சிறுகதை: வேரும் விழுதுகளும்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?

போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.

‘அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!”

வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.

‘ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?”

அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.

‘என்ன சரசு?… நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?”

அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.

Continue Reading →

‘நட்பென்றால் நாம் என்போம்’ (முகநூல் பக்கம்) : எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கை வரலாறு (எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினக்கட்டுரை; மீள்பிரசுரம்)

'நட்பென்றால் நாம் என்போம்' (முகநூல் பக்கம்) : எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கை வரலாறு (எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினக்கட்டுரை; மீள்பிரசுரம்)சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading →

ஆய்வு: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்

- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யாகவும் அமையாது, அப்போதைய தமிழர்களின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. அன்றைய சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தகவமைத்து, அதற்கேற்ப வாழ்வை நல்வழியில் செலுத்தி வாழ்ந்துள்ளனர்.

மெய்ப்பாடுகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்வுகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும்.  நமது உள்ளத்தில் நிகழும் உணர்வுகளைப் புறத்தார்க்கும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடாக மிளிர்கிறது. இந்த மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி காண்போம்.

மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாகத் தொல்காப்பியர்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெயப்;பா டென்ப”                    (தொல்.மெய்:247)

என்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாடுகளும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.

நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”                 (தொல்.மெய்:248)

என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.

Continue Reading →

உலக அரசியல்: பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் முன்னணியில் லண்டன் கருத்தமர்வில் சட்ட ஆலோசகர் எஸ்.பி. ஜோகரட்னம்

‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.

பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.   திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை  அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின்  வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.

Continue Reading →

அவுஸ்திரேலியா: மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா! இலங்கையிலிருந்து ‘ஞானம்’ ஆசிரியர் ஞானசேகரன், எழுத்தாளர் மடுளுகிரியே விஜேரத்தின வருகை!

' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தனஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ‘ ஞானம்’ இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன  ஆகியோர் வருகை  தருகின்றனர்.  எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017)  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  மெல்பனில் விழா நடைபெறும் இடம்: Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபம்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic – 3170) அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக  எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.

கடந்த காலங்களில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்ட,  மீண்டும் மெல்பனில் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில்  நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட (மாநில) நகரங்களிலுமிருந்தும் சிலர் வருகைதரவுள்ளனர்.

சமீபத்தில் அல்லது முன்னர் தாம் படித்ததும்  தமக்குப்பிடித்ததுமான  ஒரு படைப்பிலக்கிய நூல் அல்லது மொழிபெயர்ப்பு, பயண இலக்கியம்  முதலான துறைகளில் எழுதப்பட்ட  ஒரு நூல் பற்றி பேசும் வகையில் வாசிப்பு அரங்கு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வாசிப்பு அரங்கிற்கு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன்  தலைமைதாங்குவார்.

Continue Reading →

உழைப்பாளர் தினக்கவிதை: மே நாள் உயிர்க்கும் நாள்!

உழைப்பாளர் தினக்கவிதை

உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!

Continue Reading →