வாசிப்பும், யோசிப்பும் 236 : சில முகநூல் பதிவுகள்…

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா‘முகநூல்’ நண்பர்களிடம்  ஒரு கேள்வி. நான் அறிந்த வரையில் பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா என்னும் நோக்கில் குறிப்பாக அவரது ‘நிற்பதுவே நடப்பதுவே’ என்னும் கவிதை கூறும் பொருளின் அடிப்படையில் 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழில் நான் எழுதிய ‘பாரதி கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா’ என்னும் கட்டுரையே முதன் முதல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. வேறு யாராவது இதே கவிதையினை , இதே நோக்கில் கட்டுடைத்துள்ளார்களா? அவ்விதம் யாராவது எழுதியிருந்தால் 1981ற்கு முன்னர் எழுதியிருக்கின்றார்களா? இந்நோக்கில் பாரதியை முதலில் அணுகியவர்கள் யார் யார் என்று அறிய ஆவலாயுள்ளேன். அறிந்திருந்தால் அறியத்தரவும். முற்கூட்டியே நன்றி பல நண்பர்களே. [என் முகநூல் நண்பர்களாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள், முனைவர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள்.. எனப்பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் நண்பர்களே உங்களிடம் கேட்கின்றேன்.]

‘பதிவுகள்’ இணைய இதழில்: பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ -வ.ந.கிரிதரன் -http://www.geotamil.com/index.php…

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல் / ஒளிப்பதிவாளர் & நடிகர் இளவரசுடன் கலந்துரையாடல்

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல்

27-05-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பலவேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை மாலை இயக்குனர் அகத்தியன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தமிழில் திரைக்கதை இயக்கத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அகத்தியன். காதல் கோட்டை திரைப்படம் வாயிலாக மாபெரும் ட்ரெண்ட் செட்டராக மாறியவர். அதன் பின்னணியை வைத்து தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வெளியானது. கோகுலத்தில் சீதை அதன் கதைக்காகவும் எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் அகத்தியனுடன், தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்கள், புதிய வகை கதை சொல்லும் யுத்திகள், திரைக்கதை அமைப்பு குறித்து நண்பர்கள் கலந்துரையாடலாம்.

Continue Reading →

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்
சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் – தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர்.அக்கால நிலை அது போலும்,ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

Continue Reading →

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறு

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறுஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.

எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.

ஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.

எனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன்.

Continue Reading →

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மே மாதத்தில்…. இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவர் ஒன்றுகூடல் இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவர் ஒன்றுகூடல் அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்)  குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l  வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி  சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன்  நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.

Continue Reading →

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

முள்ளிவாய்க்காலின் இறுதிக்கட்ட அவலங்களைப் புகைப்படக்கலைஞரும், எழுத்தாளருமான அமரதாஸ் அவர்கள் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கால அவலங்களை வெளிப்படுத்தும் இவ்விதமான புகைப்படங்கள் யுத்தத்தின் அவலங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகள்.  நன்றி:  புகைப்பட உதவி – குளோபல்தமிழ் நியூஸ் – http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132287/language/ta-IN/article.aspx

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

Continue Reading →

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Continue Reading →

மே18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் -அவுஸ்திரேலியா

வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள “மே18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்” பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.

தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மே மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 7 மணிக்கு, Wentworthville Redgum Hall மண்டபத்திலும், பேர்த் நகரில் மாலை 7.15 மணிக்கு, Mandogalup ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டபத்திலும் முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய  பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2 009யில் எம் தமிழ்மக்கள் மீது இடம்பெற்ற அப்பேரவலத்தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம். ! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 235 (அன்னையர்தினச்சிந்தனை) – தாயே! உன் நினைவாக…..; மோடியின் இலங்கைப் பயணமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும், மே மாதமும், மகிந்த பற்றிச் சில சிந்தனைகள்…

அம்மா: நவரத்தினம் டீச்சர்.அம்மாவை (‘நவரத்தினம் டீச்சர்’) நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.

ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.

அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

Continue Reading →

கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.

Continue Reading →