுபவங்கள் பலவற்றை விபரித்தார். ‘காலம்’ செல்வம் ‘தாய் வீடு’ பத்திரிகையில் இது போன்று தன் அனுபவங்களை எழுதியிருக்கின்றார் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அவரது அபுனைவு. இது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவு. அதுதான் வித்தியாசம்.

அவர் அப்பொழுது பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒருமுறை அவர் வன்கூவரில் வேலை தேடி மோட்டேல்கள் (Motel) ஏறி இறங்கியிருக்கின்றார். சென்ற இடங்களிலெல்லாம் மோட்டேல்களில் Vacancy என்ற அறிவிப்பு இருப்பதைக்கண்டு அவ்விதம் அறிவிப்புக்காணப்படும் இடங்களிலெல்லாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார். ஆனால் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. இவருக்கு ஒரே ஆச்சரியம் : ‘என்ன இது எல்லா இடத்திலும் ‘வேகன்ஸி’யென்று அறிவித்திருக்கின்றார்களே. ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே’ என்று. எப்பொழுதுமே பத்திரிகைகளில் வேலைக்கான ‘வேகன்ஸி’ விளம்பரங்களைப்பார்த்துப்பார்த்து ‘வேகன்ஸி’ என்றதும் மனது தவறுதலாக மோட்டேல்களில் அறைகளுக்கான ‘வேகன்ஸி’ அறிவிப்பை வேலைக்கானதாக எண்ணிவிட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் புகலிடத்தமிழர்களின் இழந்த ஊர் நினைவுகள் பற்றிய கழிவிரக்கம், புதிய இடத்தில் காணப்படும் நிறவேற்றுமை போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவ்விதமான அனுபவங்களும் புகலிடத்தமிழர்களின் அனுபவங்களே.

Bum / Bomb ( வீதி வழியே, பிச்சையெடுத்துக்கொண்டு அலைந்து திரிபவர்களையும் Bum என்று கூறுவது மேற்கு நாடுகளில் வழக்கம்.) இரண்டு சொற்களும் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் தமிழ் பாதுகாவல் அதிகாரியொருவர் அடைந்த அனுபவத்தை ‘புலம் பெயர்தல்’ என்னும் என் சிறுகதையொன்றில் விபரித்திருக்கின்றேன். வாடிக்கையாளர்களொருவர் இரண்டாம் தளத்தில் Bum இருப்பதாகக் கூறியதைக்கேட்ட அந்த அதிகாரி Bomb இருப்பதாகக்கருதி அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை அது. இது போன்ற புகலிட அனுபவங்கள் பல சிரிப்பை வரவழைக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 168: ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக…..

நெடுந்தீவு சண்முகநாதன்இன்று தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக எழுத்தாளர் தேவகாந்தனுடன் சென்றிருந்தேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமான ஒருவர் சண்முகநாதன். இவரை நான் ஒருமுறை 81.82 காலகட்டத்தில் சந்தித்திருந்த விடயத்தை இன்றுதான் உணர்ந்தேன். அவருக்கு அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த வந்திருந்த ‘ஜான் மாஸ்ட்டர்’ பழைய நிகழ்வொன்றினை நினைவு படுத்தியபோதுதான் அதனை உணர்ந்தேன். ஒருமுறை 81/82 காலகட்டத்தில் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்திருந்த அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற, காந்தியம் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   ‘தமீழீழ விடுதலை’ பற்றிய மூன்று நாள் கருத்தரங்கில் பல்வேறு  அமைப்புகளைச்சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வில் சண்முகநாதனும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடியுமிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் கோப்பொன்றினை (ரோனியோப் பிரதி) எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி ‘தாயகம்’ (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் கட்டுரையொன்றினை ‘நாவலர் பண்ணை நினைவுகள்’ என்று எழுதியிருந்தேன். பின்னர் அதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மீள்பிரசுரம் செய்திருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்”

“அந்தக் கருத்தரங்கில் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் ‘றோனியோ’ பிரதியாக தமது கட்சியின் கொள்கைப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார்..” (பதிவுகள், ‘நாவலர் பண்ணை நினைவுகள்‘ – 24 ஏப்ரில் 2012).

ஆரம்பத்தில் அவரது பெயர் உடனடியாக ஞாபகம் வர மறுத்தது. நெடுந்தீவு ராமநாதன் என்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் ‘நெடுந்தீவு சண்முகநாதன்’ என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் ‘தேடகம்’ நிகழ்வுகளில் அவ்வப்போது கண்டிருக்கும் சின்னத்தம்பி சண்முகநாதன்தான் அவர் என்பது இன்றுவரை தெரியாமலே இருந்தது இன்று ஜான் மாஸ்ட்டர் நினைவுபடுத்தும்வரை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 167: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்..’ பற்றிய குறிப்புகள்!

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தவளைப்பாய்ச்சல்’

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்.’ அதில் கூறப்பட்டுள்ள சுய விமர்சனங்களுக்காக அந்நூலினை எதிர்ப்பவர்களால் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நூல் விமர்சனங்களுடன் பல தகவல்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களை, அவை வெற்றிகரமானவையாக அமைவதற்காகப்போராளிகள் செய்த பயிற்சிகள், கொடுத்த விலைகள் ,இவற்றைப்பற்றியெல்லாம் விரிவாகவே விபரிக்கின்றது நூல். தமிழினியின் எழுத்தாளுமை நூலுக்கு மேலும் இலக்கியச்சிறப்பினை அளிக்கின்றது. யுத்தங்களை விபரிக்கையில் ஏற்படும் சக தோழிகளின் இழப்புகள் நெஞ்சைத்தொடும் வகையில் நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. போதிய உணவின்றி, போதிய ஆடைகளற்று பல சிரமங்களுக்குள்ளான நிலையிலும், தமது இலட்சியத்துக்காகப்  போராடும் அவர்களது நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியனவும் நூலில் விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலின் ஆவணச்சிறப்பு அதிகரிக்கின்றது.

