கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்…

சொல்லவிந்து, ஊர் துஞ்சும் நள்யாமப்பொழுதுகளில்விசும்பு நீந்தி ஆங்குநீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்வனப்பில் எனை மறக்கும்தருணங்களில்,இராப்பட்சிகள் குறிப்பாகஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.கூரிய அவைதம் பெருங்கண்விரித்து இரை தேடி இரவு முழுக்கப்பறந்து திரியும்.ஆந்தைகளுக்குப் போட்டியாகஅவ்வப்போது…

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்)

ஆய்வுக் கட்டுரைகள்.- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -நான்கு கால்களையுடைய  விலங்கு நிலையிலிருந்து இரண்டு கால்களாய் மாறிய, உற்பத்திக் கருவிகளை உருவாக்கத் தொடங்கிய மனித சமுதாயம் வேரூன்றிய காலந்தொட்டு, சிறு சிறு குழுக்களுக்கான போராட்டம் தொடங்கி, இன்றைய அறிவியல் வளர்ச்சிப் பெற்ற யுகத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அதிகாரத்திலுள்ள நாடுகள் ஏனைய நாடுகளின் மீது போர் தொடுப்பது வரை, பல்வேறு விதமான மாற்றங்களையும், அழிவுகளையும் இப்புவியுலகில் வாழும் மனித இனம் சந்தித்துக் கொண்டு வந்திருப்பதே வரலாறு.

புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் இன குழுக்களிடையே ஓயாது  உணவிற்கான போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்துள்ளது. ஒட்டுறவு அடிப்படையிலான உற்பத்தி உறவுகள் பெருகி, தனியார் உடைமை முறை தோன்றி வர்க்கங்களின் தோற்றுவாய்களும் உருவாயின. அவை அடிமையுடைமை அமைப்பை நிறுவி, அரசுத் தோற்றம் உருவாக வழிகோலியது.

வர்க்கச் சமுதாயத்திற்குப் பின்னர் துவக்கத்தில் போர் முறையானது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் மற்றும் இரு வேறு நிலப்பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் போர் புரிந்து வந்தனர். நவீன வளர்ச்சியெனும் யுகமான முதலாம் உலகப் போர் (கி.பி. 1911 – 1915 வரை) வரை, போரில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையும் (சுமார் 85% பேர்) போர்ப்படைப் பிரிவினரே. ஆனால், இரண்டாம் உலகப் போரில்  (கி.பி. 1939 – 1945) போர்ப் படைப் பிரிவினரின் அளவிற்கு ஒப்ப மக்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று ஆயுத எந்திரங்களோடு போர்கள் நிகழ்ந்து வருகிறது.

தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

Continue Reading →

நிகழ்வு: இயற்கையோடு நாம் 2017 (சென்னை)

நிகழ்வுகள் கன்டு களிப்போமா?வணக்கம்! “காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்  “இயற்கையோடு நாம் – 2017”

8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)
இடம்: எம். ஜி. ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.
தொடர்புக்கு: 89399-67179 / 9789-00-9666

சிறப்பு கூறுகள்:

1. கருத்தரங்கு:
இயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading →