தமிழ் ஸ்டுடியோ.காம்: சல்மா – திரையிடல்

24-09-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  MM திரையரங்கம், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சிறப்பு விருந்தினர்கள்: இயக்குனர் சமுத்திரக்கனி, கவிஞர் சல்மா சண்டான்ஸ், பெர்லின் போன்ற…

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை. 86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை. 86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளிஅண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை.. லண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன் உரையாடினேன். அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில் சமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் ஐயர் சென்னையில் காலமாகிவிட்ட எனக்குத்தெரியாத தகவலும் தந்தார். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்தில் எம்முடன் பயணித்த பலரும் விடைபெறுவது இயல்புதான்.

பத்மநாப ஐயரை நன்கு தெரிந்த தமிழகத்தில் வதியும் எங்கள் மூத்த படைப்பாளி இந்திராபார்த்தசாரதியும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தார். தமக்கு 86 வயதாகிவிட்டதாகவும், தொடர்ந்தும் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்குவதாக அவர் எழுதியிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்கு வியப்பூட்டின. பல எழுத்தாளர்கள் படைப்பு இலக்கியத்திலிலிருந்து ஒதுங்கி, முகநூல் குறிப்பாளர்களாக நோண்டிக்கொண்டிருக்கும் சூழலில் 86 வயதிலும் இந்திரா பார்த்தசாரதி எழுதுவதும் இயங்குவதும் எமக்கு முன்மாதிரியானது. அவர் பற்றிய இந்தப்பதிவை மீண்டும் வாசகர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்குவது பொருத்தமானது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 198: ‘முறிந்த பனையின்’ நினைவு தினம் செப்டம்பர் 21!

'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21! இன்று (செப்டம்பர் 21) ராஜினி திரணகமவின் நினைவு தினம். மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக அவரை வரலாறு என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும். மருத்துவத்துறைப்பேராசிரியையாகத் தான் கற்றதை தன் மண்ணின் மாணவர்களுக்குப் போதித்த அதே சமயம் , தான் பிறந்த மண்ணில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காகவும் போராடியவர் அவர். அவற்றை எந்தவிதப்பாரபட்சமுமில்லாமல் ஆவணமாக்கிப் பதிவு செய்தவர்களிலொருவர். அவர் நினைத்திருந்தால் அவரது படிப்புக்கு மேனாடொன்றில்  செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பியவர். அதுவும் மண் போர்களினால் கொந்தளித்துக்கொண்டிருந்த சமயம் திரும்பினார். அச்சூழலுக்குள் நின்று உரத்துத் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் அவர்.

அவரைக்கொன்றவர்கள் யார்? பலர் பலரைக்கூறுகின்றார்கள். என்னால் அவ்விதம் யாரையும் குறிப்பிட்டுக்கூற முடியாது. என்னிடம் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லை. அவை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் அவை நிரூபிக்கப்படாதவரையில் என்னால் யாரையும் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ராஜினி திரணகம தான் இறப்பதற்கு முன்னர் தன் மரணம் தன் மண்ணைச்சேர்ந்த ஒருவராலேயே புரியப்படும் என்று எழுதியிருக்கின்றார். அவ்விதமே நடந்தது என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

அவரைக்கொன்றவர்கள் யார் என்று தெரிந்தவர்கள் அவ்வப்போது பொதுவாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள். ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். ஆதாரங்கள் இருந்தால் நீதித்துறையினை நாடுங்கள். இவை எவற்றையும் செய்யாமல் பொதுவாகக் கூறுவதால் எந்தவிதப்பயனுமில்லை. இன்று இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் இது போன்ற யுத்தக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் அவ்வாதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அரசுக்கெதிரான யுத்தக்குற்றங்களை வலியுறுத்துவதுபோல், இவ்விதமான படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

Continue Reading →

கண்ணம்மா (மலேசியா) -கவிதைகள்!

கவிதை வாசிப்போமா?

1. கவிதை எழுத ஆசை.

எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?

வரும், நிச்சயம்
வரும்.

