நெய்தல் கவிதை இதழ்

வணக்கம், நெய்தல் எனும் பெயரில் கவிதை இதழ் வரவுள்ளதால் அதற்காக கவிதை,ஹைக்கூ,கவிதைகள் /கவிதை இதழ்கள்  கட்டுரை,கவிதை நூல் அறிமுகம் என அனுப்பலாம்.நூல் அறிமுகத்திற்கு இரண்டு பிரதிகள் அனுப்பவேண்டும்.நட்புடன்,…

Continue Reading →

கவிதை: குளம்!

கவிதை: குளம்!

குளம்
எனக்காக
அமைதியாக இருந்தது.
காற்றும் அப்படியே.
வானத்தில் விமானம் பறப்பிலில்லை.
பறவைகள்
எங்கோ
தூரமாய் போயிருக்கவேண்டும்.
புடவைகளின்
மணம் அருகிலுமில்லை.
குளத்தை
அப்படியே மூச்சுக்காற்றால்
உள்ளிழுத உணர்வு
ஏதோ
பல கதைகள்
கன நாளாய்ச் சொல்லியது
எவ்வித ஆர்பாட்டமுமின்றி..

Continue Reading →

நிலாரவி கவிதைகள்!

கவிதை: முகமூடி - நிலாரவி.

1. கவிதை: முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி

பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

Continue Reading →

மூன்று மூலிகை மருந்தான திரிகடுகம் கூறும் அறக் கூற்றுக்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல, சங்க மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபங்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் குறிக்கும் நாலடி வெண்பா ஒன்றையும் காண்போம்.

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுங்   கோவை பழமொழி – மாமூலம் 
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய  வாங்கீழ்க் கணக்கு.’

மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி கூறும் 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.

1. நீதி கூறும் 11 நூல்கள் – திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது,
இன்னா நாற்பது,  திரிகடுகம்,  ஆசாரக் கோவை,  சிறுபஞ்சமூலம்,  பழமொழி  நானூறு,  
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.

2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் – ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.

3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் –  களவழி நாற்பது.

இனி, மேற்கூறிய நீதி கூறும் நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்ற நூல் கூறும் செய்திகளை ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும். இந் நூலை நல்லாதனார் (நல் 10 ஆதனார்) என்னும் புலவர் இயற்றினார். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். இவர் திரிகடுகத்தில் காப்புப் பாடலைத் தவிர, நூறு (100) பாடல்களைப் பாடியுள்ளார்.  திரிகடுகம் ஸ்ரீ  திரி 10  கடுகம்.  திரி ஸ்ரீ   மூன்று.    கடுகம் ஸ்ரீ   மருந்து.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைத் தீர்ப்பன. அதேபோல், இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப் பெறும் மூன்று கருத்துக்கள் உள்ளன. அவை நோயைப் போக்கும் தன்மை கொண்டன.

Continue Reading →