படித்தோம் சொல்கின்றோம்: ” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன். அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்.

 என்றாவது ஒரு நாள் "  ---   ஹென்றி லோஸன் ஹென்றி லோசன் கீதா மதிவாணன்” புத்தாண்டின்  முன்னிரவுப்பொழுது.  வறண்ட  கோடையின் மத்தியில்   வெக்கையானதொரு  இரவு.  திசையெங்கும் திணறடிக்கும்  கும்மிருட்டு..!  காய்ந்த  ஓடைப்பாதையின் புதர்மூடிய  வரப்புகளும்  கண்ணுக்குத்தென்படாத  காரிருள். வானைக்  கருமேகமெதுவும்  சூழ்ந்திருக்கவில்லை.  வறண்ட நிலத்தின்  புழுதிப்படலமும்  தொலைதூரத்தில்  எங்கோ  எரியும் காட்டுத்தீயின்  புகையுமே  அந்த  இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன.” இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி  என்ற சிறுகதை.
யார் இந்த ஹென்றி லோசன்…?  அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ்  மாநிலத்தில்  க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர். இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம்.  இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.
இயற்கைக்கும் கோபம் வருமா..? என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.

” கோடையில் ஒருநாள் மழைவரலாம்” என்று கவிஞர்கள் பாடலாம். ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே  தொடக்கத்தில் சொன்னேன்.

150 ஆண்டுகளுக்கு  முன்னர் இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத்  தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ் வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி  மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர். இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர்.  அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர்.   பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர்.   அவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும்  பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர்.  அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத தாகத்துடன் இயங்கும்  கீதா மதிவாணன்,  கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும்  ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார். இயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது  வியப்பானது.

Continue Reading →

மரணம் மட்டுமே துயரம் அல்ல. மு.புஷ்பராஜன் எம்மிடமிருந்து விடைபெறும் போது—-

மு.புஷ்பராஜன்அசோகமித்திரன் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓவியர் கே.கிருஷ்ணராஜா  தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கவிஞர் மு.புஷ்பராஜன் இங்கு பிரித்தானியாவிலிருந்து விட்டு போய்  நிரந்தரமாக கனடாவில் வசிக்கப் போவதான செய்தியை அறிவித்த அவர் அதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். குடியுரிமை வதிவிடப் பிரச்சினை காரணாமாக, கனடாவில் வதியும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப்  பிரிந்து வாழும் புஷ்பராஜன்  எப்போதாவது ஒரு நாள் அவர்களிடம் போய் சேருவார் என்பதை நாம் எதிர்பார்த்திருந்தாலும் அந்நாள் இவ்வளவு சீக்கிரம் வந்து சேரும் என்பதினை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. இனி அவர் எம்மோடு இல்லை. எமது இலக்கிய சந்திப்புக்கள், அரசியல் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எமது ரெட்மூன் மாதாந்த திரைப்பட நிகழ்வுகள் எதிலுமே இனி இவரைப் பார்க்க முடியாது. மனதை ஏதோ ஒரு வெறுமை அப்பிக் கொண்டது. அசோகமித்திரன் மறைந்து மூன்றாவது நாள் 25.03.17 அன்று ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள  சிந்துமஹால் உணவு விடுதியின் கீழ்த்தளத்தில் ஒன்று கூடினோம். அன்றைய தினம் அங்கு மு.புஷ்பராஜன், பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கே.கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன் இவர்களுடன் தோழர்கள் வேலு, சேனன், எம்.பௌசர், கோகுலரூபன், சாந்தன், கஜன் காம்ப்ளர், செபஸ்டியன் என பத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆர்வலர்களும், அரசியல், சமூக  செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ஒரேயொரு பெண் பிரதிநிதியாக தோழர் பாரதி மட்டுமே கலந்து கொண்டார் என்பதினையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என கருதுகின்றேன்.

Continue Reading →

குளோபல் தமிழ்ச் செய்தி (மீள்பிரசுரம்) : பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.

பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார். ‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார். ‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.

‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.

‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.

அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.

Continue Reading →