2. நட்பு  –

மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! –

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! -தேடி எடுத்த கவிதை இது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. இந்தக்கவிதையை எழுதியவர் ஆதிசங்கரர். இந்து சமயத்தில், ஆதிசங்கரருக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவர் இருப்பை விளக்க உருவாக்கிய தத்துவம் அத்வைதம். அவரது கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தைப்படைத்தவரும், இங்குள்ளவர்களும் ஒரே சக்தியின்  வடிவங்களே. ஜீவாத்மா (சகல உயிரினங்களும்) , பரமாத்மா (இறைவன்) இரண்டும் ஒன்றே என்று கூறுவது அத்வைதம். கருத்துமுதல்வாதம் கடவுளை வேறான தனியானதொரு சக்தியாகவும், கடவுளால் படைக்கப்பட்டதே நாம் காணும் இப்பிரபஞ்சமும் என்று கூறும். பொருள்முதல்வாதமோ நாம் காண்பது மட்டுமே உண்மை. அதற்கும் வேறாக ஒன்றுமேயில்லை என்று கூறும். ஒருவிதத்தில் மாகவி பாரதியை அத்வைதவாதி என்று கூறலாம். அவனது ‘நிற்பதுவே நடப்பதுவே’ கவிதையின் இறுதி முடிவு ‘காண்பது சக்தியாம் … இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று முடிவதைப்பார்க்கையில் அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகின்றது. அக்கூற்றின்படி காணும் பொருளும், அதனை உருவாக்கிய சக்தியும் ஒன்று. இதனைத்தானே ஆதிசங்கரரின் அத்வைதமும் கூறுகின்றது.

ஆதிசங்கரின் அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி. அவர் மேற்படி கவிதையினை ‘ஏகசுலோகி‘ என்னும் பெயரில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கின்றார்.லது  தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகின்றேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 196: பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11; அறிஞர் அண்ணா நினைவாக…;இந்தி இசை கேட்கும் நேரம் இது!

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.என் பிரியத்துக்குகந்த மகா கவிஞன் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. . எனக்குப் பிடித்த அவனது கவிதை வரிகள் சிலவற்றை அவனது நினைவாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

“மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்”

“நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்”

“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்…”

Continue Reading →

எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) கவிதைகள்!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -1. முத்தமிழ் வித்தகர் !

மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !

ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !

விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

Continue Reading →

கவிப்புயல் இனியவன் கவிதைகள்!

கவிதை படிப்போமா?1. குறுங்கவிதைகள்

1.
அவள்
ஒரே ஒருமுறை….
கண் அசைத்தாள்…..
ஆயிரம் முறை …..
கவிதை எழுதி விட்டேன்……

ஒரே ஒருமுறை …..
சிரித்தாள் நான் ….
சிதறிய தேங்காய்…
ஆகிவிட்டேன்…..!!!

2.
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ….
அதனால் தான் உனக்கு …..
காதல் வரவில்லை …..!!!

Continue Reading →

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனை

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனைஜவுளிக்கடையில் கண்கவரும்
பெண்பிள்ளை ஆடைதனை காண்கையில்
அதைவாங்கி அணிவித்து அழகுபார்க்க
ஆசைப்பட்டுவிடும் மனது .

எவருடையதாயினும் பெண்குழந்தையை
தூக்கி எடுத்துக் கொஞ்சிவிட்டுத்
திருப்பிக் கொடுக்கையில் ஒட்டிக்கொள்ளும்
பிரியங்களின் நிறங்களை பிரிப்பது சிரமமாகிறது

அக்கா அக்கா என்று சற்றே வயதுள்ள
அடுத்தவீட்டுப் பெண்குழந்தையுடன்
விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து
ஏம்ப்பா எனக்குமட்டும் அக்கா இல்லை
என்று வருந்தும் மகனிடம் காரணமில்லாத
பொய்சொல்ல வேண்டி வந்துவிடுகிறது

Continue Reading →

கவிதை: பெயரும், சாதியும்!

கவிதை: பெயரும், சாதியும்!

எலேய்…. சாதி, அசிங்கம்டா….
பேருக்கு பின்னாடி சாதி போடுரது
பெரிய அசிங்கம்டான்னு  சொன்னேன்…
இல்ல இல்ல… அதுதான் எங்க பாரம்பர்யம்…
அதுதான் எங்க குலவழக்கம்…
காலம் காலமாய் எங்களுக்கான
அடையாளம் பெயரோட
சாதி போடுறதுதான்னு
உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள…

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே…
நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்…
சரிடா தமிழ்க்காரந்தான நீயி?
உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்….
சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.
ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால்
வன்னியர் – தேவர்- கவுண்டர் – நாடார் –
ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் – கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் – ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
ஊகூம்…. இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

Continue Reading →