நூலில் பூநகரி முகாம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

“1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்.” (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

” இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன.” (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் ‘தவளைப்பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

“புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் தவளை’ என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது.” (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் ‘தவளைப்பாய்ச்சல்’.

Continue Reading →

பவளவிழா நாயகன் ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 15 – 04 – 2016 அன்று 75 வயது. பவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள்! புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன்!

ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன்1.
“கிழக்கு  வானில்  சூரியன்  தங்கப்பாளமாக  ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான்.    சூரியோதயத்தை  நான்  முன்னர் கடற்கரையோரங்களில்   நின்று  பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால்,   உயரத்தில்,   பறந்துகொண்டிருக்கும்  விமானத்திலிருந்து, புதிய  கோணத்தில்  வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும்  மேகங்களினூடாக   அந்த   அழகிய காட்சியைப்பார்த்தபோது   நான்  மெய்மறந்துபோனேன்.   ஆதவனின்  ஒளிப்பிழம்புகள்    கணத்துக்குக்கணம்   புதிது  புதிதாய் கொள்ளை   அழகை   அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து  17   ஆண்டுகளுக்கு   முன்னர்   வானத்தில்   பறந்து வரும்பொழுது Dr.T.Gnanasekaran  அவுஸ்திரேலியா  சிட்னியில்  இறங்கும்  தருணத்தில்  விமானம்  தரைதட்டுவதற்கு  முன்னர்   அந்த அதிகாலைப்பொழுதின்  உள்ளங்கவர்  காட்சியை   தரிசித்த   58   வயது படைப்பாளி  ஞானசேகரனின்   அன்றைய   வர்ணிப்புத்தான்   அந்த சூரிய  உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில்  இலக்கியவானில் ஞானம்   கலை,  இலக்கிய  இதழின்  பரிமாணத்துடன்  அவருக்கு பேருதயமாகியது   என்பதற்கு  ஒரு  நேரடி  சாட்சியாக  இருந்துகொண்டு   பவளவிழா  நாயகன்  ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை.

1999 ஆம்  ஆண்டு அவுஸ்திரேலியாவில்  சிட்னியில்  வதியும்  தமது புதல்வரிடம்   இவர்  தமது   துணைவியாருடன்   புறப்படுவதற்கு முன்னர்   மல்லிகை  ஜீவாவிடம்  எனது  தொடர்பிலக்கம்  பெற்றுள்ளார். ஒருநாள்   சிட்னியிலிருந்து   ஞானசேகரன்  தொலைபேசியில் அழைத்தபோது,  மெல்பனுக்கு  அழைத்தேன்.   எமது  இல்லத்தில்  ஒரு  மாலைவேளையில்     இலக்கியச்சந்திப்பும்   இரவு   இராப்போசன விருந்தும்    ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன்  இலக்கிய  ஆர்வலர்கள் செல்வத்துரை   ரவீந்திரன் ,  டாக்டர்  சத்தியநாதன்,   நடேசன்,   புவனா ராஜரட்ணம்,    அருண். விஜயராணி,   பாடும்மீன்  சிறிகந்தராசா ஆகியோர்    கலந்துகொண்டனர். மெல்பனில்   பாலம்  லக்ஷ்மணன்   அவர்களின்  இல்லத்திற்கும்  மாவை நித்தியானந்தனின்   பாரதி   பள்ளிக்கும்   வேறு  சில இடங்களுக்கும்  அழைத்துச்சென்றேன்.    காரில்  அமர்ந்தவாறே குறிப்புகள்    எடுத்துக்கொண்டார்.    பயணக்கதைக்கு   அவர் தயாராகிவிட்டார். இலங்கை   திரும்பியதும்   தினக்குரல்  வார  இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை    சில  வாரங்கள்  தொடர்ந்து   எழுதி  – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார்.  பேராசிரியர் சி. தில்லைநாதனின்  அணிந்துரையுடனும்  எனது  முன்னுரையுடனும் அந்த  நூல்  வெளியாகியது. அவ்வேளையில்  ஞானசேகரன்  தமது  மருத்துவப்பணி  நிமித்தம் கண்டியில்   வசித்தார்.  கண்டி  முகவரியிலிருந்து  ஞானம் பதிப்பகத்தினால்   1999  மார்கழியில்   அந்த   நூல்  வெளியானது. அவுஸ்திரேலியா  வந்தவர்,   இந்தக்கங்காரு  நாட்டைப்பற்றி  மாத்திரம்   தகவல்  சேகரிக்கவில்லை.   இங்கிருந்த  எஸ்.பொ, மாத்தளை  சோமு,   முருகபூபதி,   அருண் . விஜயராணி  முதலான படைப்பாளிகள்,   நாடகக்கலைஞர்  சி. மனோகரன்  ஆகியோருடனான நேர்காணலையும்  பதிவுசெய்துகொண்டு,   சிட்னியில்   24   மணிநேரமும்   ஒலிபரப்பாகும்  இன்பத்தமிழ் வானொலி   இயக்குநர் பாலசிங்கம்   பிரபாகரனுக்கும்    நேர்காணல்  வழங்கிவிட்டு   தாயகம் திரும்பினார். ஞானசேகரன்    சந்தித்தவர்களுடனான  நேர்காணல்   தொகுப்பும், வானொலிக்கு    அவர்  வழங்கிய   பேட்டியும்    இணைந்த  புரிதலும் பகிர்தலும்   என்ற   நுலையும்  அதே  1999  ஆம்  ஆண்டு  மார்கழியில் வெளியிட்டார்.

Continue Reading →