வாசிப்பும், யோசிப்பும் 236: மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!

கார்ல் மார்க்ஸ்இந்த உலகத்து மானுடர்களின் துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடத்தலே. மானுடரின் சகல துயரங்களுக்கும் அடிப்படை பொருளே. பொருள் பிரச்சினை என்பது மானுடர் தாமே தமக்குள் கட்டி அமைத்த சமுதாய அமைப்பு என்ற விளையாட்டே. இது ஒரு விதத்தில் ‘பாம்பும் ஏணியும்’ போன்றதொரு விளையாட்டே. ஏறுவதும், இறங்குவதும், ஏறுவதுமாக அமைந்த ஒரு விளையாட்டே. இந்த விளையாட்டு மானுடரின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிப்போக்கின் விளைவே. இவ்வித வர்க்கங்களாக மானுடரின் பிரிவுதனை நிலை நிறுத்தி வைப்பதற்குத் துணை போகும் முக்கிய காரணங்களாக மானுடரின் மத்தியில் காணப்படும் ஏனைய பிரிவுகளைக் (மதம், மொழி, இனம், சாதி போன்ற பல) கூறலாம்.

மானுடரின் பிரச்சினைய நன்கு உணர்ந்து மதவாதிகள் பலர் தீர்வுகள் கூறி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் தீர்வு இறுதித்தீர்வினை ஒருபோதும் அடையப்போவதில்லை. காரணம்: அவர்கள் யாருமே மானுடரின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமான வர்க்கங்களாகப் பிரிவு பட்டிருக்கும் சமுதாய அமைப்பினை அடியோடு மாற்றுவதைப்பற்றி கூறுவதில்லை. வலியுறுத்துவதில்லை.

Continue Reading →