வாசிப்பும், யோசிப்பும் 236 : சில முகநூல் பதிவுகள்…

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா‘முகநூல்’ நண்பர்களிடம்  ஒரு கேள்வி. நான் அறிந்த வரையில் பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா என்னும் நோக்கில் குறிப்பாக அவரது ‘நிற்பதுவே நடப்பதுவே’ என்னும் கவிதை கூறும் பொருளின் அடிப்படையில் 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழில் நான் எழுதிய ‘பாரதி கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா’ என்னும் கட்டுரையே முதன் முதல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. வேறு யாராவது இதே கவிதையினை , இதே நோக்கில் கட்டுடைத்துள்ளார்களா? அவ்விதம் யாராவது எழுதியிருந்தால் 1981ற்கு முன்னர் எழுதியிருக்கின்றார்களா? இந்நோக்கில் பாரதியை முதலில் அணுகியவர்கள் யார் யார் என்று அறிய ஆவலாயுள்ளேன். அறிந்திருந்தால் அறியத்தரவும். முற்கூட்டியே நன்றி பல நண்பர்களே. [என் முகநூல் நண்பர்களாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள், முனைவர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள்.. எனப்பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் நண்பர்களே உங்களிடம் கேட்கின்றேன்.]

‘பதிவுகள்’ இணைய இதழில்: பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ -வ.ந.கிரிதரன் -http://www.geotamil.com/index.php…

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல் / ஒளிப்பதிவாளர் & நடிகர் இளவரசுடன் கலந்துரையாடல்

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல்

27-05-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பலவேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை மாலை இயக்குனர் அகத்தியன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தமிழில் திரைக்கதை இயக்கத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அகத்தியன். காதல் கோட்டை திரைப்படம் வாயிலாக மாபெரும் ட்ரெண்ட் செட்டராக மாறியவர். அதன் பின்னணியை வைத்து தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வெளியானது. கோகுலத்தில் சீதை அதன் கதைக்காகவும் எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் அகத்தியனுடன், தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்கள், புதிய வகை கதை சொல்லும் யுத்திகள், திரைக்கதை அமைப்பு குறித்து நண்பர்கள் கலந்துரையாடலாம்.

Continue Reading →