வாசிப்பும், யோசிப்பும் 234 : அறிஞர் அண்ணா மற்றும் கவிஞர் கண்ணதாசன் சர்ச்சை பற்றி…; மார்க்சை நினைவு கூர்வோம்!; சற்சொரூபவதி நாதன் மறைவு!

கவிஞ்ர கண்ணதாசன்அறிஞர் அண்ணாபேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை’ என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்’ என்று ‘ம’வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் ‘அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை’ என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.

யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது.

Continue Reading →

ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு

-புலோலியூர் ஆ இரத்தினவேலோன்-கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.

புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.

Continue Reading →

கவிதை: தென்னைகளில் கள்ளெடுப்பவள்

பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென
விடியலிலும், இரவிலுமென

எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்
ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்

Continue Reading →

ஆய்வு: நிலம் – மையம் – அதிகாரம்

1
- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 – இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.

மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.

Continue Reading →