பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ‘கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும் வரலாறும்’ ஒரு வரலாற்றுப் பதிகை நூல் வெளியீடு!

Continue Reading →

” புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை”

 'ஞானம்'  ஆசிரியர் தி. ஞானசேகரன் – அவுஸ்திரேலியா,  மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்  இலங்கை  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் ” ஈழத்து இலக்கியத்தின்  இன்றைய நிலை”  என்ற தலைப்பில்  நிகழ்த்திய உரையின் முழுவடிவம். ‘பதிவுகள்’ இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-


ஈழத்தில் இடம்பெற்ற  போர்காரணமாக, ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலை இருவேறு தளங்களில் இயங்கிவருவதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, ஈழத்தின் தேசிய புவியியல் மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப படைக்கப்படும் இலக்கியம். இது ஈழத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளால் படைக்கப்படுவது. மற்றது, போர்காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம். இது புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு  ஈழத்து இலக்கிய இயங்குதளங்கள் பற்றியும் இவற்றின் இன்றைய நிலை பற்றியும் விளக்குவதே இந்த உரையின் நோக்கமாகும். முதலில் புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைபற்றிக் கூறுவது இந்த உரையின் ஒட்டுமொத்தமான உட்பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.

புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது.  அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த  நாடுகளில் தமக்கு ஏற்பட்ட  துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது. புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர் இன்று தமிழ்ப் படைப்புலகில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு தமிழ்மக்களிடையே உலகளாவிய ரீதியில் மதிப்பு இருக்கிறது. தமிழகப் பத்திரிகைகள் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.

நடேசன், ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், முருகபூபதி, பார்த்திபன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம்,  தேவகாந்தன், இ. தியாகலிங்கம், கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், வி.ஜீவகுமாரன், மாத்தளை சோமு, அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன்,  இரா உதயணன், ஸ்ரீரஞ்சினி ,  இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். ஈழத்தவர்களாகிய நாம் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையிட்டு பெருமை  அடைகிறோம். இவை எம்மவர்களின் எழுத்துக்கள் எனக் கொண்டாடுகிறோம்.

Continue Reading →